உலக பத்திரிகை அட்டை படங்களில் அஞ்சலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: உலகம் முழுவதும் ஆங்கில பத்திரிகைகளில் எலிசபெத் ராணியின் பல்வேறு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்(96), வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. … Read more

இங்கிலாந்து ராணியின் மகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைர கிரீடம் யாருக்கு செல்கிறது?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் காலமானார். அவருக்கு வயது 96. அவரது உடல் இன்று மாலை லண்டனுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

தாய் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவில் சலித்துக்கொண்ட சார்லஸ்… 70 வருட புகைப்படம்

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் நேற்று காலமானார். ராணியின் மரணத்தை தொடர்ந்து எலிசபெத்தின் 73 வயதான மகன் சார்லஸ் (மன்னர் மூன்றாவது சார்லசாக) பொறுப்பேற்றுக்கொண்டார். சார்லஸ் இன்று தனது குடிமக்களிடம் உரையாற்ற உள்ளார். மேலும், பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் மன்னரின் முடிசூட்டு விழா எப்போது நடைபெறும் என்பது இன்னும் தெரியவில்லை. உலகமே ராணி எலிசபெத்தின் மறைவை பற்றித்தான் பேசி வருகிறது. கையில், ஸ்மார்ட் … Read more

மகாராணி மாமியாரும் மருமகள் டயானாவும்! அறியப்படாத பக்கங்கள்

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த நிலையில், அவரது வாழ்க்கையை ஒட்டி பல்வேறு சுவாரஸ்யங்களும் இன்று நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில், ராணி எலிசபெத், இளவரசி டயானாவின் மாமியார், மருமகள் உறவு குறித்த செய்திகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன. ஆண்ட்ரூ மார்டன் என்ற அரச குடும்ப வரலாற்றுப் பதிவாளர் Her True Story – In Her Own Words, என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் பல சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, திருமண நாளில் டயானா … Read more

ராணி எலிசபெத் மறைவு: 'மருதநாயகம்' படத்தை மேற்கோள் காட்டி கமல்ஹாசன் புகழஞ்சலி

சென்னை: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இந்திய திரைத்துறையின் உச்ச நடிகரான கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்திருந்தார். இதில் மருதநாயகம் படத்தையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். பிரிட்டிஷ் அரசாட்சியில் 70 ஆண்டுகள் 214 நாட்கள் ராணியாக அரியணையில் ஆட்சி செய்தவர் எலிசபெத். 96 வயதை நிறைவு செய்தவர். அவர் நேற்று காலமானார். உலகமே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளன. அதில் ஒருவராக கமல்ஹாசன் இணைந்துள்ளார். “எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக … Read more

காமன்வெல்த் அமைப்பு மக்களை ஒருங்கிணைத்து சகாப்தம் படைத்தவர் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் – அதிபர் பைடன் புகழாரம்!

காமன்வெல்த் அமைப்பு நாடுகளின் மக்களை ஒருங்கிணைத்து சகாப்தம் படைத்தவர் மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளார். ராணி எலிசபெத் மறைவையடுத்து, வாசிங்டனில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு தனது மனைவி ஜில் பிடனுடன் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் இரங்கல் குறிப்பை பதிவு செய்தார். இரண்டாம் எலிசபெத் சிறந்த பெண்மணி என்றும், அவரது மறைவுக்காக அமெரிக்க மக்கள் அனைவரும் துக்கம் அனுசரிப்பார்கள் என்றும் பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை, … Read more

எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்..!!

உலகின் பல விதமான வைரங்கள் இருந்தாலும், மிகவும் மதிப்புமிக்க  வைரம் கோஹினூர் வைரம் தான்.  கோஹினூர் வைரம் இந்தியாவிற்கு சொந்தமானது. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டு,  இங்கிலாந்தில் உள்ள தற்போது எலிசெபத் ராணியின் கிரிடத்தில் இந்த வைரம் இருக்கிறது. இந்த வைரத்தை இந்தியாவிற்கு திரும்ப கேட்டு இந்திய அரசு பல விதமான முயற்சிகள் செய்தும் வைரம் இந்தியாவிற்குள் வரவில்லை. இந்த நிலையில் தற்போது உடல்நலக் குறைவால் ராணி எலிசபெத் காலமாகிவிட்டார். இதையடுத்து அடுத்த … Read more

நான் அதிபராக இருந்திருந்தால், உக்ரைன் போர் நடத்திருக்காது – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ‘‘இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் மிகச் சிறந்த நட்பை வைத்திருந்தேன். மோடி மிகச் சிறந்த நபர். அவர் மிகப்பெரிய பணிகளை செய்து வருகிறார்’’ என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவில் 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இது தொடர்பாக நான் விரைவில் முடிவெடுப்பேன். நான் மீண்டும் போட்டியிட்டால் பலர் மகிழ்ச்சியடைவர் என நினைக்கிறேன். … Read more

எலிசபெத் மறைவு… வானில் தோன்றிய அதிசயம்- திகைத்து போன பிரிட்டன் மக்கள்!

பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி என்ற பெருமையை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். 70 ஆண்டுகள் 214 நாட்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்து தனது 96 வயதில் செப்டம்பர் 8, 2022 அன்று காலமானார். இந்நிலையில் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானில் நடந்த நிகழ்வு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் ராணியின் உடல்நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பதற்றமடைந்த பிரிட்டன் மக்கள் உடனே பக்கிங்ஹாம் … Read more

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி லண்டனில் உள்ள தனது தாய் வழி உறவினர் வீட்டில் ராணி 2ஆம் எலிசபெத் பிறந்தார். ராணி எலிசெபெத் அரண்மனையில் பிறக்கவில்லை. மேலும், அவர் பிறந்த 17 Bruton Street என்ற கட்டிடம் இப்போது பிரபல சைனீஸ் உணவகமாக இயங்கி வருகிறது. 6 ஆம் கிங் ஜார்ஜ்ஜின் மறைவுக்குப் பின்னர் 1953 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி 25 வயதான 2 ஆம் எலிசபெத் இங்கிலாந்தின் ராணியாக … Read more