'பிரின்சிபால்-பியூன்' இடையே தகராறு: ஒருவரையொருவர் பிரம்பால் தாக்கிக் கொண்ட வைரல் வீடியோ

ஜார்க்கண்டில் பள்ளி முதல்வரும், பியூனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் இருவரும் ஒருவரையொருவர் பிரம்பால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கருணா சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இப்பள்ளியில் பியூனாக வேலை செய்து வரும் ஹிமான்ஷு திவாரி நேற்று முன்தினம் தாமதமாக பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தலைமை ஆசிரியர் கருணா சங்கர், ஹிமான்ஷுவிடம் … Read more

பிரித்விராஜிடம் நேரிலேயே கோரிக்கை வைத்த ஸ்ரீநிதி ஷெட்டி

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கன்னட உலகைத் தாண்டி தென்னிந்திய அளவில் பிரபலமான முகமாக மாறிவிட்டார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த நிலையில் தொடர்ந்து பல மீடியாக்களுக்கு அவர் பேட்டி அளித்து வருகிறார். ஏற்கனவே ஒரு பேட்டியில் அவர் மலையாள திரையுலகம் பற்றி கூறும்போது, மலையாளத்தில் தான் முதன்முதலாக பார்த்தது துல்கர் சல்மான் நடித்த சார்லி படம்தான் என கூறியிருந்தார். தற்போது இன்னொரு பேட்டியில் மலையாள திரையுலகம் பற்றி மீண்டும் அவர் சிலாகித்துக் … Read more

சிறு வணிகர்களுக்கு மேலும் பிரச்சனை.. வணிக சிலிண்டர்கள் ரூ.100-க்கு மேல் அதிகரிப்பு!

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர்களுக்காக விலையானது, சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மாத்திற்கான வணிக சிலிண்டரின் விலை 102.50 ரூபாய் அதிகரித்து, 2508 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. எந்த வங்கியில் பெஸ்ட்.. எங்கு எவ்வளவு வட்டி 2வது மாதமாக அதிகரிப்பு … Read more

ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் உடனடி பணம் ரிட்டன்; IRCTC சூப்பர் ஆஃபர்

IRCTC offers easy pay option to book quick train ticket: ரயிலில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ஏதேனும் காரணத்தால் ரத்து செய்யப்பட வேண்டியிருந்தாலோ, பணத்தைத் திரும்பப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் (IRCTC iPay Refund). ஆனால் இப்போது அது நடக்காது. உண்மையில், இப்போது ரயில்வே உடனடியாக பணத்தை திரும்ப பெறுவதற்கான புதிய சேவையை வழங்குகிறது. IRCTC (இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் … Read more

தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக திமுக அரசு இருக்கும் – முதல்வர் முக ஸ்டாலின்.!

மே தின நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்ற மரியாதை செலுத்தினார். இன்று சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  உழைப்பாளர்களை குறிக்கும் விதமாக மே தினத்தை ஒட்டி, சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் மே தின நினைவுச் சின்னத்திற்கு மரியாதையை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில், மனிதனை மனிதனே … Read more

`அவனின்றி' ஓர் அணுவும் அசையாது; காணாமல் போகும் டூ வீலர்கள்; கண்டுபிடித்துத் தரும் காவல்துறை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் ஸ்கூட்டர் சென்னையில் திருடு போனது. ஞாயிற்றுக்கிழமையன்று பகலில், `மருத்துவமனை அவரசத் தேவை’ என்று சொல்லி பக்கத்து வீட்டுக்காரர், வாங்கிச் சென்றுள்ளார். இரவு 9 மணியளவில் வண்டியைக் கொண்டுவந்து, வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, மூன்றாவது மாடியில் இருக்கும் நண்பரிடம் சாவியைக் கொடுத்துள்ளார். மறுநாள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகத்துக்குப் புறப்படுவதற்காக மாடியிலிருந்து இறங்கிவந்த நண்பரின் கையில் சாவி இருக்கிறது. ஆனால், வண்டி? பதறிப்போய், பக்கத்து … Read more

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொண்ட விவகாரம்.. டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொண்ட விவகாரம் தொடர்பாக டீன் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அப்போது, மாணவர்கள் எடுத்த உறுதிமொழியில், சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கியிருந்ததாக சர்ச்சை எழுந்தது. தேசிய மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் இருந்து உறுதிமொழி படிவம் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும், தன்னிடமும், பேராசிரியரிகளிடம் அதனை காட்டாமல் மாணவர் சங்க … Read more

உயிரிழப்புகள் இன்றி திருவிழாக்கள் நடத்த நடவடிக்கை: பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் உறுதி

நாகப்பட்டினம்: கோயில் திருவிழாக்களில் உயிரிழப்புகள் நடக்காத வகையில் திருவிழாக்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீசுவர சாமி கோயிலின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தேர்த் திருவிழா நடைபெற்றது. திருச்செங்காட்டாங்குடி மேலவீதியை சேர்ந்த தீபன்ராஜ் (30) தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தார். அப்போது தீபன்ராஜின் வயிற்று பகுதியில் தேர் சக்கரம் … Read more

வீட்டுக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்டிய கர்நாடக பாஜக தொண்டர்: மே 3-ல் திறப்பு விழா

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் தான் கட்டிய வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சூட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரியைச் சேர்ந்தவர் ஹாலேஸ் (56). பாஜக தொண்டரான இவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். இந்நிலையில் தனது நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டுக்கு குடும்பத்தினர் சத்ரபதி சிவாஜியின் பெயரை சூட்ட விரும்பினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஹாலேஸ், … Read more