செங்கல்பட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறையினர்.!

செங்கல்பட்டில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அண்மையில் பதவியேற்ற சுகுணா சிங், செங்கல்பட்டு நகர மற்றும் தாலுகா காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனை அடுத்து, அவர் உத்தரவிட்டதன் அடிப்படையில் வீடுபுகுந்து ரவுடிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டோரை கைது செய்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான முறையில் செல்வோரிடமும் … Read more

பல கோடி ரூபாய் இரிடியம் மோசடி வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றக் கிளை மறுப்பு

மதுரை: அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி பல கோடி ரூபாய் வசூலித்த இரிடியம் மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்தவர் ராம்பிரபு (எ) ராஜேந்திரன். இவர் இரிடியத்தில் முதலீடு செய்தால் அதிகளவு லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த முகம்மது தமீம் பேக் … Read more

நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் ரத்து | ‘முகக்கவசம் கட்டாயமல்ல’ – மகாராஷ்டிர அரசு அறிவிப்பு; டெல்லியில் இனி அபராதம் இல்லை

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2020தொடக்கத்தில் கரோனா வைரஸ்பரவத் தொடங்கியது. இதையடுத்து, முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. அந்த ஆண்டின் இறுதியில், தொற்று பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதே நேரத்தில் கரோனா 2-வது மற்றும் 3-வது அலையால் பாதிப்பு அதிகரித்தது. அதனால், இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகள் அமல்படுத்தின. பின்னர், அந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. இந்நிலையில், … Read more

யார் ஹீரோனு கூட தெரியாது…! அவருக்காக மட்டும் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன் ….!

சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த மாதம் 25-ந் தேதி திரையரங்கில் வெளியானது. ரிலீஸானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம், வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் . நாயகர்களாக நடித்துள்ளனர்.இப்படம் சுதந்திர … Read more

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட்ளளது. இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது.  2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். Source link

வங்கியில் பணம் எடுத்து வந்தவரை பின் தொடர்ந்து சென்று மர்ம நபர்கள் கைவரிசை

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வங்கியில் ஒருவர் எடுத்த பணத்தை, மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்து கொள்ளையடுத்து சென்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காலாப்பட்டு பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அய்யனாரப்பன், பைனான்ஸ் தொழில் செய்து வரும் நிலையில் கடந்த 30 ஆம் தேதி காலாப்பட்டில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று 1.50 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், … Read more

இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த டீயை ஒருவாட்டி குடிச்சு பாருங்க..! சளி இருமல் உங்கள் கிட்ட கூட நெருங்காது

பொதுவாக காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் என்று பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள் வந்து அதிக தொல்லைகளை தரும். இந்த சளி இருமல் பிரச்சனைகளை நமக்கு எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி மிக எளிதில் சரி செய்துவிட முடியும். அதற்கு ஒரு சூப்பரான மருத்துவ குணங்கள் நிறைந்த டீ உள்ளது. தற்போது அதனை எப்படி எளியமுறையில் தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.  தேவையானவை இஞ்சி – சிறிய துண்டு வரமல்லி – 1 ஸ்பூன் மிளகு – 1 … Read more

கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! கல்லூரி பருவம்தொட்டே அரசியல்களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொதுவுடைமைப் போராளியான அவரது தொண்டு சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட ரஸல்- பஞ்சாப் அணியை பந்தாடியது கொல்கத்தா

 மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது.  இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.  முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 137 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பனுகா ராஜபக்சே 31 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.  இதையடுத்து 138 ரன்கள் … Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை- 77 வயது முதியவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் சடையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 77). இவரது வீடு அருகே ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். சிறுமியின் தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பார். அப்போது சிறுமி வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருப்பார். இதனை பார்த்த சம்சுதீன் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அன்று மாலையில் வீடு … Read more