தமிழ்நாட்டில் திமுகவுடன் இருப்பதை போல் அகில இந்திய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நட்பை காங்கிரஸ் வளர்க்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

டெல்லி: 3 நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிஐக்கு பேட்டியளித்தார். அப்போது; அனைவரும் தங்கள் தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவிட்டு இந்தியாவை காக்க ஒன்றுபட வேண்டும். அகில இந்திய அளவில் கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணியை உருவாக்க வேண்டும். பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநில கட்சிகளும் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கைகோர்த்து அணியை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுகவுடன் இருப்பது போல, அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கொள்கை ரீதியான நட்புறவை … Read more

2020-ல் அதிகரித்த குழந்தைத் திருமணங்கள் – எந்தெந்த மாநிலங்களில் அதிகம்?

2020-ம் ஆண்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்திருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதுக்கும் பரவியது. பெருந்தொற்றாக மாறிய இந்த கொரோனா வைரசால், உலக நாடுகள் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்தன. தற்போது கொரோனா தடுப்பூசி காரணமாக, பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்து … Read more

’ரூ.21 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை’ – மத்திய நிதியமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார். அப்போது தமிழகத்தின் நிதி நிலவரம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் வழங்கினார். தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு … Read more

மத்திய அரசு முடிவுக்கு இரோம் ஷர்மிளா வரவேற்பு| Dinamalar

‘அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமலாகும் பகுதிகள் குறைக்கப்படும்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் பார்லி.,யில் அறிவித்தார்.இச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி, 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய, மணிப்பூரின் இரும்பு பெண் என அழைக்கப்படும், மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா இதை வரவேற்றுள்ளார். இருப்பினும், இச்சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என, அவர் கோரியுள்ளார். ‘அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் … Read more

ஹவுஸ் ஆப் டிராகன் புதிய தொடர் ஆகஸ்ட் 11ல் வெளியாகிறது

உலக புகழ்பெற்ற சின்னத்திரை தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். எச்பிஓ சேனலில் 7 சீசன்களாக வெளியான இந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தொடரில் நடித்த அனைவரும் இப்போது உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்த நட்சத்திரங்கள் ஆகிவிட்டனர். சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்த தொடரின் கடைசி சீசன் மதர் ஆப் டிராகன் கொல்லப்படுவதோடு முடிந்தது. அதனால் இந்த கதையை அப்படியே தொடர முடியாது என்பதால் புதிய கதையாக உருவாக்கி உள்ளனர். கேம் ஆப் த்ரோன்ஸ் … Read more

TOP Headlines: சென்னைக்கு வந்த அமெரிக்க நிறுவனம்.. அடி தூள்..!

தமிழ்நாட்டைத் தேடி அடுத்தடுத்து பல உலக நாடுகளில் இருக்கும் நிறுவனம் நிலையில் தற்போது அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு மென்பொருள் நிறுவனம் சென்னையில் தனது முதல் இந்திய அலுவலகத்தைத் திறந்துள்ளது 3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?! சமீபத்தில் பிரிட்டன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனம் சென்னையில் சுமார் 1 மில்லியன் சதுரடியில் பிரம்மாண்ட அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more

அடிப்படைவாதப் போதனைகளை பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்குவதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது…

இலங்கையின் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இட்டுச் செல்கின்ற போதனைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாத்துத் தருமாறும் மிதவாதப் போக்குடைய முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். எச். ஹரிச்சந்திர ஆகியோர் “ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான” ஜனாதிபதி செயலணியுடன் கடந்த, … Read more

சி.பி.எம் மாநிலச் செயலாளராக மீண்டும் கே பாலகிருஷ்ணன் தேர்வு; கோயில்களில் பாஜக வியூகத்தை முறியடிப்போம் என சூளுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23வது மாநில மாநாடு நிறைவு நாளில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், கோயில்களில் பாஜகவின் வியூகத்தை முறியடிப்போம் என்று தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் 30, 31 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நிறைவு நாளான இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், … Read more

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞர்..போக்சோவில் கைது.!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திடீரென காணாமல் போனார். இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக மாணவியை தேடி வந்தனர். இந்த விசாரணையில் பவானிசாகர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் லோகேஷ் குமார் என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று … Read more

“இந்திய எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறினால்..!" – இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசியது தொடர்பாக அமெரிக்கத் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ இந்திய எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறினால் ரஷ்யா உதவிக்கு வரும் என்று இந்தியா … Read more