ஓ.ஐ.சி குழுவை இந்தியா சாடியது ஏன்?

கர்நாடகாவில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறப்பட்ட விவகாரத்தில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்துக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, இந்த குழு வகுப்பு மனப்பான்மை மற்றும் போலியான நலன்களால் கடத்தப்பட்டது என்று இந்தியா சாடியது – இது பாகிஸ்தானைப் பற்றிய மெல்லிய குறிப்பாக கருதப்படுகிறது. “முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்யும் அதே வேளையில் அவர்களின் வாழ்க்கை முறையைப் பாதுகாக்கவும்” இந்தியாவை இஸ்லாமிய … Read more

அரபி குத்து – சிலுவை அடையாளம் – பீஸ்ட் ஜோசப் விஜய் – அர்ஜுன் சம்பத் என்ன சொன்னார் தெரியுமா?

அரபி குத்து பாடலில் விஜய் சிலுவை அணிந்து இருப்பது வரவேற்க்கதக்கது என இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ்   தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் இந்த படத்தின் அரபி குத்து பாடல் வெளியானது. இந்த பாடலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த பாடலில் விஜய் சிலுவையுடன் இருப்பதாக சிலர் சர்ச்சையை கிளப்பினர். இந்நிலையில், இந்து மக்கள் கட்சியி அந்த பாடலில் … Read more

பிற மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு – முதலமைச்சர் அறிவிப்பு <!– பிற மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு – மு… –>

சென்னையைப் போலவே தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 800 அரங்குகள் கொண்ட 45 வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேடையில் பேசிய அவர், உயரிய எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் வீடு கட்டித்தரப்படும் என்றார். தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒன்றரை லட்சம் புத்தகங்களை வெளிநாடுகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்த முதலமைச்சர், தான் எழுதியுள்ள “உங்களின் ஒருவன்” என்ற … Read more

பிப்ரவரி 16: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,40,531 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் … Read more

'திமுக ஆட்சி உள்ளவரை மக்கள் மனநிறைவு அடையமாட்டார்கள்’-திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசின் சாலைத்திட்டங்கள் அனைத்தும் முடங்கின; திமுக ஆட்சியில் உள்ளவரை மக்கள் மன நிறைவு அடையமாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பேரூராட்சி பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “செய்யப்போவதில்லை என்பதால் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை திமுகவினர் அளித்தனர் என்றார். நீட் தேர்வு தொடர்பான விவாதித்தில் மக்கள் நீதிபதியாக இருந்து … Read more

சிங்கம் படத்தில் பார்த்த தேரிக்காடு: இதன் மகத்துவம் தெரியுமா?

சூர்யாவின் சிங்கம் படத்தில் பார்த்த சிவப்பு நிறத்தில் ஆன மணல் மேடு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தூத்துக்குடியில் உள்ள தேரிக்காடுதான். இந்த தேரிக்காட்டின் மகத்துவம் என்ன தெரியுமா? தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்காடு தமிழகத்தின் ஒரே செம்மண் மணல் மேடு பாலைவனம் என அழைக்கப்படுகிறது. பூமி வெவ்வேறு நிலப்பரப்புகளால் ஆனது. நிலப்பரப்பு மனித வாழ்க்கையை வடிவமைக்கிறது என்றால் அது மிகையல்ல. விருதுநகர் மாவட்டம், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் கரிசல் நிலம் என்றால் … Read more

வகுப்பிற்கு வராததை கண்டித்த ஆசிரியர்.. மாணவன் வெறிச்செயல்..!

வகுப்பிற்கு முறையாக வராததை கண்டித்த ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், அமராவதி பகுதியில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராஜா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், படித்து வந்த மாணவன் ஒருவன் சரிவர பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனை ஆசிரியர் ராஜா கண்டித்துள்ளார்.இதனால், கோபமடைந்த அந்த மாணவன் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் இருந்த ஆசிரியரை திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து … Read more

"பீப்" பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்கு ரத்து <!– &quot;பீப்&quot; பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்க… –>

“பீப்” பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. நடிகர் சிம்பு கடந்த 2015ம் ஆண்டு இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. அப்பாடலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்திருப்பதாக சிம்பு, அனிருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டன. கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த … Read more

மக்களின் வறுமையை தேர்தலில் சாதகமாக பயன்படுத்துகின்றனர்: பிரேமலதா விஜயகாந்த் தாக்கு

“சட்டப்பேரவை தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குளைப் பெற்று ஏமாற்றிவிட்டனர்” என திமுக மீது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். கோவையில் தேமுதிக சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குறிச்சி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசியது: “கோவையில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய அமைச்சரும் ரூ.2 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என பணத்தை வழங்குவதில்தான் போட்டிபோட்டு வருகின்றனர். மக்களுக்கோ, கோவைக்கோ ஏதேனும் நல்லது செய்வார்களா என்று சிந்தித்தால், … Read more

மதுரை: சிட்கோ தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து-பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பைப்கள் சேதம்

மதுரை வரிச்சியூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து சேதமடைந்தன.  மதுரை மாவட்டம் வரிச்சியூரை அடுத்துள்ள உறங்கான்பட்டி சிட்கோ தொழிற்பேட்டை பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் துவங்கி ஆலை முழுவதும் பரவியது. பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறியதால் பெரும் … Read more