செவ்வாய் கிரகத்தில் வெள்ளம்! தண்ணீர் உள்ள கிரகம் என்பதை உறுதிப்படுத்தும் தரவுகள்

லண்டன்: செவ்வாய் கிரகத்திற்கு சென்ற சீனாவின் ஜூரோங் மார்ஸ் ரோவர் மிகப் பெரிய விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ள செய்தி அதிர்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. சீன அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளின் தரவுகளிலிருந்து கிடைத்துள்ள விஞ்ஞான உண்மை இது. செவ்வாயின் மேற்பரப்பில் பல துணை அடுக்குகள் உள்ளதை ரோவரின் படங்கள் காட்டுகின்றன.   செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை அண்மையில் வெளியாகியுள்ள புதிய படம் … Read more

ஈரான்: மாஷா அமினியின் காயங்களை வெளியிட்ட பத்திரிகையாளர் கைது

தெஹ்ரான்: ஈரானில் மாஷா அமினியின் காயங்களை பதிவு செய்து வெளியிட்ட பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க … Read more

தெற்கு சாண்ட்விச் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Dinamalar

கிங் எட்வெர்ட்: தெற்கு சாண்ட்விச் தீவில் இன்று(செப்.,29) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. இது பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் எற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது.இதனால் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கிங் எட்வெர்ட்: தெற்கு சாண்ட்விச் தீவில் இன்று(செப்.,29) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. இது பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஊடக … Read more

நான்வெஜ் சாப்பிட்டால் செக்ஸ் கட்: போர்க்கொடி தூக்கும் பெண்கள்!

சர்வதேச அளவில் விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஒரு நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ‘ பீட்டா ’ அமைப்பு, அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வரும் இந்த அமைப்பில், லட்சக்கணக்கான பெண்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த அமைப்பு விடுத்துள்ள அழைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் ஸ்ட்ரைக் … Read more

Video: உலகின் முதல் மின்சார விமானம் 'Alice'; விமான போக்குவரத்தில் புதிய மைல்கல்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும், சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க, பெட்ரோல் டீசல் அல்லாத பிற ஆற்றல்களில் இயங்கும் போக்குவரத்து வாகனங்களை தயாரிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மின்சார கார்கள் மற்றும் பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பதில் இருந்து மின்சார விமானங்களை அறிமுகப்படுத்துவது வரை, கார்பன் உமிழ்வைக் குறைக்க நாடுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றன. எவியேஷன் விமானம் நிறுவனத்தின் பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட ‘ஆலிஸ்’ மின்சார விமானத்தின் மூலம் விமான போக்குவரத்துத் … Read more

புளோரிடாவை புரட்டி போட்டுள்ள இயன் சூறாவளி; மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 18 லட்சம் மக்கள்!

புளோரிடா தீபகற்பத்தை கடக்கும்போது இயன் சூறாவளி சூறாவளி சிறிது வலுவிழந்துள்ளது என்றாலும்,  பலத்த மழை மேலும் தொடரும் என்பதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பிளோரிடாவை புரட்டி போட்டுள்ளது. படகுகள் மட்டுமல்லாது சில வீடுகளுக்கு  கடலில் மிதப்பதைக் காணலாம். புதன்கிழமை பிற்பகலில், புளோரிடாவில் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி இயன் புயல் கரையைக் கடந்தது. ஃபோர்ட் மியர்ஸ் மற்றும் கேப் பவளப்பாறைக்கு அருகில் உள்ள கயோ கோஸ்டா தீவில் தென்மேற்கு கடற்கரை காற்று … Read more

இந்தியாவில் கண்ணிவெடி, தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது: பயண எச்சரிக்கை வெளியிட்டது கனடா

டொரன்டோ: கனடா நாடு தனது மக்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா சென்றால் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கிமீ சுற்றளவைத் தவிர்க்கவும். குறிப்பாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும் என்று தெரிவித்துள்ளது. இந்த பயண எச்சரிக்கையானது கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கனடா நாட்டின் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் மிகுந்த கவனமுடன் சென்றுவர வேண்டும் ஏனெனில் … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கராச்சி, பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (வயது 67). பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரான இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் கராச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனை தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அவரது மகள் பக்தாவர் பூட்டோ சர்தாரி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சர்தாரியின் நுரையீரல்கள் அருகே நீர் கோர்த்திருக்கிறது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன் சிகிச்சை எடுத்து … Read more

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை…!!

சியோல், வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. இந்த சூழலில் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 25-ந் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் … Read more

போரில் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை இணைக்கிறது ரஷியா -நாளை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார் புதின்

கீவ், உக்ரைன் நாட்டின் மீது கடந்த 7 மாதங்களாக ரஷியா போர் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை … Read more