சிவகங்கையில் உலக சாதனைக்கு தடை விதித்த போலீசார்!

சிவகங்கை மாவட்டத்தில் இலங்கை பிரமுகர் ஒருவர் குழிக்குள் அமர்ந்து மேலே தீயிட்டு உயிரை பணயம் வைத்து தியானம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி காவல்துறையின் உரிய அனுமதி பெறாததால் தடுத்து நிறுத்தப்பட்டது. சோழன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் காமராஜர் காலனி அருகே இலங்கையை சேர்ந்த மொஹமத் முசாதிக் என்பவர் தரையில் குழி அமைத்து உள்ளே அமர்ந்து மேலே பலகையால் மூடி அதற்கு மேல் விறகுகளை அடுக்கி அதில் தீயிட்டு உள்ளேயே  ஒன்றரை மணி நேரம் … Read more

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு இன்று தொடங்குகிறது என்று அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஏப்.3-ம் தேதி (இன்று) ரமலான் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் நேற்றுவெளியிட்ட அறிவிப்பில், ‘‘ரமலான்மாத பிறை ஏப்.2-ம் தேதி (நேற்று)தென்பட்டதால், 3-ம் தேதி (இன்று)முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது’’ என்று … Read more

திருவாரூர்: மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி – இரு பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

கைதியை தப்பிக்க விட்ட இரு பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். பேரளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சாராயம் விற்றதாக கஸ்தூரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவாரூர் பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு வயிற்றுவலி உள்ளதாக கஸ்தூரி கூறியுள்ளார். இதையடுத்து பேரளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் காவலர்கள் பாதுகாப்பில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி … Read more

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த திமுக அலுவலக திறப்பு நிகழ்ச்சி

சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற தி.மு.க அலுவலகம் திறப்பு விழா, எதிர்க்கட்சியில் அமளி நிலவிய நேரத்திலும் பல பாஜக அல்லாத தலைவர்களை ஒன்றிணைத்தது. அவை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் பாஜக அரசை எதிர்த்து போராட வேண்டும் என்பதை அறிவுறுத்தின. அதில், காங்கிரஸ் மட்டும் பெரியளவில் விருப்பம் காட்டாமல் தனித்து நின்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா, … Read more

122 ஆண்டுகளில் இல்லாத.. வாட்டி வதைக்கும் வெயில்.!

இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெயிலின் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. குறிப்பாக ஈரோடு, மதுரை, திருச்சி, கரூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்குப் … Read more

வந்தவாசியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கம்பிகள் சாலையில் உரசிக்கொண்டு நெருப்பு பொறி பறக்கும் அளவிற்கு சென்ற லாரியால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆபத்தை விளைவிக்கும் வகையில் கம்பிகள் சாலையில் உரசிக்கொண்டு நெருப்பு பொறி பறக்கும் அளவிற்கு சென்ற லாரியால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மழையூர் கிராம பகுதியில் இருந்து தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு லாரி ஒன்று இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பின்னால் நீண்டு கொண்டு இருந்த கம்பிகள் சாலையில் உரசிக் கொண்டு சென்றதால் நெருப்பு பொறி பறந்தவாறு நீண்ட தூரம் சென்றது. இதனை அறியாமல் ஓட்டுனரும் லாரியினை … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புசென்னையில் உள்ள பாஜக மாநிலதலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன், அண்ணாமலைக்கு கொலைமிரட்டல் விடுத்த நெல்லையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப் பட்டார். தமிழகத்தில் திமுகவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துவருகிறார். இதனால், அண்ணாமலைக்கு இருக்கக் கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை மத்திய நுண்ணறிவு பிரிவினர் ஏற்கெனவே மத்திய … Read more

சீரமைக்கப்படும் சமத்துவபுரங்கள்… அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்களில் 14,880 வீடுகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது சமத்துவபுரங்கள் அவல நிலையில் இருப்பதாகவும், அவை சீரமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சமத்துவபுரங்களில் உட்கட்டமைப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை எனக்கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது ரூ 50.04 கோடி திட்ட மதிப்பீட்டில் பெரியார் சிலை பராமரிப்பு, தெரு விளக்கு, சாலை வசதி, நூலகம் … Read more

Tamil News Today Live: தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கைப் படை

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து ரூ.108.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ.99.04க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் பெட்ரோல் ரூ.7.56-ம், டீசல் ரூ.7.61-ம் அதிகரித்துள்ளது. Tamilnadu updates: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை சிறைப் பிடித்தது இலங்கை … Read more