'ஒசாமா பின்லேடனை கொண்டாடும் பாகிஸ்தான்' – அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி!

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் நாட்டிற்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் காட்டமாக பதிலடி கொடுத்து உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை, அந்த கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாதத்தின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இந்தியா பரிசாக அளித்த மார்பளவு மகாத்மா காந்தி … Read more

Cat Bite : பூனை கடித்தால் வந்த ஆபத்து… கதரும் குடும்பம் – கவனமா இருங்க!

தற்போதெல்லாம் டேட்டிங் போவதற்கு ஒரு ஆண் பெண்ணிடமோ, ஒரு பெண் ஆணிடமோ கேட்கும் கேள்விகளில் ஒன்று, உங்களுக்கு நாய் பிடிக்குமா அல்லது பூனை பிடிக்குமா (Are u a cat person or Dog person?) என்பதாகவே இருக்கும். செல்லப்பிராணிகள் வளர்ப்பில், முன்பு நாய்களே அதிகம் ஆதிகம் செலுத்திவந்த நிலையில், தற்போது பூனையும் அதிகமாகிவிட்டது.  பூனைகளை கொஞ்சுவதும், அதன் சேட்டைகளை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றுவது என பூனை மீதான ஈர்ப்பு அதிகமாகியுள்ளது. ஆனால், இங்கு ஒரு … Read more

‘சோயுஸ்’ விண்கலத்தில் ‘கூலன்ட்’ கசிவு.. ரஷ்ய விண்வெளி வீரர்கள் திட்டமிட்டிருந்த நடைபயணம் ரத்து..!

விண்கலத்தில் வெப்பத்தை தணிக்கும் கூலன்ட்டில் ஏற்பட்ட கசிவால், ரஷ்ய விண்வெளி வீரர்கள் விண்ணில் திட்டமிட்டிருந்த நடைபயணம் ரத்து செய்யப்பட்டது. 2 மாதங்களுக்கு முன், சர்வதேச விண்வெளி நிலையம் வந்தடைந்த சோயுஸ் MS-22 என்ற அந்த விண்கலத்திலின் பின்புறத்திலிருந்து, இன்று காலை வெள்ளைநிறத் துகள்கள் வெளியேறத் தொடங்கின. விண்கலத்தின் மின்சார அமைப்புகளின் வெப்பத்தை தணிக்கும் கூலண்டில் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனால் விண்வெளி வீரர்களுக்கு எவ்வித ஆபத்துமில்லை என்றும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஈரான் கால்பந்து வீரர் அமீர்

தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது, கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கால்பந்து வீரர்களின் சர்வதேச … Read more

முதல் இன்னிங்சில் இந்தியா 404 ரன் குவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சாட்டோகிராமில் முதல் டெஸ்ட் துவங்கியது. ‛டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல், ‛பேட்டிங்கை’ தேர்வு செய்தார். அதன்படி முதல்நாளான நேற்று (டிச.,14) இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் … Read more

ஒசாமாவுக்கு புகலிடம் கொடுத்தவர்கள் ஐ.நா.வில் பிரசங்கம் செய்ய தகுதியில்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க்: ஒசாமா பின் லேடனுக்கு புகலிடமாக இருந்த பாகிஸ்தான் ஐ.நா. அவையில் காஷ்மீர் விவகாரம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பிரசங்கம் செய்யத் தகுதி இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் … Read more

ஒசாமாவை கொண்டாடும் பாகிஸ்தான்: ஜெய்சங்கர் தாக்கு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தியா பரிசாக அளித்த மகாத்மா காந்தி சிலையை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் பாதுகாப்பு குழு கவுன்சில் கூட்டத்தில், ‛ஒசாமாவை பாகிஸ்தான் நற்சான்று கொடுத்து கொண்டாடி வருவதாக’ ஜெய்சங்கர் பாக்.,க்கு பதிலடி கொடுத்தார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை, அந்த கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். … Read more

டென்மார்க் | 4 ஆண்டுகளுக்கு முன்னர் விரலை கடித்த பூனை: சதையை உண்ணும் பாக்டீரியா பாதிப்பால் ஒருவர் பலி

கோபன்ஹேகன்: நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் டென்மார்க் நாட்டை சேர்ந்த 33 வயதான ஹென்ரிக் என்பவரை அவர் செல்லமாக வளர்த்து வந்த பூனை ஒன்று அவரது கைவிரலை கடித்துள்ளது. அதனால் அவருக்கு சதையை உண்ணும் பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 2018 வாக்கில் அவர் ஒரு பூனை மற்றும் அதன் குட்டிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். பின்னர் அதில் ஒரு குட்டியை வேறு இடத்திற்கு மாற்றும் போது பூனை அவரது விரலை கடித்துள்ளது. அவரும் அதனை பெரிதாக … Read more

அதிகாரிகளை அவமதித்ததற்காக இஸ்தான்புல் மேயருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை!

அதிகாரிகளை அவமதித்ததற்காக  இஸ்தான்புல் நகர மேயருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் துருக்கி அதிபர் எர்டோகனின் போட்டியாளராகக் கருதப்படும் எக்ரெம் இமாமோக்லு போட்டியிட இருந்த நிலையில் நீதிமன்றம் அரசியல் தடை விதித்துள்ளது.  பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த பிரபலமான இமாமோக்லு, அதிபர் எர்டோகனின் முக்கிய போட்டியாளராகப் பார்க்கப்படுகிறார். அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. Source … Read more

புலம் பெயர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடத்தி செல்லப்படும் அவலம்.. வெவ்வேறு இடங்களில் அலைய வைத்து பிணைத்தொகை கேட்பதாக தகவல்

மெக்சிகோவில் இருந்து எல் பாசோவிற்கு ரியோ கிராண்டேவைக் கடந்து சென்ற புலம்பெயர்ந்தவர்களில் பலர் கடத்தப்பட்டனர். இரண்டு மூன்று முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் மீட்கும் பிணைத் தொகை கோரப்பட்டது. போதைப்பொருள் கடத்தல், வன்முறை மற்றும் பலவீனமான சட்ட விதிகள் நிறைந்த பகுதிகளைக் கடந்து மெக்சிகோ முழுவதும் பயணிக்கும்போது, புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் ஆபத்துகளை இந்த கடத்தல்கள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவில் சிறந்த பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்,  … Read more