பொரியல், குழம்பு, கூட்டு… 2 நிமிடத்தில் வாழைப் பூ இப்படி கிளீன் பண்ணுங்க!

Tamil Lifestyle Update : யானை இருந்தாலும் பலன் இறந்தாலும் பலன் என்று சொல்வார்கள். அதேபோல் தாவரங்களில் வாழை. இருந்தாலும் பலவகையில் நன்மை தரும். இறந்தாலும் பல நன்மைகளை கொடுக்கும். வாழையில்உள்ள அனைத்து பாகங்களும் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மை அளிக்கும் வாழைக்காய், வாழைப்பூ, வாழைப்பழம், வாழைத்தண்டு உள்ளிட்பல ஆரோக்கியமான உணவுகள் வாழையில் இருந்து நமக்கு கிடைக்கிறது. இதில் வாழைத்தண்டு, வாழைக்காய் ஆகியவற்றை சமைப்பதற்கு நமக்கு எளிமையாக இருந்தாலும் வாழைப்பூ நம் பொறுமையை மிகவும் சோதிக்கும் … Read more

தமிழ்த் தாத்தா உ.வே.சா. சிலைக்கு அரசு மரியாதை.!

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை காலை தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதைய்யரின் சிறப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆணடும் அவரின் பிறந்த நாளன்று அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் மரியாதை செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவரின் 168-வது பிறந்த … Read more

ரஜினியின் சிலையை களிமண்ணில் வடிவமைத்த இளைஞருக்கு நடிகர் ரஜினி பாராட்டு <!– ரஜினியின் சிலையை களிமண்ணில் வடிவமைத்த இளைஞருக்கு நடிகர் ர… –>

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே களிமண்ணால் தனது சிலையை வடிவமைத்த இளைஞருக்கு, நடிகர் ரஜினி ஆடியோ மெசெஜ் அனுப்பி பாராட்டு தெரிவித்துள்ளர். மண்பாண்டக் கலைஞரும் ரஜினியின் தீவிர ரசிகருமான, 21 வயது இளைஞர் ரஞ்சித், ரஜினியின் விதவிதமான உருவங்களை களிமண்ணால் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன், தான் செய்த ரஜினி சிலையுடன் சென்னை சென்ற ரஞ்சித், ரஜினியை நேரில் சந்தித்து சிலையை அவரிடம் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், ரஜினியின் மார்பளவு சிலையை வடித்த ரஞ்சித், … Read more

பிப்ரவரி 18: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,42,929 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் … Read more

எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சை பொய்யர் – ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

“தான் ஒரு பச்சை பொய்யர் என்பதை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நிரூபித்திருக்கிறார்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான், 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல் எப்படி நேர்மையாக நடத்தப்பட்டதோ, அதேபோல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும். கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி … Read more

அரசியலில் இல்லாத துர்கா ஸ்டாலின் பற்றி சீமான் பேசலாமா? திமுகவினர் கோபம்

tamil nadu NTK Seeman Controversial Speech :தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது கட்சியின் வேட்பாளர்கள் 60 பேரை திமுக கடத்திவிட்டதாக நாம் தமிழகர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தீவிர பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் … Read more

குறுக்கு வழியில் வெற்றி பெற திமுக முயற்சி! ஜெயக்குமார் குற்றச்சாட்டு.!

ரவுடிகளை வைத்து குறுக்கு வழியில் வெற்றி பெற திமுக முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளர். திமுக அரசின் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்,பென்ஜமின் மற்றும்  சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர். பாபு முருகவேல் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்,  வாக்கு எண்ணிக்கை அன்று திமுக அரசு முழுமையாக தோல்வியை சந்திக்கும் என்ற அடிப்படையில் எப்படியாவது அதிமுக -வின் … Read more

மகள்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு <!– மகள்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் த… –>

கடலூரில் பெற்ற மகள்களை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் முட்டம் பெரிய காலனியைச் சேர்ந்த சசிகலா கடந்த 2018-ஆம் ஆண்டு தனது 4 வயது மற்றும் 3 மாத மகள்களை கொலை செய்ததுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2-ஆவது மகள் பிறந்தது முதல் சசிகலாவுக்கு எது சாப்பிட்டாலும் வாந்தி வந்துக்கொண்டே இருந்ததாகவும், எவ்வளவு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காததால் தற்கொலை செய்ய … Read more

பிப்ரவரி 18: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,42,929 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலம் – ஓஎன்ஜிசி நிறுவனம் மட்டுமே விண்ணப்பம்

விழுப்புரம் முதல் கடலூர் வரை ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மட்டும் விண்ணப்பித்துள்ளது. மத்திய எரிசக்தி இயக்குநரகம் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 8 இடங்களை தேர்வு செய்து சர்வதேச அளவிலான ஏலத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், 7 ஆவது சுற்றில் விழுப்புரம் முதல் கடலூர் வரையிலான ஆழ்கடல் பகுதிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இதற்கு மற்ற நிறுவனங்கள் ஏதும் விருப்பம் தெரிவிக்காத நிலையில், ஓஎன்ஜிசி மட்டும் விண்ணப்பித்துள்ளது. இதனால் நேரடியாக ஓஎன்ஜிசி நிறுவனமே … Read more