அமெரிக்காவில், நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த ‘டெஸ்லா’ கார்.. 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் பத்திரமாக மீட்பு..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், கட்டுப்பாட்டை இழந்து நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த டெஸ்லா காரில் சிக்கிக்கொண்ட 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காரை ஓட்டிவந்த நபர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததால் தறிகெட்டு ஓடிய டெஸ்லா கார், வீட்டின் சுவரை மோதி தள்ளிவிட்டு, உள்ளேயிருந்த நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தது. சத்தம் கேட்டு அருகிலிருந்த அங்கன்வாடி மையத்திலிருந்து ஓடி வந்த இரு பணியாளர்கள், குளத்திற்குள் மூழ்கத்தொடங்கிய காருக்குள் சிக்கிக்கொண்ட 4 வயது சிறுவன் உள்பட 3 பேரை பத்திரமாக வெளியே … Read more

முக்கிய நகரத்தை கைப்பற்றிய ரஷ்யா; மறுக்கும் உக்ரைன்.!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தனது நாட்டுப் படைகளுக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி … Read more

கணினி தொழில்நுட்ப கோளாறு : அமெரிக்காவில் 760 விமானங்கள் உடனடியாக தரையிறக்கம்..!

கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் சுமார் 760 விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மேலும், உள்ளூர், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 91 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானம் தாமதம் குறித்து பயணிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், விமானிகளுக்கு செய்திகளை அளிக்கும் நோட்டம் அமைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானிகளுக்கு தகவல்களை பகிர முடியவில்லையென அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.  Source link

தொழில் நுட்ப சிக்கலால் அமெரிக்காவில் முடங்கிய விமான போக்குவரத்து! பல விமானங்கள் ரத்து!

அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை மிகபெரிய அளவிலான தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் மற்றும் வெளியே உள்ள பயணிகள் செய்வதறியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) என்னும் விமான போக்குவரத்து கட்டுபாட்டு அமைப்பு அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, பாரிஸ் மற்றும் மாட்ரிட்டில் இருந்து பயணிகள் அமெரிக்காவுக்கான பயணங்களை ரத்து செய்வதாக புகார் தெரிவித்தனர். … Read more

தொழில்நுட்ப கோளாறு: அமெரிக்காவில் விமான சேவை பாதிப்பு!

கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா முழுவதும் இன்று விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு உள்ளன. மேலும், விமான சேவை முற்றிலும் தடைபட்டு உள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். அமெரிக்க விமான போக்குவரத்து அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. அமெரிக்க விமான போக்குவரத்து அமைப்பில் ‘நோட்டம்’ என்ற தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டம் தொழில்நுட்பம் விமான ஓடுதளத்தில் … Read more

சீனாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரிப்பு.. சிறிய நகரங்களில் கொரோனா மருந்துக்கு கடும் தட்டுப்பாடு..!

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால், அது தொடர்பான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிக்க, அங்குள்ள மருந்து நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க தொடங்கியுள்ளன. மக்கள் போராட்டங்களை தொடர்ந்து, சீனாவில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் உடனடியாக தளர்த்தப்பட்டதால், தொற்று பரவல் வேகமெடுத்தது. கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதுடன், சிறிய நகரங்களில் கொரோனா மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், கொரோனா மரணங்கள் அதிகரித்ததால், உடல்களை அடக்கம் செய்ய மயானங்களில் காத்திருக்கும் அவல … Read more

“மூன்றாம் உலகப் போர் வராது” – கோல்டன் குளோப் நிகழ்வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை

லாஸ் ஏஞ்சல்ஸ்: “மூன்றாம் உலகப் போர் வராது. உக்ரைன் மீதான அடக்குமுறை உலக நாடுகளின் உதவியுடன் முறியடிக்கப்படும்” என்று அந்நாட்டு அதிபர் வொலொடிமர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரைத் துறையினர் உயரிய விருதாக கருதும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. Hollywood Foreign Press Association சார்பில் நடக்கும் இந்த விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றினார் அதிபர் … Read more