அமெரிக்க கோடீஸ்வர பெண்கள் பட்டியல்: இடம் பிடித்த 5 இந்திய பெண்கள்

நியூயார்க்: போர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஐந்து இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெயஸ்ரீ உல்லால் 15வது இடத்தினை பிடித்துள்ளார். சின்டெல்லின் இணை நிறுவனரான நீரஜா சேத்தி 24வது இடத்தை பிடித்துள்ளார். நேஹா நர்கடே, கன்ஃப்ளூயண்ட்டின் இணை நிறுவனர் 57வது இடம் பிடித்துள்ளார்.இந்திரா நூயி, … Read more

யார் இந்த ரிஷி சுனக்? – பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி!

பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் விருப்பம் தெரிவித்து அதற்கான பிரசாரத்தை தொடங்கி உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராகப் பதவி வகித்து வந்த போரிஸ் ஜான்சன், அண்மையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அடுத்த கட்டமாக கன்சர்வேட்டிவ் கட்சி, கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளைத் தொடங்கி உள்ளது. மேலும், கட்சி எம்பி.,க்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இரண்டு பேர் … Read more

வாழத்தகுந்த நகரங்கள் – சென்னைக்கு 142வது இடம்

உலகளவில் வாழத்தகுதியுடைய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் 5 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. உலகம் முழுவதும் சுமார் 173 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், டெல்லி 140-வது இடத்தையும், மும்பை 141-வது இடத்தையும், சென்னை 142-வது இடத்தையும் பிடித்துள்ளன. பெங்களூரு 146-வது இடத்தை பிடித்தது. உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்பட பல்வேறு கூறுகளை கொண்டு ஆய்வு நடத்தியதில், பெங்களூரு மோசமான உள்கட்டமைப்பை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

போராட்டக்காரர்களிடம் வீழ்ந்தது இலங்கை அதிபர் மாளிகை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபயா தப்பியோடியதை தொடர்ந்து, அவர் வசித்த மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் கோத்தபயா அங்கு இல்லாததால், அலுவலகத்தை சூறையாடினார். தொடர்ந்து அங்கிருந்த நீச்சல் உற்சாகமாய் குளித்த பின்னர் அவர்களுக்கு ராஜவிருந்து அளிக்கப்பட்டது. படுக்கை அறையில் இருந்த கட்டிலிலும் அமர்ந்தும், படுத்தும் கிடந்தனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. கைப்பற்றினர் போராட்டத்தில் கலந்து கொள்ள கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் … Read more

இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா…

இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர்.  நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்த மக்கள்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேயிம்ன் இல்லத்தை  தீகிரையாக்கினர்.வேறு வழியின்றி இலங்கை பிரதமர் மகிந்த … Read more

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: போலீஸ் அதிகாரிக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின், மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி, ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி பிடித்தனர். அப்போது டெரெக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தினார். இதில் … Read more

தலிபான் தலைமையிலான ஆப்கான் அரசு மிக விரைவில் அங்கீகரிக்கப்படும் – அமெரிக்கா

தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு மிக விரைவில் அங்கீகரிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசின் அங்கீகாரம் குறித்து எந்த நாடும் இதுவரை பேசவில்லை என்று தெரிவித்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ, தலிபான்களை ஆக்கப்பூர்வமான பாதையில் ஊக்குவிப்பது காலத்தின் தேவை என்று தெரிவித்தார். பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது தலிபான்கள் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் அங்கீகாரம் குறித்து சாத்தியமில்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். Source … Read more

இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராகிறார்? | Dinamalar

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டிற்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா தற்காலிக அதிபராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிபர் கோத்தபயா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்தன. கோத்தபயா அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து தப்பிசென்றார். பின்னர், அதிபர் மாளிகை போராட்டக்காரர்கள் பிடியில் வந்தது. தொடர்ந்து, … Read more

ட்விட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்த மஸ்க்: அடுத்தது என்ன?- ஆட்குறைப்பு, சம்பள குறைப்பை எதிர்நோக்கும் ஊழியர்கள்

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அதன் ஊழியர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற பெரும் சிக்கலில் ட்விட்டர் நிறுவனம் ஆட்படும் என வேதனை தெரிவித்துள்ளனர். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக சில வாரங்கள் முன் அறிவித்தார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த … Read more

அமெரிக்கா தவறான பாதையில் செல்வதாக 88 சதவீத அமெரிக்கர்கள் கருத்து..

அமெரிக்கா தவறான பாதையில்  சென்று கொண்டிருப்பதாக 88 சதவீத அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், கடந்த 6 மாதங்களில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், கருக்கலைப்பு உரிமை, துப்பாக்கி சூடு தொடர்பான விவகாரங்களில் அரசு மக்களுக்கு உதவக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என 91 சதவீதம் பேர் கருத்து  தெரிவித்துள்ளனர். Source link