மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் – ஒருவர் பலி

மத்திய உக்ரைனிய நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின. இதில் மருத்துவமனை கட்டிடம் தீப்பற்றியதோடு, சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இடுபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்குள் சிக்கிய 15க்கும் மேற்பட்டோரை ரத்தக் காயங்களுடன் மீட்புக் குழுவினர் மீட்டனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி, ரஷ்ய படைகள், மீண்டும் தாங்கள் மனிதாபிமானம் அற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளதாக சாடியுள்ளார். … Read more

ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களை பட்டியலிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது. மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு … Read more

தெரியாமல் சிக்கிய முதியவர்… சுத்துப்போட்ட 40 முதலைகள் – சாகும் வரை கொடூரம்

முதலைப் பண்ணையில் அதன் கூண்டில் இருந்து முட்டையை எடுக்கச் சென்றபோது, கூண்டில் சிக்கி 40 முதலைகளுக்கு 72 வயதான முதியவர் இரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: முதல் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

டோக்கியோ, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக ஜப்பானின் ஒசாகா மாகானத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பானின் டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் புதிய ஒப்பந்தம் முதல் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. திருப்போரூருல் உள்ள டைசல் நிறுவனத்தில் ரூ.83 கோடி முதலீட்டில் ஏர்பேக் இன்புலேட்டர் தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 53 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒசாகா … Read more

உத்தரகாண்ட் எல்லையில் சீனாவின் சதி.. தீவிரமாக கண்காணிக்கும் ராணுவம்!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான மோதல் மற்றும் தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, சீன இராணுவம் அதாவது மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) இப்போது இந்திய எல்லைக்கு அருகில் தனது கால்களை பரப்ப முயற்சிக்கிறது. 

அபாயம்.. அணு ஆயுதங்கள் குவிப்பு.. ரஷ்யாவின் மாஸ்டர் மூவ்.. பேரழிவுக்கு ரெடி ஆகுங்க.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் உக்ரைனின் எல்லை நாடான பெலாரஸில் ரஷ்யா அணு ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இன்னும் போர் நிறைவடவதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் போரின் தன்மை மாறிக் கொண்டே செல்கிறது. இந்த போருக்கு மூலக்காரணம் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தான் என ரஷ்யா கூறிவருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தலைமை வகைக்கும் … Read more

22 வயதில் சிறையில் தள்ளப்பட்டவர் 55 ஆவது வயதில் “குற்றமற்றவர்” என விடுதலை.. 27 ஆண்டுகளுக்கு பிறகு மற்றொருவர் அளித்த வாக்குமூலத்தால் திருப்பம்..!

அமெரிக்காவில் கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த நபரை 33 ஆண்டுகள் கழித்து குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 1990 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கட்டிட தொழிலாளியான டேனியல் சல்டானா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது 22 வயதான டேனியலுக்கு 45 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கின் குற்றவாளி ஒருவர், பரோல் கோரி விண்ணப்பித்த போது, அந்த சம்பவம் … Read more

இம்ரான் கான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம்! விசாரணைக்கு வெளியாருக்கு அனுமதி இருக்காது

Imran Khan Supports Handedover To Miltary: இம்ரான் கான் ஆதரவு போராட்டக்காரர்கள் 33 பேரை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒப்படைத்தது

250 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு.. 2,500 பேர் வெளியேற்றம்.. போலந்தில் பதற்றம்..!

இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலந்தின் ரோக்ஸ்வா நகரிலிருந்து இரண்டாயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டனர். அங்குள்ள ரயில்வே பாலம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது ஜெர்மன் விமானப்படையால் வீசப்பட்ட இந்த 250 கிலோ குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுனர்கள் அதனை செயலிழக்கச் செய்ய வேறொரு பகுதிக்கு எடுத்து சென்றனர். முன்னதாக அப்பகுதியில் வசித்த 2,500 பேர் பேருந்துகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். Source link

உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்: இந்தியா..?

நியூயார்க்: 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 103-ஆவது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்: ஜிம்பாப்வே வெனிசுலா சிரியா லெபனான் சூடான் அர்ஜெண்டினா ஏமன் உக்ரைன் … Read more