"அவர்கள் முதலில் தமிழர்களிடம் வந்தார்கள்".. சிங்களர்கள் குமுறல்!

சிங்களர்கள் மிகப் பெரும் குமுறலிலும், வேதனையிலும், விரக்தியிலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். ராஜபக்சே சகோதரர்களை நம்பி இப்படி மோசம் போய் விட்டோமே என்ற வெறுப்பின் உச்சத்தில் சிங்களர்கள் உள்ளனர். ஈழத்தில் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்தபோது, பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் வசம் ஈழம் இருந்தபோது அங்கு எந்த அடிப்படைப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஒரு அரசாங்கத்தையே நடத்தி வந்தனர் புலிகள். கோர்ட் வைத்திருந்தனர், சிறைச்சாலை வைத்திருந்தனர். நிர்வாகம் சிறப்பாக இருந்தது. புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடனும், உள்ளூர் தமிழர்களின் … Read more

உக்ரைன் தலைநகரில் 410 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுப்பு.!

உக்ரைன் நாட்டு தலைநகர் கிவ்வில் பொதுமக்களில் 410 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யா போர்க் குற்றத்தில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 42 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளதாகவும், சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஐநா அகதிகள் அமைப்பு கூறியுள்ளது. கிவ், கார்கிவ் மற்றும் செர்னிகிவ் ஆகிய நகரங்களில் ரஷ்ய படையினர் பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களைச் … Read more

பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக வழக்கு- பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி  எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு … Read more

87 முறை தடுப்பூசி செலுத்தியவர் கைது| Dinamalar

பெர்லின் : ஜெர்மனியில், 87 முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, 61 வயதான நபர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி பெற தகுதியானோரில், 75 சதவீதம் பேர், இரண்டு டோஸ்களையும் செலுத்திவிட்டனர்; 58 சதவீதம் பேருக்கு, ‘பூஸ்டர்’ டோஸ் எனப்படும், கூடுதல் டோசும் போடப்பட்டுவிட்டது.இந்நிலையில் இங்கு வசிக்கும், 61 வயதான ஒருவர், 87 முறை தடுப்பூசிகளை செலுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாக்சோனி உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் உள்ள வெவ்வேறு தடுப்பூசி முகாம்களுக்கு … Read more

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத அளவிற்கு விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இலங்கையில் சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதனைப் பொருட்படுத்தாது அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்களை பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாகவும் போராட்டம் தற்போது … Read more

எகிப்தில் ஒரே வாரத்தில் 90 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் படகில் சென்ற போது படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.  அவர்களில் 4 பேரை பிரான்சின் சர்வதேச கடல் எல்லையில் எண்ணெய் கப்பல் மீட்டுள்ளது. மற்ற தொழிலாளர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, ஜனவரி 1 … Read more

ஊரடங்குக்கு மத்தியிலும் சீன நகரத்தில் கொரோனா அதிகரிப்பு

பீஜிங் : சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரம், கொரோனா தொற்றால் தத்தளிக்கிறது. 2 கோடியே 60 லட்சம் பேர் வாழும் இந்த நகரில், தொற்று பரவல் தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. நேற்று ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா உறுதியானது. 7,788 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் தாக்குதல் உள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும். இங்கு கொரோனா பாதித்த குழந்தைகளையும், அவர்களது … Read more

ஊரடங்கை மீறி இலங்கையில் போராட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா?| Dinamalar

கொழும்பு : இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரடங்கையும் மீறி எதிர்க்கட்சியினர்நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே, ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.பெட்ரோல் – டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் வெட்டு ஏற்படுகின்றன. இதனால் குழப்பமான … Read more

உக்ரைனில் குவியல் குவியலாய் பிணங்கள்: திட்டமிட்ட படுகொலை என அமைச்சர் குலேபா குற்றச்சாட்டு

கீவ்: தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது ரஷ்யாவின் திட்டமிட்ட படுகொலை என்றும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் … Read more

பூமியைத் சோலார் புயல் தாக்க வாய்ப்பு.. நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை

17 வகை ஒளிச் சிதறல்களுடன் பூமியை இன்று சூரியப் புயல் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதனால் இன்று முதல் வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் மின்சார இணைப்புகள் பாதிப்பு, செயற்கைக் கோள்கள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக பூமியின் மீது மிதமான சூரியப் புயல்கள் உருவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனில் ஏற்படும் மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் Source link