ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு முதலில் பேட்டிங்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் டூ பிளஸிஸ் தலைமையிலன பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன.  இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்க் தேர்வு செய்தது. இதன்படி, குஜராத் அணி முதலில் பந்து வீசுகிறது.  நடப்பு தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா … Read more

37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் திருமணம்… ஆச்சரியத்தில் மூழ்கிய தம்பதி

லாஸ் வேகாஸ், அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வருபவர்கள் ஜெரேமி சால்டா மற்றும் பாம் பேட்டர்சன்.  இவர்கள், உலகின் திருமண நகரம் என பெயர் பெற்ற லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 24ந்தேதி தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என விரும்பியுள்ளனர்.  அதற்காக தயாராகி வந்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நாளில் லாஸ் வேகாஸ் செல்லும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.  இதனால், திட்டமிட்டபடி தங்களது திருமணம் நடைபெறாமல் போய் விடுமோ என்று அச்சமடைந்து உள்ளனர். எப்படி … Read more

ரூ.52 லட்சம் கோடி இழப்பு.. 2035 வரையில் மீண்டு வர முடியாது.. ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்..!

கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போதாது என்று தான் சொல்ல வேண்டும். வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என எவ்விதமான வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்துள்ளது. கொரோனா தொற்று மூலம் இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம், மக்களின் உடல்நலம் என அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இந்தப் பாதிப்பில் இருந்து இந்தியா எப்போது முழுமையாக வெளியேறும் என்பது குறித்து … Read more

அமைச்சுகள் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள்: அதிவிசேட வர்த்தமானி

அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நேற்று (28) முன்தினம் இநத வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. முழுவிபரம் http://www.documents.gov.lk/files/egz/2022/4/2277-53_T.pdf  

வெண்டைக்காயை பாதியாக கீறி தண்ணீரில் ஊறவைத்து… சுகர் பேஷண்ட்ஸ் இந்தக் கோடையில் இதை ட்ரை பண்ணுங்க!

Tamil Lifestyle Update : காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மைகளை கொடுக்கிறது இவற்றை பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது சமையல் செய்தோ சாப்பிடும்போது உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. இதில் பச்சையாக சாப்பிடும் அளவுக்கு உள்ள வெண்டைக்காய் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது வெண்டைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் கோடை காலத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த விதத்தில் வெண்டைக்காய் நமக்கு கோடைகால உணவாக பயன்படுகிறது. இதில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது … Read more

அரசு பள்ளி மாணவன் பலியானதன் எதிரொலி || மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு.!

நெல்லை அருகே 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்ய, பள்ளி மேலாண்மை குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், பாப்பாக்குடி பகுதியை செல்வ சூர்யா என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே, கையில் ஜாதி ரீதியான கயிறு கட்டுவது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது. இதில், … Read more

சென்னை: சாப்பிடச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதுபோதையில் சிக்கிய இளைஞர்கள்

சென்னைன தி.நகர் காவல் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் 14 வயது சிறுமி வசித்து வருகிறாள். இவளின் அம்மா வனஜா (44). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம் போல 29.4.2022-ம் தேதி வனஜா தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக மகளை மட்டும் தனியாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதனால் மகளைத் தேடி வனஜா வீட்டுக்குச் சென்றார். பாலியல் தொல்லை அப்போது வீட்டில் மகள் … Read more

திருமலை மடை கருப்பசாமி கோவிலில் சித்திரை திருவிழா.. ஆண்கள் மட்டுமே பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்

சிவகங்கை அருகே திருமலையில் மடை கருப்பசாமி கோவிலில் ஆண்கள் பங்கேற்புடன் மட்டுமே நடைபெற்ற பாரம்பரிய சித்திரை திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று 325 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். சித்திரை முதல் நாளில் காப்புக்கட்டி விரதம் இருக்க தொடங்கிய ஆண்கள் திருவிழாவின் 16-வது நாளான நேற்று அரிவாள், கருப்பு நிற ஆடுகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மண்பானையில் பொங்கலிட்டு 325 ஆடுகளை வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய அவர்கள் பின்னர் பொங்கல், சமைத்த இறைச்சியை சுவாமி முன் … Read more

கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இளைஞரின் துண்டிக்கப்பட்ட கையை இணைத்து உயிரூட்டிய மருத்துவர்கள்

கோவை: அரிவாளால் வெட்டப்பட்டு கை துண்டிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் கையை அறுவை சிகிச்சை செய்து இணைத்து மருத்துவர்கள் மீண்டும் உயிரூட்டியுள்ளனர். ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் (21) திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக நடந்த பிரச்சினையில், அவரது உறவினர் ஒருவர் கணேசை அரிவாளால் கடந்த 8-ம் தேதி வெட்டியுள்ளார். இதில் முதுகு, கழுத்து ஆகியவற்றில் வெட்டு விழுந்ததோடு, வலது கை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு … Read more

கரோனா: பொருளாதார பாதிப்பை சரி செய்ய இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் ஆகும்: ரிசர்வ் வங்கி அறிக்கை 

மும்பை: கரோனா தொற்று சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும் உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது. கரோனா ஏற்படுத்திய பொருளாதார … Read more