அடுக்குமாடி குடியிருப்பில் தீ குழந்தைகள் உட்பட 10 பேர் பலி| Dinamalar

பாரிஸ்:பிரான்சில், அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர். ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள லியோன் நகரில், எட்டு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, குடியிருப்பு முழுதும் பரவியது. இதனால், துாக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வீடுகளைவிட்டு வெளியே ஓடி வந்தனர். சம்பவ இடத்துக்கு வந்ததீயணைப்பு வீரர்கள், பல மணி … Read more

மலேஷியாவில் நிலச்சரிவு 16 பேர் பரிதாப பலி

பதங்கலி, மலேஷியாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 5 வயது சிறுவன் உட்பட 16 பேர் பலியாகினர். தெற்காசிய நாடான மலேஷியாவில், சிலாங்கூர்மாகாணத்தில் உள்ள பதங்கலி பகுதியில் சுற்றுலா தலம் உள்ளது. இது, மலையை ஒட்டியபகுதி என்பதால், மலேஷியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் மக்கள்,இங்குள்ள கூடாரங்களில் தங்கி, இயற்கையை ரசிப்பது வழக்கம். இங்கு, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் சரிந்த மண், மலையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை … Read more

பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து 1,500 மீன்கள் துடிதுடித்து உயிரிழப்பு| Dinamalar

பெர்லின்,:ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து, சாலையில் வெள்ளம் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன. ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கண்ணாடியால் ஆன மீன் தொட்டி அமைக்கப்பட்டு, இதில் 1,500 வகையான மீன்கள் வளர்க்கப்பட்டன. ‘அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த தொட்டியில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. … Read more

பிரதமர் குறித்த பாக்., அமைச்சர் கருத்துக்கு மத்திய அரசு… சவுக்கடி! பயங்கரவாத நடவடிக்கையை உடனே நிறுத்த வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி’பிரதமர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ள மோசமான கருத்து, அந்நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. பாக்., அரசால் உருவாக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நேற்று முன்தினம் பேசுகை யில், குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி பற்றி … Read more

விமானத்தை தரையிறக்கும்போது ஓடுபாதையில் மோதி விபத்து.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய விமானி..!

அமெரிக்காவில், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான போர் விமானத்தின் பைலட், பாராசூட் உதவியுடன் வெளியேறினார். டெக்சாஸில், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமான தளத்தில், போர் விமானி ஒருவர் தனது F35 ரக ஜெட் விமானத்தை, வழக்கமாக ஓடுபாதையில் தரையிறக்குவது போல் அல்லாமல், செங்குத்தாக ஹெலிகாப்டர் போல் தரையிறக்க முயன்றார். அப்போது, விமானத்தின் முகப்பு பகுதி ஓடுபாதையில் செங்குத்தாக மோதி, விமானம் சுழலத்தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட விமானி, Ejection seat வசதியை பயன்படுத்தி, நொடிப்பொழுதில் பாராசூட் மூலம் வெளியேறினார்.  Source link

கீவ் நகரில் ரஷிய படைகள் தாக்குதல்; குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம்

கீவ், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி படையெடுத்தது. இந்த போரில் உக்ரைனின் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் ஆகியவற்றை தகர்ப்பதில் ரஷிய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக டிரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளை ரஷிய ராணுவம் பயன்படுத்துகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் உணவுக்கான தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் … Read more

பின்லேடன் இறந்துவிட்டார்.. குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார் – பிரதமர் மோடியை விமர்சித்த பாக். மந்திரி

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேச்சிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறினார். அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுதவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்’ என்றார். இந்நிலையில், இந்திய … Read more

உக்ரைனில் கடுங்குளிருக்கு மத்தியில் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா..!

உக்ரைன் மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி, ரஷ்யா நடத்திய தாக்குதலால், கடுங்குளிருக்கு மத்தியில், நாடு முழுவதும் அவசரகால மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல், 60 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் லான்ட்ராடிவ்கா கிராமத்தில் 8 பேரும், ஸ்வாடோவ் நகரில் ஒருவரும் பலியாகினர். 23 பேர் காயமடைந்தனர். பல பகுதிகளில் உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக சேதமடைந்ததால், மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு … Read more

இந்து நாடாக மாறும் அபாயத்தில் இந்தியா – அமெரிக்க எம்.பி. பேச்சு

வாஷிங்டன், இந்தியா ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாக அமெரிக்க எம்.பி. ஆண்டி லெவின் தெரிவித்துள்ளார். மிச்சிகன் மாகாணம் சார்பில் கடந்த 2019 முதல் ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருந்த லெவின், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் பிரதிநிதிகள் சபையில் அவர் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:- அமெரிக்கா மனித உரிமைகளை காப்பாற்றுவதில் அதிக வெற்றியைப் பெற்றுள்ளது, இருப்பினும் நிலைமை பல பகுதிகளில் மோசமாக இருந்தது. மதச்சார்பற்ற … Read more

சூப்பர் மேனாக இனி நடிக்கப்போவதில்லை – ஹென்றி கேவில்..!

சூப்பர் மேனாக இனி நடிக்கப்போவதில்லை என ஹாலிவுட் நடிகர் ஹென்றி கேவில் அறிவித்துள்ள நிலையில், ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்திற்கு அவரது பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசி 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அந்த கதாப்பாத்திரத்தை டேனியல் கிரேக் ஏற்று நடித்த நிலையில், புதிய படத்திற்கு வேறொரு நடிகரை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2005ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வில், தான் டேனியல் கிரேக்கிற்கு அடுத்த … Read more