சட்டப்பிரிவு 370 ரத்தை நீக்கினால் மட்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் விளக்கம்
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனுமதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் … Read more