ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் முறையில் மறைமுக ஏலம்.. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பருத்தி கொள்முதல்..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் முறையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில்  ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 250குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறையில் இந்தாண்டு 4ஆயிரத்து 961 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதலுக்காக கடந்த வாரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் திறக்கப்பட்டன. Source link

மேகேதாட்டு அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழுவிவரம்

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எந்த விவாதத்தையும் நடத்தக் கூடாது என ஜல்சக்தி அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதி தங்களிடம் அளித்த கோரிக்கை மனுவில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்கு … Read more

தமிழகத்தில் அடுத்தடுத்து 2 லாக்கப் மரணங்கள்.. அண்ணாமலை பரபரப்பு ட்வீட்.!!

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் நடந்த ஜெயக்குமார், பென்னிக்ஸின் லாக் அப் மரணம் தமிழ் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையான கண்டனங்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்தது.  மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என வாக்குறுதி அளித்து. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக ஆட்சியிலும் லாக் அப் மரணங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஒரு … Read more

18 வயதை கடந்தவர்களில் தமிழகத்தில் 94.31% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி – சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் 18 வயதை கடந்த 94.31 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி கடந்த 2021 ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. சுகாதார, முன்களப் பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் … Read more

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. ஒருவர் படுகாயம்..!

இருசக்கர வாகனம் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது குறித்து காவல்துறையினர. நாகப்படடினம் மாவட்டம், கொளப்பாடு பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், சேகர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடி காட்சிகள் இணையத்தில் வைரலாகி … Read more

திமுகவை கடுமையாக எதிர்க்கும் மதுரை ஆதீனத்தை எம்.பி.யாக்க பாஜக திட்டம்

மதுரை: திமுகவை கடுமையாக எதிர்த்துவரும் மதுரை ஆதீனத்தை எம்பியாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம் மடம். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மடம் இது. மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். அவர் கடந்தாண்டு உடல்நலக்குறைவால் மறைந்தார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானாக இருந்த சுந்தரமூர்த்தி தம்பிரான், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் … Read more

வணிகர் சங்க நிர்வாகி கொலை ; கடைகளை அடைத்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் அப்பகுதி வணிகர்களை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த வணிகர் சங்க நிர்வாகி சிகிச்சைப் பலனின்றி இறந்ததை அடுத்து கரந்தை பகுதியில் இருநூறுக்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையான ரவுடி கும்பல் ஒன்று கடந்த 9-ம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் மின் வெட்டைப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள மளிகை கடை, மருந்துக் கடை என கடை கடையாக … Read more

#BREAKING || போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு.!

டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் இடது விலா பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.  காவலர்கள் தள்ளிவிட்டதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, … Read more

தேன் மிட்டாய், எள்ளு மிட்டாய்களுடன் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு..

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டன் ராமேஸ்வரத்தில் பாரம்பரிய இனிப்புகளை கொடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர். மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை யானை மூலம் ஆசிர்வாதம் செய்து மலர் தூவி ஆசிரியர்கள் வரவேற்றனர்.. தேனி மாவட்டம் பாலாறு பட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில், மாணவர்களுக்கு பரிவட்டம் கட்டி, சந்தனம் குங்குமம் வைத்து … Read more

கல்விதான் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் – ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் அறிவுரை

திருவள்ளூர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், மாணவர்களின் கற்றலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளியை குறைக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட … Read more