வறுமை குறித்த வீடியோக்கள் இணையத்தில் அகற்றுது சீனா| China removes videos about poverty from the Internet

பீஜிங்,-சீனாவில் நிலவும் ஏழ்மை, வறுமை குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், ‘வீடியோ’க்களை அந்நாட்டு அரசு அகற்றிவிடுவதாக, ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. சீனாவில் பணி ஓய்வு பெற்ற பெண் ஒருவர், தன் சமூக வலைதளத்தில், சமீபத்தில் ‘வீடியோ’ ஒன்றை பதிவிட்டார். இதில், ஓய்வூதியமாக தனக்கு கிடைக்கும் 100 சீன யுவானில் என்னென்ன மளிகை பொருட்கள் வாங்க முடியும் என்றும், அதில் உள்ள சிரமம் குறித்தும் பேசியிருந்தார். இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, சீன … Read more

இங்கிலாந்து கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் மகன்

லண்டன், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பா சுப்ரமணியன். அவர் எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்த போது குத்தாலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரது மூத்த மகன் வெற்றியழகன் என்பவர் பொறியியல் பட்டதாரி ஆவார். லண்டனில் பணிபுரிந்து வரும் அவர் கடந்த 15 வருடங்களாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இங்கிலாந்து குடியுரிமை பெற்ற … Read more

“இளமை காலத்தில் நிதி நெருக்கடியால் கடும் அவதி” – மனம் திறந்த உலக பெருங்கோடீஸ்வரர் எலான் மஸ்க்

இளமை காலத்தில் நிதி நெருக்கடியால் கடும் சிரமத்திற்கு உள்ளானதாக உலக பெருங்கோடீஸ்வரர் எலான் மஸ்க் மனம் திறந்துள்ளார். எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க்குக்கு சொந்தமாக ஆப்ரிக்காவில் மரகதச் சுரங்கம் இருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும் இணையத்தில் கதைகள் உலாவருகின்றன. இது குறித்து டுவிட்டர் பயணாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், பரம்பரை சொத்து என எதுவும் தனக்கு கிடைக்கவில்லை எனவும், வியாபாரத்தில் நஷ்டமடைந்த தனது … Read more

கொழும்பு – சென்னை விமானம் தாமதம்.. காரணம் என்ன.?

கொழும்பு, இலங்கை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் இருந்த இந்திய அதிகாரி கைது செய்யப்பட்டதால், சென்னை வரும் விமானம் தாமதமானது. கொழும்பு கட்டுநாயக்காவில் இருந்து சென்னை நோக்கி விமானம் புறப்பட இருந்தது. இந்திய விமானத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தனது துப்பாக்கியுடன், விமான நிலைய பயணிகள் முனையத்திற்கு வந்துள்ளார். அவரை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து, இருநாட்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தூதரகங்கள் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. … Read more

ஜெர்மனியில் சிதிலமடைந்த பழமையான பாலம் பாதுகாப்புடன் வெடிவைத்து தகர்ப்பு

ஜெர்மனியில் பழமையான பாலம் ஒன்று மிகுந்த பாதுகாப்புடன் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. டார்ட்மண்ட் – அஸன்பார்க் இடையிலான A45 நெடுஞ்சாலையில் லீடன்ஷிட் பகுதியில் 1968 – ம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. 453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்காக 150 கிலோ வெடிபொருட்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம் தகர்க்கப்பட்டதை பொதுமக்கள் பலர் பார்வையிட்டதுடன் தங்களின் செல்போனில் பதிவு செய்தனர். … Read more

ஆப்கனில் பெருவழி பாதை திட்டம் சீனா – பாக்., – தலிபான் ஒப்புதல்| China-Pakistan highway project in Afghanistan approved by Taliban

இஸ்லாமாபாத்-பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆப்கானிஸ்தானில், சீனாவின் கனவு திட்டமான, பெருவழி பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கு, தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, ௨௦௨௧ல் அமெரிக்க படைகள் விலகின. இதைத் தொடர்ந்து, தலிபான் பயங்கரவாத அமைப்பு, ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றியது. தலிபான் அரசை, ஐ.நா., உட்பட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் மட்டுமே, தலிபான் அரசுடன் இணைந்து செயல்படுகின்றன. இருப்பினும், இந்நாடுகளும் தலிபான் அரசை … Read more

மகளைத் தீர்த்துக் கட்ட கொடூரத் திட்டம்… சொத்துகளை சுருட்ட தாய் போட்ட பிளான்

மாஸ்கோ, சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு பெற்றோரை வீட்டை விட்டு துரத்தும் பிள்ளைகளைத் தான் பார்த்திருப்போம். ஆனால் ரஷியாவில் தனது மகளிடம் இருந்து சொத்தை அபகரிக்க, மகளையே ஆள் வைத்து தீர்த்துக் கட்ட முயன்றுள்ளார் தாய் ஒருவர். கிராஸ் நோயார்ஸ்கைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் தனது 49 வயது மகளைக் கொல்ல ஆளை நியமித்துள்ளார். கொலை செய்ய வந்த நபரோ, இந்த அருமைத் தாயைப் பற்றிய அனைத்து தகவல்களையும் காவல்துறையில் ஒப்புவிக்கவே, போலீசார் தகுந்த … Read more

மோசமான வானிலை – தரையிறங்க முடியாமல் தவறுதலாக இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானம்

லாகூரில் தரையிறங்க வேண்டிய பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று கனமழை காரணமாக தவறுதலாக இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த நிலையில், அதிகாரிகளின் அனுமதி பெற்று மாற்றுப்பாதையில் பத்திரமாக பாகிஸ்தான் சென்றடைந்தது. கடந்த 4ஆம் தேதி PK248 என்ற விமானம் ஓமனிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு சென்றுகொண்டிருந்தது. லாகூரை நெருங்கும்போது கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் போன நிலையில், முல்தான் விமான நிலையத்தில் தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையிலிருந்து உத்தரவு சென்றுள்ளது. மோசமான வானிலையால் விமானி பாதையைத் தவறவிட்ட நிலையில், விமானம் … Read more

காங்கோவில் வெள்ளப்பெருக்கு 200 பேர் பரிதாபமாக உயிரிழப்பு| 200 people tragically killed in floods in Congo

கலேஹே,-காங்கோவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் மாயமாகிஉள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்து வரும் கன மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கிவு ஏரி உடைந்து ஊருக்குள் பாய்ந்தது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கால் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதுவரை, 203 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் மாயமாகிஉள்ளதாகவும் தேசிய மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணி … Read more