சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்: ஓவியா கருத்து

நடிகை ஓவியா தற்போது படங்களில் நடிப்பதை விட தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். எப்போதும் தனது கருத்தை வெளிப்படையாக கூறும் பழக்கமுடைய ஓவியா, சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவிலும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். விழாவில் அவர் பேசுகையில், ‛கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம். ஓபனாக அனைத்தையும் பேச வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து … Read more

பாக்., மாஜி பிரதமர் உட்பட 150 பேர் மீது வழக்கு| Dinamalar

லாகூர்-சவுதி அரேபியாவின் மதினா பள்ளி வாசலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக பலர் கூச்சலிட்ட சம்பவம் தொடர்பாக, பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உட்பட, 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோல்வி அடைந்ததை அடுத்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மதினா பள்ளி வாசலில் … Read more

UGC-NET 2021-22: விரைவில் தேர்வு தேதி… யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய தேர்வு முகமை (NTA) UGC-NET டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய இரு சுழற்சி தேர்வுகளுக்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ugcnet.nta.nic.in அல்லது nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுவாக, யுஜிசி நெட் தேர்வு ஆண்டிற்கு 2 முறை நடத்தப்படும். ஆனால், இந்த முறை, கோவிட் தொற்றுநோய் காரணமாக தேர்வின் அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, … Read more

பொய் வழக்குகளைத் தகர்த்தெறிந்தது, பாஜகவின் சுயரூபத்தை வெளிப்படுத்திய நீதிமன்றம் – வெளியான பரபரப்பு அறிக்கை! 

மேவானிக்கு அசாம் நீதிமன்றம் நியாயம் வழங்கியுள்ளதாக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் காங்கிரஸ் ஆதரவு குஜராத் சுயேச்சை எம்எல்ஏவும் இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பாஜகவின் முகத்திரையை கிழித்துக் கொண்டிருப்பதால், குஜராத்தில் அக்கட்சியின் செல்வாக்கு குறைந்து கொண்டிருக்கிறது. ஜிக்னேஷ் மேவானியை எப்படியாவது பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த பாஜக … Read more

LSG v DC: மே தின ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆடிய ராகுல்; மிடில் ஓவர்களில் கோட்டைவிட்டதால் தோற்ற டெல்லி!

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ஓயாமல் உழைக்கும் கே.எல்.ராகுல் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஒரு ஸ்பெசல் இன்னிங்ஸை ஆட, லக்னோ அணி 190+ ஸ்கோரை எடுத்து அதை வெற்றிகரமாக டிஃபண்ட்டும் செய்து காட்டியிருக்கிறது. KL Rahul லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலே டாஸை வென்றிருந்தார். மாலை நேரத்து போட்டி என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். டீகாக்கும் கே.எல்.ராகுல் வழக்கம்போல ஓப்பனர்களாக வந்தனர். முஷ்டபிசுர் ரஹ்மான் … Read more

சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்: திட்டமிட்டே பலிகடா ஆக்கப்பட்டாரா மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன்?

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ ரெத்தினவேலு, மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் நடந்த சமஸ்கிருத மொழி உறுதிமொழி ஏற்பு விவகாரத்தால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு ராாஜாஜி மருத்துவமனை ‘டீன்’னாக ரெத்தினவேலு இருந்தார். இவர், கரோனா தொற்று பரவ ஆரம்பித்த போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ‘டீன்’னாக பணிபுரிந்து வந்தார். அப்போது மதுரை அரசு ராஜாஜி … Read more

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய நடிகர் அஜித் குமார்.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த புகைப்படம்

AK 61 நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் பல வேடங்களில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக தனது உடல் எடையில் இருந்து 25 கிலோவை அஜித் குறைவுள்ளார் என்றும், அதில் 10 கிலோ வரை குறைத்துவிட்டார் என்றும் தெரியவந்தது. உடல் எடையை குறைத்த அஜித் இந்நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் நடிகர் அஜித் உடல் எடையை … Read more

நாட்டில் சமையல் எண்ணெய்களின் இருப்பு போதிய அளவில் உள்ளதாக மத்திய அரசு தகவல்.!

இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் சமையல் எண்ணெய்களின் இருப்பு போதிய அளவில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகை சமையல் எண்ணெய்களின் தற்போதைய கையிருப்பு சுமார் 21 லட்சம் மெட்ரிக் டன் என்றும், மேலும் 12 லட்சம் மெட்ரிக் டன் இம்மாதத்தில் வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு சமையல் எண்ணெய் வகைகளின் விலையை குறைப்பது குறித்து முக்கிய சமையல் … Read more

கொரோனா தொற்றின் கோர முகத்தை நாம் இன்னமும் பார்க்கவில்லை: மீண்டும் எச்சரிக்கும் பில் கேட்ஸ்

கொரோனா தொற்றுநோயின் மிக மோசமான நிலையை உலகம் இதுவரை எதிர்கொள்ளவில்லை என மைக்ரோசாப்ட் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். உலக மக்களை அச்சுறுத்தும் எண்ணம் தமக்கில்லை என குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ், ஆனால் இன்னும் விரைவாக பரவும், இன்னும் அபாயகரமான மாறுபாடு உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றின் உக்கிரத்தை நாம் இதுவரை எதிர்கொள்ளவில்லை என்பது தாம் உண்மை என குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ், நாம் இன்னமும் கொரோனா தொற்றின் கோரப் பிடியில் இருந்து முழுமையாக … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி

புனே: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 46வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர்.  பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, அணியின் … Read more