திருத்தணி: அங்கன்வாடியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 6 வயது மாணவன் காயம்

திருத்தணியில், அரசு அங்கன்வாடி பள்ளி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது மாணவன் விமல்ராஜ் தலையில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பூனி மாங்காடு காலனியில், அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 18 பெண் குழந்தைகளும், 17 ஆண் குழந்தைகளும், மொத்தம் 35 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இந்த அங்கன்வாடி பள்ளியில், சாந்தி என்ற ஆசிரியரும், சமையல் உதவியாளராக … Read more

சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?.. பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!

“பரிக்‌ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியில் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி என மாணவர் கேட்ட கேள்விக்கு, “ஊடகம் எது என்பது முக்கியம் அல்ல. உங்கள் கவனம் எதில் இருக்கிறது என்பதுதான் முக்கியம் என பிரதமர் மோடி பதிலளித்தார். தேர்வுகளை மாணவர்கள் பயமின்றி எதிர்கொள்ள ஏதுவாக வருடந்தோறும் நடைபெறும் “பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியில் ஐந்தாவது பதிப்பில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி என மாணவர் ஒருவர் பிரதமர் … Read more

அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்தியா உடனான உறவு பாதிக்காது: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்| Dinamalar

புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதால் இந்திய – ரஷ்ய உறவுகள் பாதிக்கப்படாது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லி வந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல தசாப்தங்களாக இந்தியாவுடனான உறவு வளர்ந்து வருகின்றன. உறவுகள் என்பது மூலோபாய கூட்டாண்மைகள். இதன் அடிப்படையில்தான் நாங்கள் அனைத்து துறைகளிலும் எங்கள் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறோம். உக்ரைன் நெருக்கடியை இந்தியா முழுவதுமாக உற்று நோக்குகிறது. போருக்கு … Read more

பாராட்டு மழையில் நனைந்த சுஜா வருணி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் சுஜா வருணி. இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரனான சிவாஜி தேவ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார். தற்போது தனது மகன் அத்வைத்திற்காக சில புத்தகங்களை வாங்கியுள்ள சுஜா வருணி அதிலிருந்து ஆத்திச்சூடி புத்தகத்தை முதலில் எடுத்து தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். அதன்பின் தமிழ் கடவுளான முருகனை அறிமுகம் செய்கிறார். இதன் வீடியோவை … Read more

சீனாவில் கடுமையான லாக்டவுன்.. உலக நாடுகள் அச்சம்.. ஏன் தெரியுமா?

கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வந்த உலகம் தற்போது தான் அதிலிருந்து படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளது. சீனாவின் இருந்து முதன் முதலாக தோன்றிய இந்த வைரஸ், தற்போது மீண்டும் சீனாவில் குடிகொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே சீனாவின் பல நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதாக தகவல்காள் வெளியாகின. சீனா லாக்டவுன் எதிரொலி.. கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடையலாம்..! லாக்டவுன் … Read more

கலவரத்தின் பின்னணியில் அடிப்படைவாதக் குழு…

நுகேகொடை ஜூபிலி சந்தி அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருந்த திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதிகள் குழுவொன்று கலவரத்தில் ஈடுபட்டு, வன்முறை நிலையை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. இரும்புக் கம்பிகள், தடிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு மிரிஹான பெங்கிரி வத்தையில் உள்ள ஜனாதிபதி அவர்களின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று, கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதிகள் என உறுதியாகியுள்ளது. அவர்கள் அரபு … Read more

கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

இலங்கை அதிபர் இல்லத்திற்கு முன்பாக கலவரம் கட்டுப்பாட்டுக்குள் – 54 பேர் வரை கைது – 35க்கும் மேற்பட்டோர் காயம் – போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டதாக அதிபர் குற்றச்சாட்டு. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர்  கொழும்பு நுகேகொடை மிரிஹான பகுதியில் அதிபரின் இல்லத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீஸ், இராணுவம், சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக … Read more

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம்.. ஜப்பான் நிறுவனம் ரூ. 4,710 கோடி நிதியுதவி!

ஜப்பான் சர்வதேச கோ-ஆபிரேஷன் நிறுவனம் (JICA) சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக சுமார் ரூ. 4,710 கோடி (ஜப்பானிய யென் 73,000 மில்லியன்) ஜப்பானிய உத்தியோகபூர்வ மேம்பாட்டு உதவி (ODA) கடனை வழங்க இந்திய அரசாங்கத்துடன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ரஜத் குமார் மிஸ்ரா மற்றும் JICA இந்தியாவின் தலைமைப் பிரதிநிதி சைட்டோ மிட்சுனோரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்குவதற்காக … Read more

#தமிழகம் || குதிரைவீரன் நடுகல், பெண்ணுக்கு கிணறு கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிப்பு.!

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு – அம்மாபட்டி சாலையில் உள்ள குளக்கரையில், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், பெண்ணுக்கு கிணறு கொடுத்த கல்வெட்டு, தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, “பாய்ந்த தோற்றத்தில் காணப்படும் குதிரையின் மேல், வீரன் ஒருவர் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருக்கும் குதிரைவீரன் நடுக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இந்த நடுக்கலில் அந்த வீரன் தலையில் மகுடம் சூடி கொண்டும், இடது கை குதிரையின் கடிவாளத்தை … Read more

ப்ரூஸ் வில்லிஸுக்கு ஏற்பட்டுள்ள `Aphasia' பாதிப்பு; பின்விளைவுகள் என்னென்ன?

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ப்ரூஸ் வில்லிஸ். டை ஹார்டு சீரிஸ், ரெட், 12 மங்க்கீஸ், பல்ப் ஃபிக்ஷன், தி ஜாக்கல் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்த ப்ரூஸ் வில்லிஸ், இனி நடிக்க மாட்டாராம். இந்த அறிவிப்பை அவரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். ப்ரூஸ் வில்லிஸ் `அஃபேஷியா’ (Aphasia) எனப்படும் அபூர்வ பாதிப்புக்குள்ளானதால் அவரின் குடும்பத்தார் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்களாம். `அஃபேஷியா’ என்பது மூளையின் செல்களின் இயக்கத்தில் ஏற்படும் ஒருவித பாதிப்பு. அதன் விளைவாக பாதிக்கப்பட்ட நபர், … Read more