பாகிஸ்தானில் போட்டி அரசு அமைத்த பயங்கரவாதிகள்| TTP challenges Pakistan’s sovereignty, declares own government

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெஷாவர்: பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிராக தஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்னும் பயங்கரவாத அமைப்பு போட்டி அரசு அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பயங்கரவாதம் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததன் அடிப்படையில் அவரது பதவி பறிபோனது. இதனையடுத்து தற்போது ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக உள்ளார். இந்த நிலையில், தற்போதைய அரசுக்கு எதிராக போட்டி … Read more

Green Funeral மூலம் 'இறந்த மனித உடலை உரமாக்கலாம்' எப்படி? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

Green Funeral Embellishments: இயற்கை அடக்கம் (Green Funeral) இது கேட்பதற்கு சற்று விசித்திரமானதாக தோன்றலாம். ஆனால் இந்த வார்த்தை தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுவான வார்த்தையாகவே மாறிவிட்டது. இனி நமது வீட்டு தோட்டங்களில் நம்மை விட்டு பிரிந்தவர்களை உரமாக வைத்து நம்முடனே வளர்க்கலாம். இது எப்படி சாத்தியமாகி இருக்கிறது இந்த தொகுப்பில் பார்ப்போம்.  பொதுவாக ஒரு மனிதன் இறக்கும்போது அந்த உடலை தகனம் செய்வது என்பது வழக்கமான நடைமுறை. அதற்காக எரியூட்டுதல் அல்லது புதைத்தல் … Read more

எங்கள் நாட்டுப் பயணிகளை மட்டும் குறிவைப்பதா? – கரோனா கட்டுப்பாடுகளுக்கு சீனா கொந்தளிப்பு

பீஜிங்: சீனாவில் சமீப நாட்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவில் இருந்துவரும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கெடுபிடி விதித்துள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள் சீன பயணிகளுக்கு மட்டும் இந்தக் கெடுபிடியை விதித்துள்ளன. இந்நிலையில், இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் … Read more

ஒரே நேரத்தில் 2 வகையான புற்றுநோயை எதிர்கொள்ளும் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ரதிலோவா

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ரதிலோவா, தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் அவதியுற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா, 1978 மற்றும் 1990-களுக்கு இடையில் 9 விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்தார். தற்போது 66 வயதாகும் மார்டினா, ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறினார். இந்நிலையில், சமீபத்தில் உடல் பரிசோதனை செய்ததில், இவருக்கு தொண்டை மற்றும் மார்பகத்தில் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்தது.  … Read more

“ஆமாம், நான் அப்படித்தான்” – சர்ச்சை ஆடியோவுக்கு இம்ரான் கான் அளித்த விளக்கம்Former Pakistan Prime Ministe

லாகூர்: ராணுவத் தளபதியாக இருந்த கமர் ஜாவெத் பாஜ்வாவின் பதவிக்காலத்தை நீட்டித்ததுதான் தான் செய்த மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் தொடர்பான பாலுறவுப் பேச்சு அடங்கிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ”இந்த ஆடியோ போலியானது அல்ல. நூறு சதவீதம் உண்மையானது. வரும் நாட்களில் இம்ரான் கான் தொடர்புடைய வீடியோக்களும் … Read more

'ஆமா.. நான் ப்ளே பாய் தான்..!' – மாஜி பிரதமர் இம்ரான் கான் பளீச்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பான நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது … Read more

பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்த புகைப்படத்தை பகிர்ந்து பாகிஸ்தானை கேலி செய்த தலிபான் தலைவர்

1971-ம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்த புகைப்படத்தை பகிர்ந்து பாகிஸ்தானை தலிபான் தலைவர் கேலி செய்துள்ளார். பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வார்த்தை மோதல் நிலவிவரும் நிலையில், தலிபான் தலைவரும் துணைப் பிரதமருமான அகமது யாசிர், வங்கதேசம் உருவாகுவதற்கு வழிவகுத்த 1971-ம் ஆண்டு போரில் பாகிஸ்தான் தோல்வியை ஏற்றுக்கொண்டு டாக்காவில் கையெழுத்து போடப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கேலி செய்துள்ளார். தங்கள் மீதான ராணுவத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் நினைக்க வேண்டாம் என்றும், தங்கள் மீது … Read more

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரானில் இரு சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு சிறுவர்களுக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் பெயர்கள் குறிப்பிடப்படாத 18 வயதை பூர்த்தியடையாத சிறுவர்கள் இருவருக்கு விசாரணையின் முடிவில் ஈரான் அரசு தூக்குத் தண்டனை விதித்துள்ளதாக ஈரானின் நீதித் துறை இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, 23 வயதையுடைய இரண்டு இளைஞர்களுக்கு 2022-ஆம் ஆண்டின் இறுதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றி இருந்தது ஈரான். மேலும், ஈரானில் ஹிஜாப் … Read more

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடலுக்கு நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்..!

பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடலுக்கு பொதுமக்கள் ,மற்றும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் . கால்பந்து விளையாட்டின் பிதாமகன் ஆன பீலே உடல் நலம் நலிவுற்று மரணம் அடைந்தார். பிரேசில் மட்டும் அல்லாது உலகின் பல நாடுகளில் உள்ள கால்பந்து ரசிகர்களும் அவரது மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்தனர். பீலேவின் உடல் சான்டோஸ் நகரில் உள்ள மைதானத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரண்ட ரசிகர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று மலர் … Read more

‘டெஸ்லா’ நிறுவனத்திற்கு ரூ.18.50 கோடி அபராதம் விதித்த தென் கொரிய அரசு..!

மின்சார கார்களின் மைலேஜை மிகைப்படுத்தி விளம்பரப்படுத்தியதற்காக, எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு 18 கோடியே 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது. குளிர் காலத்தில், டெஸ்லா கார்களின் மைலேஜ் 50 சதவீதம் வரை குறைவதாக தென் கொரிய வர்த்தக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த தகவலை மறைத்து, எரிபொருள் செலவை டெஸ்லா கார்கள் மிச்சப்படுத்துவதுபோல் மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Source link