உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு – நியூயார்க் முதலிடம்!

நியூயார்க், எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன. வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200–க்கும் மேற்பட்ட வி‌ஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. … Read more

கனடாவில் வேலை செய்ய பெரிய வாய்ப்பு; இந்தியர்கள் ஹேப்பி.!

கனடா நாடு பெரும்பாலானோரின் விருப்ப நாடாக உள்ளது. இந்தியர்கள் பெருமளவில் அங்கு வசிக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தாண்டி அந்நாட்டில் நிரந்தர குடியிரிமை பெற்று இந்தியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கனடா நீண்டகாலமாகவே தங்களது பொருளாதார வளர்ச்சியினை அதிகரிக்க, நிரந்தர குடியிருப்பாளார்களை ஊக்குவித்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து 4 லட்ச பேருக்கும் மேலாக வெளி நாட்டவர்களை அனுமதித்தது. இந்தநிலையில் கனடா 2025ம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடியேற்றங்களை அனுமதிப்பாக இலக்கு நிர்ணயித்துள்ளது. கனடாவில் ஓய்வுபெறுபவர்களின் எண்ணிக்கையானது … Read more

ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் நுழைந்து முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரை கொல்ல முயற்சி!

காபுல், ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யாரைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் ஆக ஹெக்மத்யார் உள்ளார். ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் உள்ளார். இந்நிலையில், ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் நேற்று கூடியிருந்த மசூதிக்குள், சந்தேகிப்படும் வகையில் பயங்கரவாதிகள் சிலர், பர்தா அணிந்தபடி நுழைந்து ஹெக்மத்யாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் … Read more

ரஷ்யாவிற்கு செக் வைக்க நினைத்து மாட்டிக் கொண்ட அமெரிக்கா.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 9 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் … Read more

பல நகரங்களில் தளர்வுகள் அறிவிப்பு| Dinamalar

பீஜிங்: கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து, பல நகரங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தொடர்ந்து கோவிட் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. உரும்குயி நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.64 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,643,871 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

ஹிட்லர் சிறந்த மனிதர்; இஸ்ரேல் தூதருக்கு அனுப்பப்பட்ட பதிவால் சர்ச்சை.!

கோவாவில் நடந்த ந53ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலிய இயக்குநரும், நடுவர் குழு தலைவருமான நடாவ் லபிட், ‘“தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசார நோக்கிற்காக தயாரிக்கப்பட்ட இழிவான ஒன்று” என்று கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து திரைப்படத்தை விமர்சித்த அவரது கருத்து, … Read more

ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தேவையை தடுக்க முடியாது: புடின் பதிலடி| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்க விரும்புபவர்களை தொடர்ந்து ஆதரிப்போம் எனக்கூறியுள்ள அந்நாட்டு அதிபர் புடின், சர்வதேச சந்தையில் ரஷ்ய கச்சா எண்ணெயின் தேவையை யாராலும் தடுக்க முடியாது எனக்கூறியுள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு கட்டுப்பாடு விதிக்கவும், வருமானத்தை குறைக்கவும் முடிவு செய்துள்ள ஜி7 நாடுகள், அதற்காக ரஷ்ய கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 60 டாலர் ஆக கட்டுப்படுத்த முடிவு … Read more

அதிர்ச்சி வீடியோ : 1 வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை… தந்தையும் படுகாயம்!

மலேசியா நாட்டில் சபா மாகாணத்தின் லகட் தாட்டு என்ற கடலோர பகுதியில் உள்ள ஆற்றில், தன்னுடைய சிறு படகில் தனது ஒரு வயது மகன் உடன் ஒருவர் மீன்பிடித்து வந்துள்ளார். அப்போது, படகை திடீரென முதலை ஒன்று தாக்கியுள்ளது. முதலை தாக்குதலின்போது, அந்த இளைஞரும் கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அவரால் முதலையை தாக்குபிடிக்க முடியவில்லை என தெரிகிறது. தலையில் கடும் பற்தடுங்களுடன் பல்வேறு காயங்களுடன் அவர் ஆற்றில் கவிழ்ந்தார். கரை சேர்ந்த அவரை அப்பகுதியினர் மீட்டனர். ஆனால், … Read more

இந்தியா என்னில் ஒரு பகுதி: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி!

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு … Read more