100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 11 பேர் பலி

லிமா: பெரு நாட்டின் லா லிபர்டாட்டில் இருந்து லிமா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பகுதியில் சென்ற பஸ், திடீரென கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்ததுடன், 100 மீட்டர் (330 அடி) ஆழ பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. லிமாவின் வடக்கே உள்ள அன்காஷ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் 11 பேர் பலியானர்கள். 34 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் … Read more

புற்று நோயால் ரஷ்ய அதிபரின் உடல் நிலை மோசமாகிறதா… வெளியான அதிர்ச்சித் தகவல்

கடந்த சில வாரங்களாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல விதமான செய்தி அறிக்கைகள் வெளியாகின. சமூக ஊடகங்கள் மூலமும் பல தகவல்கள் பகிரப்பட்டன. பெரும்பாலானவர்கள் அவர் மிகவும் கடுமையான நோய்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறுகின்றனர். சமீபத்திய அறிக்கையில், புடின் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விளாடிமிர் புடின் தற்போது “மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார்” என்றும் “இரத்த புற்றுநோயால்” பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூற்றுக்கள் ரஷ்யாவில் அரசியல் ஆதிக்கம் உள்ள ஒரு தொழில் … Read more

இலங்கை வழியில் மேலும் 69 நாடுகள்; சுழற்றி அடிக்கும் பொருளாதார நெருக்கடி- கடன் சுமை: எச்சரிக்கும் உலக வங்கி

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில் இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக வங்கி, ஐ.நா. போன்றவை எச்சரித்துள்ளன. உணவுத்தட்டுப்பாடு மட்டுமின்றி கடன் சுமையும் இந்த நாடுகளை மூழ்கடித்து வருகின்றன. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் … Read more

கார்கீவ் பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டு விட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்துள்ள கார்கீவ் பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்ய எல்லை அருகே உக்ரைன் வீரர்கள் வெற்றி குறியீடு காட்டியபடி நிற்கும் காணொளியை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கார்கீவ் பகுதியை மீண்டும் கைப்பற்ற உக்ரைன் வீரர்கள் கடுமையாகப் போராடி வந்தனர். இந்நிலையில், அப்பகுதி முழுவதுமாக கைப்பற்றப்பட்டு விட்டதை குறிக்கும் விதமாக உக்ரைன் – ரஷ்யா எல்லை அருகே கரவொலி எழுப்பி அவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். … Read more

நேபாளம், இந்தியா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

லும்பினி: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார். நேபாள பிரதமரும், இந்திய பிரதமரும் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி இருவருக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தினர். கோவிலை ஒட்டி அமைந்துள்ள அசோக தூண் அருகே இருவரும் தீபம் ஏற்றினர். கி.மு. 249-ல் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்ட தூண், … Read more

100 அடி உயரத்தில் தொங்கிய குழந்தை..உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நபர்

கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 8-வது தளத்தில், இளம்பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை, குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு அவரது தாய் கடைக்குச் சென்றார். அப்போது அக்குழந்தை மெத்தை மற்றும் பொம்மைகளைப் பயன்படுத்தி ஜன்னலில் ஏறியபோது நிலை தடுமாறியதால், சுமார் 100 அடி உயரத்தில் ஜன்னலின் கம்பியைப் பிடித்துத் தொங்கியது. அக்குழந்தையின் வீட்டிற்கு கீழ் தளத்தில் வசிக்கும் சபித் என்ற நபர், அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டு … Read more

ரஷ்ய அதிபர் புடினுக்கு ரத்த புற்றுநோய்? – வெளியான ஷாக் நியூஸ்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டன் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீல், ஸ்கை நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா மற்றும் பிற … Read more

வானில் நிகழ்ந்த அழகிய சூப்பர் மூன் மற்றும் சந்திர கிரகணம்…பொதுமக்கள் கண்டுகளிப்பு.!

லத்தீன் அமெரிக்காவில் வானில் நிகழ்ந்த இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் மற்றும் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர். அர்ஜெண்டினா தலைநகர் பியூனோஸ் அயர்ஸ் மற்றும் கராக்கஸ், வெனிசுலா நாடுகளிலும் சூப்பர் மூன் நன்கு காட்சியளித்தது. குறிப்பாக சிலி நாட்டின் சான்டியாகோ நகர வானில் அது சிறப்பாக காட்சியளித்தது. பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் போது சந்திர கிரகணம் தோன்றும். அப்போது சந்திரனின் ஒளி, வளிமண்டலத்தில் சிதறடிக்கப்படுவதால் முழு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். அந்த … Read more

இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது.  இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர். … Read more

இலங்கையில் கனமழை, வெள்ளம் – இலங்கையில் 600+ குடும்பங்கள் பாதிப்பு

கொழும்பு: இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட தகவலில், “கடந்த சில நாட்களாக இலங்கையின் மேற்கு மற்றும் தென் பகுதியில் கடுமையான மழை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக, கலுதரா மாகாணம், ரத்னபுரா மாவட்டங்களில் கடுமையான மழையினால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வேகமாக காற்று வீசியதில் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு … Read more