கல்லா கட்டிய அரசு.. ஏப்ரலில் இதுவரை இல்லாதளவுக்கு உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்!

இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம் கடந்த் மார்ச் மாதத்தினை விட ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் 1, 67, 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி (CGST) 33,159 கோடி ரூபாயாகும். இதே எஸ்.ஜி.எஸ்.டி (SGST) 41,793 கோடி ரூபாயாகும். 3 பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல … Read more

மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு

நாடு முழுவதும் இன்றும் நாளை மறுதினமும், மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதி ஆகிய தினங்களில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை … Read more

திராவிட கருத்தரங்கம்: வெளிச்சத்திற்கு வரும் துர்கா ஸ்டாலின் சகோதரர்

திராவிட சமூகப் பேரவையின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, நடைபெறும் திராவிடக் கருத்தரங்கம் நிகழ்ச்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் அரசியலில் வெளிச்சத்திற்கு வருகிறார். திமுகவின் விமர்சர்கள் பலரும் திமுகவில் குடும்ப அரசியல் செல்வாக்கு செலுத்துவதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதற்கு திமுகவினர் மற்ற கட்சிகளில் மட்டும் என்ன குடும்ப அரசியல், வாரிசு அரசியல் இல்லையா என்று கிட்டத்தட்ட எல்லா கட்சிகளையும் மேற்கோள் காட்டி பதிலடிகொடுப்பதும் நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் … Read more

"விவேக்" சாலை || வரும் 3 ஆம் தேதி பெயர்ப்பலகை திறப்பு – அமைச்சர் தகவல்.!

இயற்கை மீதும், மரங்களின் மீது அன்பு கொண்ட, பசுமை காதலன் என்றழைக்கப்படும் மறைந்த நடிகா் விவேக், மரம் நடுதலை தன் வாழ்நாளில் மிகப்பெரிய பணியாக செய்து வந்தார்.  இவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டநிலையில், இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை, நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அருட்செல்வி … Read more

“முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இறந்ததில் உங்கள் `மாடலுக்கும்' பங்குண்டு..!" – வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் கோவை புலியகுளம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்த சங்கடங்களும் வரக்கூடாது என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கிறார். வானதி சீனிவாசன் இலங்கை: ஊழல், குடும்ப ஆட்சி, போர்க்குற்றம் – மக்களின் போராட்டமும் அரங்கேறும் அரசியல் மாற்றங்களும்! அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம். நாங்கள் பேசுவது நேரலையில் முழுமையாக வருவதில்லை. கேட்டால் தொழில்நுட்பக் கோளாறு என்கிறார்கள். … Read more

கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பெய்த ஆலங்கட்டி மழை..

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் பலத்த ஆலங்கட்டி மழை பெய்தது. கிருஷ்ணகிரியில் ஓசூர் அடுத்த சொக்கநாதபுரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாய நிலங்களில் பசுமைக்குடில்கள் சாய்ந்து விழுந்து பயிர்கள் சேதமடைந்தன.  இந்நிலையில், தருமபுரியின் நகர் பகுதிகள், பென்னாகரம் சாலை, குமாரசாமி பேட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், சேலம் மாவட்டம் ஆத்தூர், கரூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. Source link

சாலை விபத்தில் வாணியம்பாடி இளைஞர் மூளைச்சாவு: ஒன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு பறந்த இளைஞரின் இதயம்

வேலூர்: வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் சிக்கி வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதில், இளைஞரின் இதயம் இன்று ஒன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், மதனாஞ்சேரி அடுத்த குந்துக்கால்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ரவி (52). இவரது மகன் தினகரன் (21). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 7 … Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் மரணம் (video)

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தொம்பே பகுதியில் இருந்து பேரணியில் கலந்து கொள்ள வருகைத் தந்த 65 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   இவர் தனது மகனுடன் பேரணியில் கலந்து கொள்வதற்காக வருகைத் தந்துள்ளார்.  காவடி நடனம் ஆடுவதற்காக குறித்த நபர் சென்ற வேளை இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.  சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.   Source … Read more

அமெரிக்காவின் ஆன்டோவர் நகரில் கடந்து சென்ற மிகப்பெரிய சூறாவளிக்காற்று..!

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆன்டோவர் நகரில் மிகப்பெரிய சூறாவளி காற்று கடந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. விச்சிட்டா நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தூரத்தில் வீசிய அந்த சூறாவளி காற்று பல வீடுகளையும், கட்டிடங்களையும் சேதப்படுத்தியது. மேலும் மின் இணைப்பு துண்டிப்பால் ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சூறாவளி, பட்லர் மற்றும் செட்விஜ் கவுண்டிகள் வழியே கடந்து செல்லும் போது பயங்கரமாக சுழன்று சென்றதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். … Read more

கர்நாடகத்தில் அமைகிறது இந்தியாவின் முதல் சிப் தொழிற்சாலை.!

ஐஎஸ்எம்சி நிறுவனம் 22 ஆயிரத்து 900 கோடி ரூபாய் முதலீட்டில் கர்நாடகத்தில் சிப் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. ஐஎஸ்எம்சி நிறுவனத்துடன் இதற்கான உடன்பாடு கையொப்பமாகியுள்ளதாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அபுதாபியைச் சேர்ந்த நெக்ஸ்ட் ஆர்பிட் வெஞ்சர்ஸ் மற்றும் இஸ்ரேலின் டவர் செமிகண்டக்டர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் ஐஎஸ்எம்சி ஆகும். கர்நாடகத்தில் அமையவுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய சிப் தொழிற்சாலையில் நேரடியாக 1500 பேருக்கும் மறைமுகமாகப் பத்தாயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.  … Read more