உக்ரைனுக்கு 60 பிராட்லி கவச வாகனங்களை அனுப்பியது அமெரிக்கா

ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட ராணுவ உதவிகளை வழங்கும் ஒரு பகுதியாக, அமெரிக்கா உக்ரைனுக்கு 60 பிராட்லி ரக கவச வாகனங்களை அனுப்பியுள்ளது. உக்ரைனுக்கு தற்போது அதிக திறன் கொண்ட ஆயுதங்கள் தேவைப்படுவதால், ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் 1980ம் ஆண்டு முதல் வீரர்களை போர்க்களங்களுக்கு அழைத்துச் செல்ல பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும், சக்திவாய்ந்த துப்பாக்கி பொருத்தப்பட்ட பிராட்லி கவச … Read more

பாக்.,ல் பலி 61 ஆக உயர்வு| Death toll rises to 61 in Pakistan

பெஷாவர் : பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய பெஷாவர் நகரிலுள்ள மசூதியில் நேற்று நடந்த தொழுகையின் போனது மனிதவெடிகுண்டு தாக்குல் நடந்தது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. காயமுற்றோர் எண்ணிக்கை 150 ஆனது. (முன் வந்த செய்தி மற்றொரு பக்கத்தில்) பெஷாவர் : பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய பெஷாவர் நகரிலுள்ள மசூதியில் நேற்று நடந்த தொழுகையின் போனது மனிதவெடிகுண்டு தாக்குல் நடந்தது.இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முடிவு

அமெரிக்காவில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர, அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு அந்நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியபோது அப்போதைய அதிபர் டிரம்ப், தேசிய அவசர நிலை மற்றும் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தார். பின்னர், 2021ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதில் இருந்து, அவசர நிலை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால், மே 11ம் … Read more

பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து-3 சிறுவர்கள் உள்பட 4 பேர் பலி

பிரேசிலில், பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஜூனியர் கால்பந்து அணியை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அலெம் பரைபா (Alem Paraiba) நகரில் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Vila Maria Helena கால்பந்து கிளப்பை சேர்ந்த அணிகள், கோபா தேசிய போட்டியில் கோப்பையை வென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. Source … Read more

பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் பலி 92 ஆக அதிகரிப்பு; தாக்குதலுக்கு பாக். தலிபான்கள் பொறுப்பேற்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, … Read more

பிரதமர் மோடி குறித்த BBC ஆவணப்படம் – ரஷ்யா பரபரப்பு கருத்து!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து ரஷ்யா பரபரப்பு கருத்து தெரிவித்து உள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்ற போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. “இந்தியா: மோடி கேள்விகள்” என்ற … Read more

கனடாவில் இந்துக் கோயில் சேதம்! வலுவான கண்டத்தை பதிவு செய்த இந்திய தூதரகம்!

கனடாவில் உள்ள பிராம்ப்டனில் உள்ள ஒரு இந்து கோவில், இந்தியாவுக்கு எதிரான  வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இது  இந்திய சமூகத்தினரிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது. டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் திங்கள்கிழமை (உள்ளூர் நேரப்படி) கௌரி சங்கர் மந்திரில் நடந்த நாசவேலைக்கு கண்டனம் தெரிவித்தது. இந்தச் செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது என்று கூறினார்.  தூதரக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய பாரம்பரியத்தின் சின்னமான பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் கோயிலில், இந்திய … Read more

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய 35 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள லிடோ கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள அந்த கடற்கரையில், 35 அடி நீளமுள்ள ஹம்ப்பேக் திமிங்கலமொன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கி பின்னர் உயிரிழந்தது. கடற்கரையில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிற்றைக் கட்டி அதிகாரிகள் கரைக்குக் கொண்டு வந்தனர்.    Source link

போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது தாக்குதல்: ஆஸி.,யில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்| Protesting Indians Attacked: Khalistan Supporters Atrocity in Aus

மெல்போர்ன்-ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு எதிராக, இங்கு வசிக்கும் காலிஸ்தான் சீக்கிய ஆதரவாளர்கள் சமீப காலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிந்து கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதுடன், கோவில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகத்தையும் எழுதி வருகின்றனர். இதற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. துாதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: அமெரிக்காவை மையமாக … Read more