பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார். 78 வயதாகும் முஷாரப் உடல் நிலையை காரணம் துபாய்க்கு சென்று அங்கேயே வசித்து வருகிறார். வயது ஓவ்வாமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் அதிபர் முஷாரப் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள் இதனை மறுத்துள்ளன. இந்நிலையில், துபாயில் உள்ள அவரது … Read more

650 ஆண்டுகளுக்கு முன் கடலால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து நகரம் கண்டுபிடிப்பு

லண்டன், இந்தியாவில் வர்த்தகம் செய்ய வந்து பின்னர் காலனி ஆதிக்க நாடுகளில் ஒன்றாக மாறிய இங்கிலாந்து நாட்டில் கடலோர பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாணிபம் செழித்து வளர்ந்தது. இவற்றில் கிழக்கு யார்க்ஷைர் நகர பகுதியில் இருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்த ரேவன்சர் ஓட் என்ற துறைமுக நகரும் ஒன்று. தற்போது அந்நாட்டில் உள்ள ஹல் என்ற துறைமுகம் அமைந்த நகரை விட இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மீன்பிடி படகுகள் … Read more

பணவீக்கம், விலைவாசி உயர்வால் கடும் பாதிப்பு எனச் சிங்கப்பூர் மக்கள் கருத்து..!

பணவீக்கமும் விலைவாசி உயர்வும் தங்கள் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சிங்கப்பூர் மக்களில் பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் பணவீக்கம், அதைக் கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கை குறித்து பிளாக்பாக்ஸ் என்னும் நிறுவனம் 758 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் அரசு மோசமாகச் செயல்படுவதாகவும் 55 விழுக்காட்டினரும், சிறப்பாகச் செயல்படுவதாக 37 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர். கொரோனா சூழலுக்குப் பின் உடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்குக் குறைவாகச் செலவிடுவதாகப் பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலை … Read more

ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து அடிக்கடி பல விதமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. உக்ரைன் போரின் மத்தியில், புடினின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஒரு புதிய அறிக்கை கூறியுள்ளது. முன்னதாக, புடினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, ​​முன்னாள் KGB உளவாளியிடம் ரஷ்யாவிடம் அதிகாரம் ஆட்சியை ஒப்படைப்பதாக வதந்தி பரவியது. ஆனால் அத்தகைய அறிக்கை எதுவும் ரஷ்ய அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவரது … Read more

வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாதுகாப்பு திறனை அதிகரிக்க போவதாக தென்கொரியா அறிவிப்பு.!

வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு பாதுகாப்பு திறனை அதிகரிக்க போவதாக தென்கொரியா அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை வடகொரியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.   Source link

அரசு ஊழியர்கள் கார் வாங்க தடை – அரசு அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் நாட்டில் அரசு அதிகாரிகள் கார் வாங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் … Read more

புதிய வகை கொரோனா தொற்று பெருவெடிப்பாகப் பரவுவதாக சீனா எச்சரிக்கை

புதிய வகை கொரோனா தொற்று பெருவெடிப்பாகப் பரவிவருவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹெவன் சூப்பர்மார்க்கெட் என்ற பார் மூலமாக புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. பெய்ஜிங் கில்  61 பேருக்குப் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஷாங்காயிலும் கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதால் அனைத்து வணிக நிறுவனங்களிலும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பெரிய அளவில் பரிசோதனைகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தொற்றுப் பரவல் உலக அளவில் ஒப்பிடும் போது குறைவாகவே இருப்பினும் நோய்த்தொற்றை முற்றிலும் … Read more

மோசமான வானிலையால் தொலைந்து போன ஹெலிகாப்டர் மீட்பு.. 7 பேரின் சடலம் கண்டெடுப்பு

இத்தாலியில் மோசமான வானிலையால் மாயமான ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமையன்று துருக்கி தொழிலதிபர்கள் பயணித்த ஹெலிகாப்டர் Treviso நகரை நோக்கி சென்ற போது மோசமான வானிலை காரணமாக ரேடாரின் கண்காணிப்பில் இருந்து விலகி காணாமல் போனது. ஹெலிகாப்டரைத்  தேடும் பணி நடைபெற்ற நிலையில், மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக இத்தாலி மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். Source link

உலகிற்கு அச்சுறுத்தலாக மாறும் வடகொரியா; கிம் ஜாங் உன்னின் முக்கிய முடிவு

உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் முடிவை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் எடுத்துள்ளார். மூன்று நாள் கூட்டம் நடந்த கூட்டம் தொடர்பாக,  சனிக்கிழமையன்று அரசின் அதிகாரப்பூர்வ கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கிம் எடுத்துள்ள முடிவு உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.    வடகொரியா, மேலும் புதிய அணு ஆயுத சோதனைகளை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, கிம் ஜாங் உன் தலைமையில் நடத்த கூட்டத்தில் ஆயுத உற்பத்தியை இரட்டிப்பாக்குவது … Read more

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் இதுவரை 287 குழந்தைகள் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்

உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் 287 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 492-க்கும் அதிமான குழந்தைகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயத்தில் … Read more