2வது ஒருநாள் போட்டி: வங்கதேச அணி பேட்டிங்| Dinamalar

மிர்புர்: வங்கதேசம் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, 0-1 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று (டிச.,7) மிர்புரில் நடக்கிறது. இதில் ‛டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் … Read more

கரோனா ஊரடங்கால் பல்கலை.யில் அடைக்கப்பட்டுள்ள சீன மாணவர்கள் போராட்டம் – தங்கள் மீது கை வைத்தால் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை

பெய்ஜிங்: சீனாவின் சில நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், இன்னும் பல நகரங்களில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை எதிர்த்து சீனாவின் நான்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சீனாவில் கரோனா தொற்று மீண்டு அதிகரித்ததால், அங்கு ஊரடங்கு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளை சந்தித்து வந்த மக்களுக்கு சீன அரசின் நடவடிக்கைகள் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த வாரம் … Read more

8 பேர் பரிதாப பலி| Dinamalar

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இங்கு நடந்த மற்றொரு சம்பவத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவிலிருக்கும் அகாபுல்கோ நகரின் ஒரு விடுதியில் உள்ள மதுபான கூடத்தில், நேற்று முன் தினம் இரவு திடீரென ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், அங்கு மது அருந்திய மூன்று பேர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் … Read more

போரில் வெற்றி பெற்றதும் உக்ரைனுக்கு வாருங்கள் – இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

புதுடெல்லி: ஐரோப்பிய யூனியனில் இணைய விருப்பம் தெரிவித்த உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் உக்ரைனில் மருத்துவம் பயின்ற சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். இதையடுத்து, மத்திய அரசு அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வந்தது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 9 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்தியாவின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யாவுடனான … Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து மீண்டும் விமான சேவை| Dinamalar

கொழும்பு : ”யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு, டிசம்பர் 12 முதல் விமான சேவை மீண்டும் துவக்கப்படும்,” என இலங்கையின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறீபாலா டி சில்வா தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கைக்கு, பிரதான வருவாயை ஈட்டித் தரும் துறையாக சுற்றுலாத் துறை உள்ளது. ஆனால், 2020ல் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, இலங்கையின் சுற்றுலாத் துறையை முடக்கிப் போட்டது. அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தது. தற்போது, நாட்டின் பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல … Read more

உலகத்தையே கண்காணிக்கும் சீனா! ரகசிய காவல்நிலையங்கள் மூலம் உலகை ஆட்டிப்படைக்குமா?

ஒட்டாவா: உலகெங்கிலும் “காவல் சேவை மையங்கள்” என்ற பெயரில் சீனா ரகசிய காவல்துறையை நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளன. கனடாவில் குறைந்தது இரண்டு உட்பட, ஆவணப்படுத்தப்பட்ட “ரகசிய காவல் நிலையங்களின்” மொத்த எண்ணிக்கை இப்போது 102 ஆக இருப்பதாக, மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி CTV செய்தி தெரிவித்துள்ளது. உலகின் 53 நாடுகளில் 102 காவல் நிலையங்களை சீனா ரகசியமாக நடத்தி வருவதாக, திங்களன்று (2022 டிசம்பர் 5) வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `ரோந்து மற்றும் … Read more

இந்தியா 90 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது வியக்க வைக்கிறது – பில் கேட்ஸ் அறக்கட்டளை துணைத் தலைவர் பாராட்டு

புதுடெல்லி: குறுகிய காலத்தில் இந்தியா 90% மக்களுக்கு கரோன தடுப்பூசி செலுத்தியது வியக்க வைக்கிறது என ‘பில் மற்றும் மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸ்’ அறக்கட்டளை துணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ் கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள பில் மற்றும் மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸ் அறக்கட்டளை துணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். … Read more

ஆசியாவின் சிறந்த கொடையாளிகளாக ஷிவ் நாடார், கவுதம் அதானி அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்: ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசியாவின் சிறந்த கொடை யாளிகள் பட்டியலில், தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் ஷிவ் நாடார் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள், செல்வாக்குமிக்க மனிதர்கள் உட்பட பல்வேறு பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், ஆசிய அளவிலான சிறந்த நன்கொடை யாளர்கள் பட்டியலை 15 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இதன் 16ம் ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் … Read more

கம்யூனிசம் பரப்பினால் சிறை: இந்தோனேஷியாவில் புதிய சட்டம்| Dinamalar

ஜகார்த்தா: கம்யூனிசத்தை பரப்பினால் சிறை தண்டனை விதிக்கும் வகையில், இந்தோனேஷியாவில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, அதிக மக்கள் தொகையில் உலகின் நான்காவது பெரிய நாடாக உள்ளது. அதுபோல் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒப்புதல் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்த நாட்டில், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ”அதிபர் ஜோகோ … Read more

ஆப்கனில் குண்டு வெடிப்பு 6 பேர் உடல் சிதறி பலி| Dinamalar

காபூல், ஆப்கானிஸ்தானில், சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வெடித்துச் சிதறி, ஆறு பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், மஸாரே ஷரிப் என்ற இடத்தில், அரசின் பெட்ரோலிய நிறுவன பஸ் ஒன்று ஊழியர்களுடன் சென்றது. அப்போது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது. இதில், பஸ்சில் இருந்த ஆறு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் … Read more