டெல்லியில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்தித்து பேசினார். உக்ரைன் உடனான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சமாதான முயற்சியில் இந்தியா அதன் பங்களிப்பை வழங்க தயாரக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குறையும் கொரோனா தொற்று பரவல் – ரயில் ஏசி வகுப்புகளில் மீண்டும் போர்வை, தலையணைகள்

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் இன்று முதல் மீண்டும் படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது. சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் பரவியது. இந்த கொரோனா பரவலால் கோடிக்கணக்கான பேர் உயிரிழந்தநிலையில், பெரும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. கொரோனா தொற்று பரவலால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்தவகையில், ரயில்களில் … Read more

தெலங்கானா: ஐசியுவில் இருந்த நோயாளியை எலி கடித்ததாக புகார் – 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்!!

தெலங்கானாவில் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நோயாளியை எலி கடித்ததால், பணியில் இருந்த 2 மருத்துவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், கண்காணிப்பாளர் இடமாற்றமும் செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். பல உடல் உறுப்புகள் செயலிழந்ததால் நான்கு நாட்களுக்கு முன்பு அவரை அதே மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் எம்ஜிஎம் மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் … Read more

பஞ்சாபுடன் சண்டிகரை இணைக்க மசோதா| Dinamalar

சண்டிகர் :சண்டிகரை பஞ்சாபிடம் ஒப்படைக்கக்கோரும் மசோதா, பஞ்சாப் சட்டசபையில், நிறைவேற்றப்பட்டது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்திற்கும், ஹரியானாவுக்கும், ஒரே தலைநகராக சண்டிகர் உள்ளது. யூனியன் பிரதேசமான சண்டிகரை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. சமீபத்தில், சண்டிகரில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும், மத்திய சேவை விதிகளின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த … Read more

காளியனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பிருத்திவிராஜ்

நடிப்பு, டைரக்ஷன் என பிஸியாக இருக்கும் நடிகர் பிரித்விராஜ் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு 'காளியன்' என்கிற படத்தில் நடிக்க போவதாக தானே முன்வந்து பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டார். 300 வருட காலத்திற்கு முந்தைய சரித்திர வீரன் 'குஞ்சிரக்கோட்டு காளி' என்கிற கேரக்டரில் தான் பிரித்விராஜ் நடிக்கிறார். தற்போது கொல்லம் பகுதியாக இருக்கின்ற, 1700ஆம் வருடங்களில் வேநாடாக இருந்த பகுதியின் தன்னிகரில்லா தளபதியாக விளங்கிய இரவிக்குட்டி பிள்ளை பற்றிய வரலாறு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

இந்தியாவுக்கு என்ன வேண்டுமோ, நாங்க கொடுக்கிறோம் – செர்ஜி லாவ்ரோவ் உறுதி

உக்ரைன் மீதான போரை நிறுத்தியுள்ள ரஷ்யா தனது வர்த்தகத்தையும் வருவாய் ஈட்டும் அனைத்து வழிகளையும் மேம்படுத்தி வருகிறது. ஒருபக்கம் தனது ரூபிள் நாணயத்தின் மதிப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ஐரோப்பாவிடம் ரூபிள் நாணயம் வாயிலாகப் பேமெண்ட் செய்தால் மட்டுமே கச்சா எண்ணெய் எரிவாயு அளிக்க முடியும் என அறிவித்துள்ளது. இதேபோல் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனா மற்றும் துருக்கி நாடுகளுக்கு யுவான் அல்லது லிரா ஆகியவற்றின் வாயிலாகவும், தங்கத்தின் வாயிலாகவும் எண்ணெய் முதல் அனைத்து … Read more

டெல்லியைப் போல தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகள்; கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியைப் போல தமிழகத்திலும் மாதிரிப் பள்ளிகளை உருவாக்கி வருவதாகவும், அவற்றை பார்வையிட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மு.க. ஸ்டாலின், இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் டெல்லி அரசுப் பள்ளிக்குச் சென்றார். அங்கே ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். டெல்லி … Read more

உங்களின் அரசியல் சித்து விளையாட்டுக்கு மாணவர்கள்தான் கிடைத்தார்களா? – டிடிவி தினகரன்.!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ” சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்த பிறகும் அங்கு பயின்று வருகின்ற M.B.B.S., மற்றும் B.D.S., மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் அளவிற்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது. கடந்த ஆட்சியில் இதே மருத்துவ மாணவர்கள் கட்டணக் குறைப்பிற்காக போராடியபோது, அன்றைய எதிர்கட்சித்தலைவராக இருந்த திரு.ஸ்டாலின், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுக்கல்லூரியைப் போலவே கட்டணம் வசூலிக்கப்படும்’ என … Read more

`10.5% உள் இட ஒதுக்கீடு… துபாய் விசிட்' – விழுப்புரத்தில் திமுக அரசைச் சாடிய சி.வி.சண்முகம்

விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதற்கான விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட்ட இரு காரணங்கள்… மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா; இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முழுமையான தரவுகள் இருக்கிறதா? என்பதுதான். சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்! 10.5% இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில், முன்பு மதுரை உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பில், `மாநில அரசுக்கு … Read more