வருணை பழிவாங்க துடிக்கும் அக்ஷரா : வைரலாகும் காமெடி வீடியோ

பிக்பாஸ் சீசன் 5-ல் விளையாடிய போட்டியாளர்களில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றால் அது அக்ஷராவும், வருணும் தான். இருவரும் காதலிக்கிறார்களோ என பார்ப்பவர்கள் சந்தேகிக்கும் வகையில் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், அக்ஷரா வருணை கண்டிப்பாக பழிவாங்குவேன் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வருணும், அக்ஷராவும் சமீபத்தில் சந்தித்து கொண்ட போது வருண், அக்ஷரா மீது கலரை பூசி விளையாடியிருக்கிறார். அந்த கறை அக்ஷராவின் தலையிலும், காஸ்ட்லியான காரிலும் ஒட்டிக்கொண்டது. எவ்வளவு கழுவினாலும் அந்த … Read more

வசமாக மாட்டிய ஹீரோ மோட்டோ கார்ப்.. ரூ.800 கோடி அபேஸ்.. உண்மை என்ன..?

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் தலைவரான பவன் முன்ஜாலின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்த நாளில் இருந்தே பதற்றமாக இருந்த நிலையில், நேற்று மத்திய வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையின் மூலம் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே பண்ணை வீடு, 1000 கோடி ரூபாய் போலி கணக்குகள் எனப் பல செய்துகள் வெளியாகியுள்ள நிலையில் வருமான வரித்துறை நிறுவனத்தின் பெயர் … Read more

நீங்கள் பிரதமராகாமல் இருந்திருந்தால்?..இம்ரான் கானை சாடிய முன்னாள் மனைவி

பாகிஸ்தானில் பணவீக்கம் , கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் இம்ரான் கானின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து இம்ரான் கான் அரசு பெரும்பான்மை இழந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 எம்.பி.க்கள் உள்ள நிலையில் இம்ரான் கானுக்கு ஆதரவாக 164 எம்.பிக்கள் உள்ளனர். ஆட்சியைத் தக்க வைக்க 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவை கடந்த … Read more

தமிழக மக்களின் நலனுக்காகவே முதல்வர் பிரதமரை சந்தித்தார் – அமை்சசர் தங்கம் தென்னரசு

Minister Thangam Thennarasu Press Meet : தமிழகத்தின ஒட்டுமொத்த நலனுக்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திததார் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 4 நாள் பயணமாக அமைச்சர்கள் சிலருடன் நேற்று டெல்லி சென்றார். அவருக்கு தமிழக எம்பிக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து 14 முக்கிய கோரிக்கைகள் … Read more

#தமிழகம் || மகளின் தோழியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை கைது.!

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கோவை கருமத்தம்பட்டியில் தங்கி வேலை பார்த்து கொண்டு வருகிறார். அப்போது அவரின் பெற்றோரிடம் அன்றாடம் கைபேசியில்  தொடர்பு கொள்வது வழக்கம்.  கடந்த 21 -ம்  தேதி பெற்றோர்கள் தொடர்பு கொண்ட போது, அந்த சிறுமி ஃபோனை எடுக்க வில்லை. இதனால் அந்த நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது சிறுமி மாயமானது தெரிய வந்தது. இதன் பிறகு கோவைக்கு வந்த  சிறுமியின் பெற்றோர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த … Read more

மதுரையில் நடந்த செஞ்சட்டைப் பேரணி; மிடுக்குடன் கவனம் ஈர்த்த அந்தியூர் சிறுமி!

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. அகில இந்திய தலைவர்கள் இதில் பங்கெடுத்து வருகின்றனர். என்.சங்கரய்யா, மோகன், நன்மாறன் போன்ற தன்னலமற்ற தலைவர்களுடன் கே.பி. ஜானகியம்மாள் முதல் லீலாவதி போன்ற ஒப்பற்ற பெண் தியாகிகளை கம்யூனிஸ்ட் கட்சிக்கு தந்த மண் மதுரை. பெண்கள் அணிவகுப்பு “தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்” – அண்ணாமலைக்கு எதிராக இடதுசாரிகள் வரிந்துகட்டுவதன் பின்னணி ஜாதி, மதங்களுக்குள் சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகவும், அவர்களின் உரிமையை மீட்டெடுப்பதை … Read more

பரனூர் சுங்கச்சாவடி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ இணையதளத்தில் வைரல்.!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பாஸ்டாக் மூலம் பணம் செலுத்த முடியாததால், இரு மடங்கு கட்டணம் செலுத்தச் சொன்ன ஆத்திரத்தில் பெண் ஒருவர் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. நேற்றிரவு பரனூர் சுங்கச்சாவடிக்கு வந்த காருக்கு 55 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டி வந்தவர் பாஸ்டாக் மூலம் பணம் செலுத்த முயன்ற நிலையில், அதில் போதிய பணம் இல்லாததால் இருமடங்கு கட்டணம் செலுத்திவிட்டு காரை எடுத்துச் செல்லுமாறு ஊழியர் கூறியதாக சொல்லப்படுகிறது. இருமடங்கு … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் ஏன் மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவில்லை? – முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

விழுப்புரம்: வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து தமிழக அரசு ஏன் வாதாடவில்லை? இத்தீர்ப்பு காரணமாக தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இட ஒதுக்கீடு வழங்குவதில் முன்னோடி மாநிலம் தமிழகமாகும். ஆனால் அதற்கு இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தை உணர்ந்த … Read more

நீதிமன்ற உத்தரவுகள் விரைந்து கிடைக்க ‘ஃபாஸ்டர்’ புதிய மென்பொருளை அறிமுகம் செய்தார் தலைமை நீதிபதி

புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைந்து கிடைக்க, ‘ஃபாஸ்டர்’ என்ற புதியமென்பொருளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று அறிமுகம் செய்தார். ஜாமீன் உட்பட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்றுசேருவதில் கால தாமதம் ஆவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் செய்தித் தாளில் விரிவான கட்டுரை ஒன்று வெளியானது. அதை கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை … Read more

'புதிய பாகிஸ்தான் அல்ல நீங்கள் பிரதமராக இல்லாத பாகிஸ்தானே சிறப்பாக இருந்தது' – இம்ரானின் முன்னாள் மனைவி

‘நீங்கள் பிரதமராக இல்லாதபோது பாகிஸ்தான் சிறப்பாக இருந்தது’ எனக் கூறி இம்ரான் கானை கிண்டல் செய்துள்ளார் அவரது முன்னாள் மனைவி ரெஹ்மான் கான். கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். இந்தச் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் … Read more