90வது பிறந்த நாளில் திருப்பியளிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் விசென்சா : இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இத்தாலிய சிறுமி ஒருவரின் 13வது பிறந்தநாள் கேக்கை அமெரிக்க வீரர்கள் திருடிச் சென்றுள்ளனர். கடந்த ஏப்.,28 அன்று 90வது பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு அமெரிக்க ராணுவத்தினர் கேக் வழங்கி தங்களால் ஏற்பட்ட வடுவை மறக்கச் செய்தனர். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க வீரர்கள் இத்தாலியின் விசென்சாவில் ஜெர்மன் வீரர்களுடன் சண்டையிட்டனர். அதில் அமெரிக்க டாங்கிகள் அழிக்கப்பட்டு 19 வீரர்கள் … Read more

ஜி.எஸ்.டி வருவாய் அதிகரிப்பு: ஏப்ரல் மாதத்தில் வரி வசூல் புதிய உச்சத்தை எட்டியது

புதுடெல்லி, நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தொழிற்சாலை  நடவடிக்கைகளும் கொரோனாவுக்கு முந்தைய கால அளவுக்கு உற்பத்தியை அதிகரித்துள்ளன. இதனால், ஏற்றுமதி, இறக்குமதியும் இயல்பான அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது.  கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலானது. மார்ச் மாத வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக இருந்தது. … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: படோசாவை வீழ்த்தி 3 வது சுற்றுக்கு முன்னேறினார் ஹாலெப்..!

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், உலகின் நம்பர் 2 வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார். 1 மணி 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பவுலா படோசாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

"மரியுபோல் வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்" – கீவ் வாசிகள் போராட்டம்

கீவ், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் வீரர்கள் துளியும் அஞ்சாமல் ரஷியாவுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது. இந்த நிலையில், உக்ரைனில் மரியுபோல் நகர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கீவ் வாசிகள் போராட்டம் நடத்தினர்.  தங்கள் உறவுகள் மரியுபோலில் … Read more

நிலக்கரி தட்டுப்பாட்டால் மேட்டூரில் மின் உற்பத்தி நிறுத்தம்

Mettur thermal power plants stop Electricity production due to coal shortage: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் கொண்ட பழைய அனல் மின் நிலையம் ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின்‌ மூலம் நாளொன்றுக்கு 1,440 … Read more

சென்னை அருகே இரட்டை கொலை., 16வது நாள் துக்க நிகழ்ச்சில் நடந்த கொடூரம்.!

 சென்னை அருகே பதினாறாவது நாள் கருமாதி தூக்கத்தின் உணவு பரிமாறும்போது, சோற்றில் மண் விழுந்த தகராறில், இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூர் அருகே துக்க நிகழ்ச்சியில் மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூர், மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்த அருண், சதீஷ், தினேஷ் ஆகிய 3 பேரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக ஊரை … Read more

வெப்ப அலைகள்: 122 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியுள்ளது; என்ன செய்யப் போகிறது இந்தியா?!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாகவே சராசரி வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உச்சம் தொட்டிருக்கிறது. ஏப்ரலின் சராசரி வெப்பநிலையைவிட இது 10 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதல் என்கின்றன தரவுகள். டெல்லியைப் பொறுத்தவரை கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஏப்ரலில் வெப்பம் அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள். வெப்பநிலை மார்ச் மாதம் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 92 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிக அதிகமான வெப்பநிலை … Read more

மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை திருட்டு..

மதுரை மாவட்டத்தில், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 100 சவரன் நகை திருடு போனதாக கூறப்படும் சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீரபஞ்சான் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற அந்த நபர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் பின் பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர், அது குறித்து முருகனுக்கு தகவல் அளித்துள்ளார். முருகன் வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 100 சவரன் நகை, 60,000 … Read more

கடலூர்; தண்ணீர் வரவில்லை, சாலைகள் மோசம்; கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்

கடலூர்: வையங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தின் போது ஊராட்சி செயலரால் வாசிக்கப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நடைபெறாத நிலையில், தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்திட மறுத்து, ஊராட்சித் தலைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வையங்குடி ஊராட்சியின் தலைவர் மனோன்மணி. இவரது தலைமையில், ஊராட்சி செயலர் முரளி முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் முரளி, கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், அதற்கான செலவு விபரம் குறித்து வாசித்து, ஊராட்சியில் … Read more

அதளபாதாளத்தை அடைந்த இலங்கையின் நிதி கட்டமைப்பு – செய்திகளின் தொகுப்பு

நாடு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து உத்தியோகபூர்வமாக வங்குரோத்து அடைந்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலைமையில், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள், வெளிநாட்டு வர்த்தகம் என்பன நின்று போயுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி … Read more