பாகிஸ்தானில் மழை, வெள்ளம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,693ஆக உயர்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பல நாட்கள் நீடித்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியது இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை தற்போது குறைந்து வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து, நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 11 சிறுவர்கள் உள்பட … Read more

இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் மோதல்; நெரிசலில் சிக்கி 127 பேர் பலி; 180 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகர்ட்டா: இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலர் நெரிசலில் சிக்கியும், போலீசார் கண்ணீர் புகை வீச்சில் பலர் மூச்சுத்திணறி 127 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு லோக்கல் சேனல் ஒன்று தெரிவிக்கிறது. நாலாபுறமும் சிதறி ஓடினர் கிழக்கு ஜாவா பகுதியில் இரு அணியினர் நடந்த கால்பந்து போட்டி நிறைவு பெற்றதும் வெற்றி, தோல்வி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் ஓடினர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் … Read more

எதிர்மறை செய்திகளால் இலங்கை சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு

கொழும்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுற்றுலாத்துறையை பெருமளவில் பாதித்து இருக்கிறது. இதை வளர்ச்சிப்பாதைக்கு திருப்ப அரசும், சுற்றுலாத்துறையும் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இலங்கை குறித்த எதிர்மறை செய்திகளால் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி வேகமெடுக்கவில்லை என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். ‘இலங்கையில் உணவு தட்டுப்பாடு நீடிக்கிறதா?’, ‘குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைக்கவில்லையா?’ என்பது போன்ற கேள்விகளையே வெளிநாட்டு சுற்றுலா நிறுவனங்கள் எழுப்பி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த எதிர்மறை தகவல்கள் மற்றும் கருத்துகளை போக்கவும், … Read more

Stampede Deaths: ஜகார்த்தாவில் கால்பந்து போட்டி வன்முறையில் நெரிசலில் 127 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்துப் போட்டி ஒன்றின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது. அரேமா மற்றும் பெர்செபயா என்ற இரு அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்துப் போட்டியில் நடைபெற்ற  வன்முறையில் இந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு கலகத் தடுப்புப் போலீசார் மைதானத்தை சுற்றி வளைத்தனர். விளையாட்டு மைதானத்தின் ஆடுகளத்தில் கூடிய கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். கூட்ட … Read more

18வது பிறந்த நாள் கொண்டாடிய அமெரிக்காவின் அதிசய இளைஞர்| Dinamalar

வாஷிங்டன் :அமெரிக்காவில் மரபணு குறைபாடு காரணமாக இரண்டு முகங்களுடன் பிறந்து, நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருக்க மாட்டார் என டாக்டர்களால் கூறப்பட்டவர், நேற்று தன் 18வது பிறந்த நாளை கொண்டாடினார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்தவர் பிராண்டி. இவரது மகன் ஜான்சன். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், இவர் பிறந்தபோது, டாக்டர்களும், பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜான்சனுக்கு இரண்டு முகங்கள் இருந்தன; அவை ஒழுங்கற்று இருந்தன. ஒரு மண்டை ஓடு, இரண்டு நாசி, பிளவுபட்ட வாய் போன்ற … Read more

மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரன்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெண் நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் … Read more

இம்ரான் கானுக்கு கைது வாரண்ட்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் கடந்த ஆக. 20-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாகவும், … Read more

ஈரானில் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் சாப்பிட்ட இரு பெண்கள் கைது

தெஹ்ரான்: ஈரானில் உள்ள ஓர் உணவகத்தில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டோன்யாவும் அவரது நண்பரும் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது செயலுக்கு விளக்கத்தையும் பாதுகாப்புப் படையினர் கேட்டுள்ளனர். இரு பெண்களும் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் எவின் சிறைச்சாலை என்பது ஒரு மோசமான சிறையாக கருதப்படுகிறது. … Read more

“கல்வியைக் கொல்லாதீர்கள்” – ஆப்கன் தாக்குதலைக் குறிப்பிட்டு ரஷீத் கான் ட்வீட

காபூல்: ஆப்கனில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலைக் குறிப்பிட்டு “கல்வியைக் கொல்லாதீர்கள்” என்று கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காஜ் கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.40-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மேலும், உண்மையான பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் தேர்வு எழுத காத்திருந்த மாணவிகள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து மாணவர் கூறும்போது, “எங்களுக்கு காலை … Read more