“வெட்கித் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்கிறேன்” – கனடாவில் போப் பிரான்சிஸ் கோரிய மன்னிப்பும் பின்புலமும்

ஒட்டாவா: கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்பு கேட்டிருக்கிறார். போப் பிரான்சிஸ் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், இப்பயணம் போப்பின் வழக்கமான பயணமாக அமையாமல், கனடாவின் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய குற்றத்திற்கும்,பாலியல் துன்புறுத்தலுக்கும் போப் பிரான்சிஸ் என்ன பதில் அளிக்கப் போகிறார் என உலக நாடுகள் வியந்து நோக்கி கொண்டிருந்தன. இந்தச் சூழலில், கனாடாவின் மாஸ்வாசிஸ் … Read more

Imvanex: குரங்கம்மைக்கு இம்வானெக்ஸ் தடுப்பூசி – ஐரோப்பிய ஒன்றியம் ஓகே!

குரங்கம்மை நோய்க்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பவரியன் நோர்டிக் என்ற மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள இம்வானெக்ஸ் என்ற தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, குரங்கம்மை நோய் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய், இதுவரை உலகம் முழுவதும் 72 நாடுகளில் பரவி உள்ளது. 16,200 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, முதுகு வலி ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறிகள். முதல் … Read more

ஆறாய் ஓடும் நெருப்புப் பிழம்பு – பிரமிக்க வைக்கும் வீடியோ

ஹவாய் தீவில் உள்ள 5 எரிமலைகளில் கிலாவியா எரிமலையும் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று இந்த எரிமலை வெடித்து நெருப்புப் பிழம்பு வெளியேறி வருகிறது. எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புப் பிழம்பு ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல் வெளியேறி வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. இந்த எரிமலை சீற்றத்தை ஹவாய் எரிமலை ஆய்வகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் … Read more

பழங்குடியின மாணவர்களுக்கு துன்புறுத்தல்: போப் வருத்தம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: கனடாவில் கடந்த 19ம் நூற்றாண்டில் பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்பதாக போப் கூறியுள்ளார். கடந்த 1800 முதல் 1900 வரை கனடா அரசானது பழங்குடியினத்தை சேர்ந்த 1,50,000 குழந்தைகளை, வலுக்கட்டாயமாக குடும்பம், கலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றில் இருந்து பிரித்து கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் செயல்படும் 139 பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்போது தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டனர். … Read more

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அனல் பறந்த வாக்குவாதம்!

லண்டன், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் – லிஸ் … Read more

UK PM Election : ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே அனல் பறந்த விவாதம்

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து,  புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனார். புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை … Read more

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் டேவிட் டிரிம்பிள் காலமானார்!

லண்டன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல்-மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார். அவருக்கு வயது 77. அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி(யூயூபி) தெரிவித்துள்ளது. அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார். அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் … Read more

விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததால் விமான ஊழியர் அதிர்ச்சி! விசாரணைக்கு உத்தரவு

அங்காரா, துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார். இதை அடுத்து விமான நிறுவனம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி புறப்பட்ட விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது அந்த விமான ஊழியர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுடன் … Read more

இந்துக்களும், சீக்கியர்களும் ஆப்கன் திரும்பலாம்: தலிபான்கள் அழைப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது பாதுகாப்பு நிலைமை சீராகிவிட்டது எனவே இந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் நம் நாட்டுக்கு திரும்பலாம் என தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான்கள் கடந்த சில நாட்களாக இந்து, சீக்கிய அமைப்புகளிடம் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், “பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய இந்துக்களும், சீக்கியர்களும் நாடு திரும்பலாம். பாதுகாப்பு பிரச்சினைகள் சீராகிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு … Read more

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் – தலீபான்கள் வலியுறுத்தல்

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதனை அடுத்து சீக்கிய குருத்வாரா மறுசீரமைப்பு செய்ய தலீபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு முடிவு எடுத்தது. இந்நிலையில் தலீபான்கள் சிறுபான்மையினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகி விட்டதாகவும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட மதச் சிறுபான்மையினர் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். சீக்கிய குருத்வாரா தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு குருத்வாராவுக்கு … Read more