புதுச்சேரி கலால் வருமானம் ரூ.1000 கோடியை தாண்டியது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: புதுச்சேரி கலால் வருமானம் முதல் முறையாக 1063 கோடி ரூபாயை கடந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், கள்ளுக்கடைகள்- 50, சாராயக்கடைகள் – 80, மதுபான கடைகள் – 284 உள்ளன. மாநிலத்தின் வருவாயில், கலால் துறை பெரும் பங்காற்றுகிறது. கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கலால் வருவாய் பெரிதும் பாதித்தது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் கலால் வருவாய் முதல் முறையாக 1063 கோடி … Read more

ரூ.4800 கோடி யார் கொடுப்பா, அதனால்தான் கடையைத் தூக்கிட்டோம்.. ரிலையன்ஸ் பலே விளக்கம்.!

இந்தியாவின் 900 பில்லியன் டாலர் மதிப்பிலான ரீடைல் வர்த்தகச் சந்தையில் கடந்த 2 வருடமாக அதிகம் எதிர்பார்த்து இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் மத்தியிலான வர்த்தகக் கைப்பற்றல் ஒப்பந்தத்திற்கு அமேசான் தொடுத்த வழக்கின் காரணமாகத் தற்போது முடங்கியுள்ளது. இந்த வழக்கு இந்திய நீதிமன்றம் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பிலும் நடந்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் யாருக்கும் எவ்விதமான அறிவிப்பும் செய்யாமல் சுமார் 900 கடைகளைக் கைப்பற்றியுள்ளது. இதற்கான விளக்கத்தைத் தற்போது ரிலையன்ஸ் … Read more

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் மறைவு  –  பிரதமரின் இரங்கல் செய்தி 

அனுபவமிக்க அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன அவர்களின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். இடதுசாரி அரசியலின் செயற்பாட்டாளரான அதாவுத செனவிரத்ன அவர்கள், லங்கா சமசமாஜக் கட்சி ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார். ஆசிரியராக கடமையாற்றி வந்த அதாவுத செனவிரத்ன அவர்கள், 1954 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் பிரவேசித்தார். 1970 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெலியத்த தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது, லங்கா சமசமாஜக் … Read more

பாஜக கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்.!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில், வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து விட்டதாக கைது செய்யப்பட்ட, தமிழக பாஜக கட்சி செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருபவர் கல்யாணராமன். இவர் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து மத கலவரத்தை தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வை விதைக்கும் வகையிலும் பதிவிட்டு வந்ததாக கூறி, கடந்த அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்டது.  இதனையடுத்து … Read more

நீங்கள் வெஜிடேரியனா? பருப்பு, பூசணி விதை, தயிர்.. உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய டாப் 5 புரோட்டீன் உணவுகள்!

சைவ உணவு உண்பவர்களுக்கு, புரதத் தேர்வுகள் குறைவாக இருக்கும் என்ற பொதுவான தவறான கருத்து உள்ளது. அசைவ உணவு உண்பவர்கள் கோழி, சால்மன் மற்றும் முட்டை போன்ற உணவுகளிலிருந்து புரதத்தைப் பெறுகிறார்கள். சைவ உணவு உண்பவர்களுக்கும், புரதச்சத்து நிறைந்த சமச்சீர் உணவைப் பெற பல விருப்பங்கள் உள்ளன. நீங்கள் சில உணவு மாற்றங்களைச் செய்ய விரும்பினால், ஊட்டச்சத்து நிபுணர் அஸ்ரா கான் சைவ புரதத்தின் சில முக்கிய ஆதாரங்களை பட்டியலிடுகிறார். பருப்பு: 100 கிராம் பருப்பில் 7-8 … Read more

“ஜெயிலுக்குப் போக நாங்க தயார்" – காவலர்களை மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர்; போலீஸார் வழக்கு பதிவு!

சென்னையில் அடுத்தடுத்து தி.மு.க கவுன்சிலர்களின் கணவர்கள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், 51-வது வார்டின் தி.மு.க கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் உட்பட 6 பேர் மீது வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ப்ராவின் டேனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். என்ன நடந்தது என்று வண்ணாரப்பேட்டை போலீஸாரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “காவலர் தியாகராஜன், காவலர் மணிவண்ணன் ஆகியோர் கடந்த 29.3.2022-ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது … Read more

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ரக நூல் விலை கிலோவிற்கு ரூ.30வரை உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பஞ்சு விலைக்கு ஏற்ப நூல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் நூல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டுள்ளன. அதில் அனைத்து ரக நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ … Read more

நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: ரூ.20,860 கோடியை விடுவிக்க கோரிக்கை

புதுடெல்லி: 4 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்கான ரூ.20,860.40 கோடியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள்: > 14வது நிதிக்குழு உள்ளாட்சி … Read more

35 டாலர்கள் தள்ளுபடி; ரூபாய்- ரூபிளில் பரிவர்த்தனை: இந்தியா வருகிறது ரஷ்யாவின் முதல்தர கச்சா எண்ணெய் 

புதுடெல்லி: இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி டாலர்கள் இல்லாமல் ரூபிள்- ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் … Read more

வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸ் தயாராகவே இருந்தது: ஆஸ்கர் நிகழ்ச்சிக் குழு

லாஸ் ஏஞ்சல்ஸ்: மேடையில் கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸார் தயாராகவே இருந்ததாக ஆஸ்கர் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை நடந்த ஆஸ்கர் விருது விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா ஸ்மித்தைப் பார்த்து, “ஜிஐஜேன் (அப்படத்தின் மைய கதாப்பாத்திரமான கதாநாயகி மொட்டை அடித்திருப்பார்) படத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா?” என்று நகைச்சுவை தொனியில் கேட்டார். இதனால் கோபம் அடைந்த வில் … Read more