ஐரோப்பிய நாடுகளுக்கு பேரிடி.. விளாடிமிர் புடினின் பலே பதிலடி.. துணிச்சல் தான்..!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும், ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் கச்சா எண்ணெய் வணிகம் மற்றும் இயற்கை எரிவாயு வணிகத்திலேயே கைவைத்துள்ளன. 3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?! இந்த வணிகங்களை முடக்கினால் ரஷ்யா பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும். இதனால் பொருளாதாரத்தில் பெரும் சரிவினை சந்திக்கும் என்று … Read more

இலங்கை, நேபாள வெளிவிவகார அமைச்சர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் புதிய ஒத்துழைப்பின் பகுதிகளாக விரிவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்பைப் புதுப்பிப்பு

கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டையொட்டி, நேபாள வெளியுறவு அமைச்சர் கலாநிதி நாராயண் கடகா, 2022 மார்ச் 30ஆந் திகதி இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்தார். கலந்துரையாடலின் போது, தொடர்ந்தும் விருத்தியடைந்து வரும் இருவழிப் பிணைப்பு குறித்து இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் திருப்தி தெரிவித்ததுடன், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், ஐக்கிய … Read more

சீனாவில் தொடர்ந்து கொரோனா…ஷாங்காயில் தீவிர ஊரடங்கு

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகள் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறிய நிலையில், தீவிர ஊரடங்கு விதிகளால் சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது சீனாவுக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. சீனாவின் துறைமுக நகரான ஷாங்காயில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஷாங்காயின் தினசரி கொரோனா … Read more

அரிசி மாவு, தயிர், தேன்.. சீரியல் நடிகை கவிதா சோலைராஜா பியூட்டி டிப்ஸ்!

பிரபல தமிழ் சீரியல் நடிகை கவிதா சோலைராஜா’ சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் நடித்து, சின்னத்திரை பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் என பல சீரியல்களில் கவிதா நடித்தார். சமீபத்தில், கவிதா சோலைராஜா தன்னுடைய லைஃப்ஸ்டைல், சுய பராமரிப்பு குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். முதலில் மேக்கப்  குறித்து கவிதா பேசுகையில்; 90ஸ்ல பேன்கேக் இருக்கும். பிரஷ் இருக்கும். ரெண்டும் எடுத்து தண்ணில மிக்ஸ் பண்ணி, … Read more

இனி சிறைத்தண்டனை தான் பிரதானம் – எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம்.!

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிப்பதை பிரதானமாக இருக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறியதாக கூறி, தெய்வசிகாமணி என்ற அரசு அதிகாரிக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஊதியத்தை நிறுத்தி வைத்து, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தெய்வசிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்து, பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று, … Read more

பள்ளிச் சென்றுத் திரும்பிய மகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி! – திருவள்ளூரில் சோகம்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகில் உள்ள கீழ் நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் அர்ச்சனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 14 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். வடிவேல் ரேவதி என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். வடிவேல், ரேவதி தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். வடிவேலு, தன் முதல் மனைவியைப் பிரிந்து தற்போது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார். தற்கொலை வடிவேல் தனியார் … Read more

தமிழகத்திலும் இதேபோல் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும்: டெல்லி அரசுப் பள்ளியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் உறுதி

புதுடெல்லி: “டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியை போல தமிழகத்திலும் விரைவில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளான இன்று மேற்கு டெல்லி, வினோத்நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார். பள்ளியை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்றனர். அந்தப் பள்ளி மாணவர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு … Read more

100 நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி குறைப்பு: சோனியா புகாருக்கு அமைச்சர்கள் பதில்

புதுடெல்லி: நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்ட விவகாரத்தை மக்களவையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது: மகாத்மா காந்தி ஊரக வேலைதிட்டம் சிலரால் கேலி செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டம் கரோனா தொற்றுநோய் காலத்தில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் உதவியாக இருந்தது. இத்திட்டத்துக்கு தொடர்ந்து நிதி குறைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடானது 2020-ம் ஆண்டை விட 35 சதவீதம் குறைவாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை … Read more

தமிழில் பேனர்.. பெரும் மகிழ்ச்சியில் கெஜ்ரிவால்.. "விசில்" அடித்த ஸ்டாலின்!

டெல்லியைக் கலக்கி விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லி வந்துள்ள அவர் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இன்று டெல்லி அரசுப் பள்ளிக்கு சுற்றுப்பயணம் செய்து தலைநகரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வந்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் வழங்கினார். இதையடுத்து இன்று டெல்லியில் டெல்லி அரசு … Read more

வலிமை என்னை ஏமாற்றிவிட்டது…பிரபல இயக்குனர் கருத்து..!

அஜித்தின் வலிமை படம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியானது. வினோத்தின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தினாலும் பொதுவான ரசிகர்களிடம கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு தான். வினோத்தின் முந்தைய படங்களான சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களின் மெகா வெற்றியினால் அதைப்போலவே வலிமை படமும் இருக்கும் என்று ரசிகர்கள் … Read more