டெஸ்லாவின் வழியில் டோஜ் கிரிப்டோகரன்சி பேமெண்ட்டுகளை ஏற்கும் திரையரங்குகள்

நவம்பரில் AMC திரையரங்குகள் DOGE மற்றும் SHIB நாணயங்களை  ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக அறிவித்தது.  கிரிப்டோகரன்சிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன, பணம் செலுத்தும் வடிவமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இப்போது, ​​​​அமெரிக்காவை தளமாகக் கொண்ட AMC திரையரங்குகள் மார்ச் 19 முதல், Dogecoin மற்றும் Shiba Inu கிரிப்டோகரன்சிகளின் வடிவத்தில் பணம் செலுத்தத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. AMC திரையரங்குகள் 1,000 க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் சங்கிலியாகும்.   மேலும் படிக்க | கிரிப்டோ கரன்சிக்கும் … Read more

எ.வ.வேலு, பி.டி.ஆர்., பொன் முத்து… மதுரை மேயர் ரேஸ்; களத்தில் குதித்த பெருந் தலைகள்!

தமிழகத்தில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் மேயர் பதவிக்கான ரேஸ் தீவிரமாக உள்ளது. மேயர் ரேஸில் உள்ளவர்களுக்கு ஆதரவாக திமுகவின் பெருந்தலைகள் எ.வ.வேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பொன் முத்துராமலிங்கம் ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் மேயர் பதவிக்கான போட்டி கடுமையாக நிலவுகிறது. மதுரையின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், திமுகவின் மூத்த தலைவர்கள் … Read more

#சற்றுமுன் || விராட் கோலியின் 100-வது டெஸ்ட்., ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ.!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டம் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் ஆட்டமாகும். தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை குறைந்துள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது.  கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்றஇந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவில்லை. மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற … Read more

Maha Shivaratri 2022 | மகா சிவராத்திரிப் பெருவிழா சிறப்பு நேரலை! | Mylapore

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் நடைபெறும் மகா சிவராத்திரிப் பெருவிழா 2022 நேரலை! Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx Source link

சிவாலயங்கள் தோறும் மகா சிவராத்திரி.! <!– சிவாலயங்கள் தோறும் மகா சிவராத்திரி.! –>

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன. மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி விரதம் இருந்து, முழுக்க முழுக்க சிவனிடம் மனம் லயித்து, இரவு கண் விழித்து நான்கு சாமத்திலும் சிவ வழிபாடு செய்யவேண்டும். அவ்வாறு செய்வதால் துன்ப இருள் அகன்று சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் வாழ்வு செழிக்கும் என்பது நம்பிக்கை. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை கோவில் … Read more

தமிழகத்தில் 350க்கும் கீழ், சென்னையில் 95க்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று: 1,025 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 348 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,49,721. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,06,649. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 92 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

'பாஜக அரசு, 12 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பவில்லை' – உ.பி பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி புகார்

புதுடெல்லி: மத்திய அரசின் பொதுநிறுவனங்களை விற்பனை செய்யும் பாஜக, 12 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை என உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் ஆறாம்கட்டப் பிரச்சாரத்தில் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச ஆறாம்கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் மார்ச் 3 இல் துவங்கி நடைபெற உள்ளது. குஷிநகரில் நடந்த இதற்கானப் பிரச்சாரத்தில் அம்மாநில காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: “கடந்த ஐந்து வருடங்களாக உத்தர பிரதேச இளைஞர்களுக்கு வேலைகள் … Read more

‘‘கீவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்’’- இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

கீவ்: உக்ரைனின் கீவ் நகரில் தங்கியுள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. உக்ரைனின் வடகிழக்கில் அமைந்துள்ள கார்கீவ் நகரத்தை ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது. இதனால் கார்கீவ் நிலைமை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. கார்கீவ் மட்டுமின்றி … Read more

'கீவ் நகரில் இருந்து உடனே வெளியேறுங்க!' – இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த ஆறு நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. … Read more

எதிரிகளை துவம்சம் செய்ய உக்ரைன் அரசு அதிரடி அறிவிப்பு!

நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்த்து தெரிவித்த ரஷியா, இந்த விஷயத்தில் தம்மை துளியும் மதிக்காமல் செயல்படுவதாக, உக்ரைன் மீது கடந்த ஒரு வாரமாக உக்கிர தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுமழை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதல் நடத்திவரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை சின்னாபின்னம் ஆக்கி வருகின்றன. உக்ரைன் -ரஷியா இடையேயான போர எங்கே உலகப் போருக்கு கொண்டு போய் விட்டுவிடுமோ என்று அச்சத்தில் உள்ள உலக நாடுகள், இருநாட்டுகளும் சமாதான பேச்சுவார்த்தை … Read more