ஆன்லைன் ரம்மி விளையாட்டு: ரூ.35 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.35 லட்சம் வரை பணத்தை இழந்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு (39), இவரது மனைவி ஜனனி என்ற இந்து (36), தனது குடும்பத்துடன் வசித்து வந்த பிரபு கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் குடி பழக்கத்தினால் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. … Read more

'சமஸ்கிருதம் தேசியமொழி': அஜய் தேவ்கன், சுதீப்பின் இந்தி சர்ச்சையில் கங்கனா ரனாவத் கருத்து

இந்தி மொழி குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இடையே ட்விட்டரில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தனது புதிய படமான ‘தாகட்’டின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கங்கனா ரனாவத், “சமஸ்கிருதம் நமது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று நான் கூறுவேன், இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரஞ்சு … Read more

நீட் நுழைவு தேர்வு 11 லட்சம் பேர் விண்ணப்பம்| Dinamalar

புதுடில்லி: ‘நீட்’ தேர்வுக்கு, 11 லட்சம் மாணவர்களும்; ‘கியூட்’ தேர்வுக்கு, 4.7 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நாட்டில், இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, நேற்று முன்தினம் நிலவரப்படி, 11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 17 லட்சத்தை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல், நாட்டில் உள்ள … Read more

மூன்றே படங்கள் : மூவாயிரம் கோடி வசூல்

கொரோனா அலைகளுக்குப் பிறகு பல தொழிலும் முடங்கியது. குறிப்பாக சினிமா துறை நிறையவே சோதனைகளை எதிர்கொண்டது. பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. பல நாட்களில் 50 சதவீத இருக்கை அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. தியேட்டர்களை நிரந்தரமாக மூடி விடலாமா என தியேட்டர்காரர்களும் யோசித்து வந்தார்கள். ஆனாலும், சில பிரம்மாண்ட படங்கள் வெளிவந்து அவர்களைக் காப்பாற்றியது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிற்குமே சேர்த்து டப்பிங் படங்கள் தான் காப்பாற்றியது என்று சொன்னால் அது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். 2021ன் டிசம்பர் … Read more

29.04.2022 அன்று, வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:    

இவர்தான் லோ பட்ஜெட் சமுத்திரக்கனியோ… இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியல் தொடர்பான மீம்ஸ்கள் அதைவிட பெரிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் சண்டைகள் வரை அனைத்தையும் காமெடியாக கொடுப்பதில் மீம்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டுவைப்பதில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்களே நல்ல வரவேற்பை பெற்று … Read more

பள்ளியில் மயங்கி விழுந்து 7ம் வகுப்பு மாணவி பலி.. காவல்துறை விசாரணை..!

7ம் வகுப்பு மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் நிதர்சனா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருகிறார்.  இந்நிலையில், வழக்கம் போல இன்று காலை பள்ளிக்கு சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியை மேல் சிகிச்சைக்காக பல்லடம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

`இந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனா திரும்பலாம்!' – அறிவித்த இந்திய தூதரகம்

சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவிற்கு திரும்புவதைப் பரிசீலிக்க சீன அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தரவுகளின்படி, சீனாவில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 23,000. கோவிட் நோய்த் தொற்றின்போது சீனாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 2019-ம் ஆண்டிலிருந்து இம்மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கும் சூழல் உண்டானது. சீனாவிற்கு மீண்டும் சென்று கல்வியைத் தொடர முடியாத நிலையில் இந்திய மருத்துவ மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில் மார்ச் 25-ம் தேதி … Read more

“அனைவருக்குமான வளர்ச்சியே திராவிட மாடல்” – முதலமைச்சர்

“அனைவருக்குமான வளர்ச்சியே திராவிட மாடல்” திமுக அரசு மக்களுக்கான அரசு – முதலமைச்சர் “ரூ.64,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்ப்பு” “2 லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு” “நல்லதோர் நாகரிகமான அரசாக திமுக அரசு விளங்கும்” “திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை” “கொரோனா என்ற கொடிய நோய்க்கு ஒரு முற்றுப்புள்ளி” “தடுப்பூசி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றினோம்” “தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு உதவிகள்” “மேட்டூரிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு” “கடிகாரம் ஓடும் முன் ஓடு என உழைக்கிறோம்” … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெ., உதவியாளர் பூங்குன்றனிடம் 2-வது நாளாக விசாரணை

கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் போலீஸார் இரண்டாவது நாளாக இன்று (ஏப்.30) விசாரணை நடத்தி வருகினறனர். கொலை, கொள்ளைச் சம்பவம்: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடந்தது. கொள்ளை முயற்சியில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து 10 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் … Read more