குழந்தைளுக்கு அடிப்படை கல்வியை தாய்மொழியில் வழங்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது: சமூகத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பல்கலைக்கழகங்கள் புதுமையான யோசனைகளைத் தெரிவிக்க முன்வர வேண்டும்.  ஆராய்ச்சி படிப்பின் நோக்கம் மக்களின் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும். மனித மேம்பாடு, வளமான, நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிப்பதால், கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்கும் வகையில் அதனை சமமான அளவில் … Read more

நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவை விவகாரம்; அட்டர்னி ஜெனரலின் கவலையை ஆமோதிக்கிறேன்! சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை கவுரவிக்கும் வகையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசுகையில், ‘நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கான வழிகளை நீதிபதிகள் கண்டறிய வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் 24,000 நீதிபதிகளின் பணியிடங்கள் உள்ளன; அவற்றில் 5,000 காலியாக உள்ளன. விசாரணை நீதிமன்றத்தில் 4 கோடி வழக்குகள் … Read more

பணிக்கு வந்த முதல் நாளில் கூட்டு பாலியல் வன்கொடுமை – கொடூரமாக கொல்லப்பட்ட செவிலியர்

உத்தரப் பிரதேசத்தில் பணிக்கு சென்ற முதல் நாளிலேயே செவிலியர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் துல்லாபூர்வா கிராமத்தில் நியூ ஜீவன் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை சில நாட்களுக்கு முன் ஏப்ரல் 25ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் திகானா கிராமத்தில் வசித்த 18 வயதேயான இளம்பெண் செவிலியர் பணியில் வெள்ளிக்கிழமை சேர்ந்துள்ளார். பணி நிமித்தமாக … Read more

பெங்களூரில் மாநகராட்சி சார்பில் புதிய கொரோனா விதிமுறைகள்| Dinamalar

பெங்களூரு:பெங்களூரில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் ஹோட்டல், தியேட்டர், மால்கள், மருத்துவமனைகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.பெங்களூரில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 100க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் ஹோட்டல், தியேட்டர், மருத்துவமனைகளுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப் பட்டு உள்ளன. மருத்துவமனை மருத்ததுவமனைகள் சி.எம்.ஆர்., இணையத்தில் அனைத்து தகவல்களுடன் பரிசோதனை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்; தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்காக 10 சதவீதம் படுக்கைகளை … Read more

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் ‛விட்னஸ்'

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்ததாக ‛விட்னஸ்' என்னும் படத்தில் நடிக்கிறார். தீபக் என்பவர் இயக்கும் இப்படத்தில் நடிகை ரோகினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மனித கழிவுகளை அகற்றும் மனிதர்களை பற்றிய கதையாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‛தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த “விட்னஸ்” திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், … Read more

சென்னை இ.சி.ஆர் சாலைக்கு கருணாநிதி பெயர்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை-மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி’ பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத்துறையின் பவள விழா ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை பவளவிழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு அடிக்கல் … Read more

நிசான் கார் தொழிற்சாலை மூடப்படாது – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.!

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே இயங்கி வரும் நிசான் கார் தொழிற்சாலை தன்னுடைய கார் உற்பத்தியை நிறுத்தி, அத்தொழிற்சாலையை மூடப்போகும் சூழல் உருவாகி இருப்பதாகவும் அதன் காரணமாக பெருமளவில் வேலை இழப்பும், தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பும் நேரவிருப்பதாகவும் தெரிவித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். ஓ. பன்னீர்செல்வத்தின் அறிக்கை, தமிழ்நாடு அரசின் மீது ஏதாவது ஒரு … Read more

கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்… திருச்சியில் காலியாகும் அதிமுக கூடாரம் – கழுகார் அப்டேட்ஸ்!

கலக்கத்தில் அ.தி.மு.க மாஜிக்கள்…லஞ்ச ஒழிப்புத்துறை டு அமலாக்கத்துறை! அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்கள்மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளது தெரிந்ததே. இந்தநிலையில், சமீபத்தில் அந்த வழக்குகளின் மொத்த ஆவணங்களையும் ஆஃப் தி ரெக்கார்டாக கேட்டு வாங்கியிருக்கிறதாம் மத்திய அமலாக்கத்துறை. எஸ்.பி.வேலுமணி இதையடுத்து, அமலாக்கத்துறை ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று தீவிர முனைப்பில் இருக்கிறது … Read more

தமிழகத்தில் வருகிற 3ந்தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் – தமிழக தலைமை காஜி

தமிழகத்தில் வருகிற 3ந்தேதி ரமலான் பண்டிகை  கொண்டாடப்படும் என்று  தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் நோன்பு இருப்பது ஆகும். ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை இஸ்லாமியர்கள்  நோன்பு மேற்கொள்வர். இதையடுத்து 30 வது நாளில் ஷவ்வால் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.    ஆனால் இன்று ஷவ்வால் பிறை தெரியாத காரணத்தால் தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை … Read more

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது திமுக – எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி: மக்களை ஏமாற்றி வந்துள்ள திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார். மே தினத்தை ஒட்டி அண்ணா தொழிற்சங்கப்பேரவை சார்பில் கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “அதிமுக ஆட்சியின் போது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் கடுமையான மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக … Read more