மக்கள் தேர்ந்தெடுத்த அரசை ஆளுநர்கள் மதிக்க வேண்டும் – முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர்கள் மதிக்க வேண்டும்’ என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநருமான சதாசிவம் உதகை ஜெ.எஸ்.எஸ். ஃபார்மசி கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நீர்வளம் அனைவருக்கும் பொதுவானது. எல்லாமக்களும் பயன்பெறும் வகையில், மாநில அரசுகள் … Read more

‘இந்துக்கள் ஹலால் இறைச்சியை உண்ணக்கூடாது’-பரப்புரை.. தாக்குதல்! கர்நாடகாவில் நடப்பது என்ன?

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்பனையாளர் மீது பஜ்ரங் தள உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹலால் செய்து விற்கும் இறைச்சியை இந்துக்கள் யாரும் வாங்கக் கூடாது என்று இந்துத்துவ அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுதொடா்பாக சமூக வலைதளங்களில் இந்துத்துவா அமைப்புகளால் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் இறைச்சி கடைகளில் இருந்து ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளை வாங்க வேண்டாம் என … Read more

உருக்கமான கடிதத்துடன் மருத்துவர் தற்கொலை| Dinamalar

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பிரசவத்தின் போது பெண் இறந்ததற்காக பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதனால் மன வேதனையடைந்த அவர் ‘அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் சமீபத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே அதற்கு காரணம் என … Read more

ஆதாரமில்லாமல் எப்ஐஆர் பதிந்தது எப்படி? திலீப் வழக்கில் நீதிமன்றம் கேள்வி

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை நடத்திய அதிகாரிகளை அவர் கொல்ல சதி திட்டம் தீட்டியதாகவும், கடத்தப்பட்ட நடிகையின் துன்புறுத்தல் சம்பந்தமான வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனில் பார்த்ததாகவும் திலீப்பின் நண்பராக இருந்து பின்னர் எதிரியாக மாறிய இயக்குனர் பாலச்சந்திரன் குமார் என்பவர் … Read more

இவ்வளவு வருமான வரி சலுகை இருக்கா.. புதிய நிதியாண்டில் திட்டமிட்டு செயல்படுங்க..!

புதிய நிதியாண்டு தொடங்கியாகிவிட்டது. பற்பல மாற்றங்களும் அமலுக்கு வந்து விட்டன. நம்மில் பெரும்பாலோர் வருமான வரி திட்டத்தை கடைசி நிமிடம் வரை விட்டு விடுகிறோம். ஆனால் உங்கள் நிதிக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது போல, ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே திட்டமிட வேண்டும். இது வரிகளை திட்டமிட உதவும். வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ் தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு பொருந்தகூடிய சில விதிமுறைகளை பார்க்கலாம் வருங்கள். கச்சா எண்ணெய் விலை 150 டாலராக உயரும்.. நடப்பதை … Read more

பிரச்சனைகளை ராஜதந்திரம் மூலம் தீர்க்க இந்தியா ஆதரவு – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பு கடினமான சர்வதேச சூழலில் நடைபெறுகிறது என்பதை ஒப்புக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், புதுடெல்லி “எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஆதரவாக உள்ளது” என்று கூறினார். இந்த சந்திப்பின் போது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்திய மற்றும் ரஷ்ய இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் நட்பு என்பது முக்கிய வார்த்தை என்று கூறினார். கடந்த சில நாட்களில் பிரிட்டிஷ் … Read more

#தமிழகம் || ஊராட்சி மன்ற தலைவரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற மர்ம கும்பல்.!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசபிள்ளைபட்டி ஊராட்சிமன்றத் தலைவர் சக்திவேல் (வயது 45). இவரின் உத்தரவு பேரில் பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் நீர் நிலை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதன்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அரசப்பிள்ளைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அனைவரும் உடனடியாக அதனை அகற்றிவிடவேண்டும் எனவும், ஒலிபெருக்கி மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் … Read more

“எனக்கு எந்த மறதியும் இல்லை'' – ரன்பீர் கபூரின் தகவலை மறுக்கும் ரன்தீர் கபூர்!

ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் 2020 ஏப்ரலில் இரத்தப் புற்றுநோயால் மறைந்தார். அவர் நடித்துக்கொண்டிருந்த கடைசி படமான ‘Sharmaji Namkeen’ படம் பாதியில் நின்றது. பிரபல நடிகரான பரேஷ் ராவல் மீதிப் படத்தை நடித்துக்கொடுக்க, ஹிந்தி சினிமாவில் முதல்முறையாக ஒரே கேரக்டரை இரண்டு நடிகர்கள் நடித்திருப்பது இந்தப் படத்தில்தான். இதற்கான ப்ரோமோஷனில் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர் அளித்திருக்கும் பேட்டியில், ரிஷியின் மூத்த சகோதரரான ரன்தீர் கபூர் டிமினீஷியா எனப்படும் மறதி நோயின் ஆரம்ப … Read more

அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து – 5 வயது சிறுவன் காயம்

திருவள்ளூர் மாவட்டம் பூனிமாங்காடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்த விபத்தில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் காயமடைந்தார். சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்த அங்கன் வாடி மையத்தின் கட்டிடம் சிதிலமடைந்திருந்த நிலையில் இருந்துள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில், பிற்பகலில் குழந்தைகள் அனைவரும் உணவருந்துவதற்காக வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மூர்த்தி – ராஜேஷ்வரி தம்பதியின் 5 வயதான மகன் விமல்ராஜ் மட்டும் உள்ளே … Read more

சுங்கச்சாவடி கட்டண விவகாரத்தில் காங்கிரஸ் சந்தர்ப்பவாத மலிவு அரசியல் செய்கிறது: பாஜக விமர்சனம்

சென்னை: சுங்கச்சாவடி கட்டண விவகாரத்தில் காங்கிரஸ் சந்தர்ப்பவாத மலிவு அரசியல் செய்கிறது என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இன்று முதல் தேசிய நெடுஞ்சாலலகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மோடி அரசு உயர்த்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாலைகளை அமைக்க தனியாருடன் ஒப்பதங்களை செய்து கொண்டு, சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை நிர்ணயம் செய்தது யார்? ஆளும் கட்சியாக ஒன்றை செய்து விட்டு … Read more