சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலை – 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் ஓரளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வர தெரிவித்துள்ளார். இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலையால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, கிரியெல்ல, எலபாத்த, அயாகம, … Read more

Tamil News Today Live: ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு

Go to Live Updates Tamil Nadu News Updates: ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு. அவருக்கு வயது 46. நெல்லை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து. 6 பேர் சிக்கிய நிலையில் 2 பேர் உயிருடன் மீட்பு. 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் … Read more

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

ராமேஸ்வரத்தில் கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகின்றன. ராமேஸ்வரத்தில் இன்று கடல் நீர் திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் உள்ள பவளப் பாறைகள் வெளியே தெரிகின்றன. இதேபோன்று சாமி சிலை களும் தெரிகின்றன. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. அக்னி தீர்த்த கடற்கரையில் கடலுக்கு உள்ளே இருந்த பழைய சாமி சிலைகள் மற்றும் பவள … Read more

`திருக்குறளை தேசிய நூலாக்கணும்!' – 2 மணி நேரத்தில் 133 திருவள்ளுவர் ஓவியங்கள் வரைந்து மாணவர் சாதனை

தூத்துக்குடி, சுப்பையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆல்வின். இவரின் மனைவி முத்துலட்சுமி. இந்தத் தம்பதியின் மகன் தனுஷ் டார்வின். இவர், தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் உடைய மாணவரான தனுஷ் டார்வின், மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடந்த பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும், பல விருதுகளையும் பெற்றுள்ளார். காகிதத் தட்டுகளில் வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியங்கள் … Read more

தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.32 லட்சம் மோசடி.. 3 பேர் கைது..!

சென்னை அடுத்த அம்பத்தூரில் தனியார் வங்கியில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கே.கே நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில், அண்ணா நகரைச் சேர்ந்த தமீம் அன்சாரி மற்றும் அவனது நண்பர்கள், சுமார் 210 சவரன் தங்க நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். வங்கியில் அடகு … Read more

கருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த அண்ணாமலை – அரசியலும் ஆன்மிகமும் கலந்து திமுகவுக்கு விடுத்த எச்சரிக்கை

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தெற்கு வீதிக்கு கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திமுக வசமுள்ள திருவாரூர் நகர்மன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக சார்பில் மே 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பாஜகவினர் திரளாக பங்கேற்றனர். மேலும், ஆர்ப்பாட்டத்துக்கு … Read more

அணுகுண்டு தாக்குதல் எவ்வளவோ மேல்: இம்ரான் கான் வேதனை

மார்டன்: பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன் சாப் கட்சி சார்பில் மார்டன் நகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும் கட்சி தலைவருமான இம்ரான் கான் பேசியதாவது: அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகளின் சதியால் எனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பல்வேறு ஊழல் விவகாரங்களில் சிக்கிய திருடர்கள் தற்போது நாட்டை ஆட்சி செய்கிறார்கள். திருடர்களிடம் நாட்டின் அதிகாரத்தை கொடுப்பதைவிட பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவது நல்லது. பிரிட்டனில் இருந்து சிலர் (நவாஸ் ஷெரீப்) பாகிஸ்தானின் விதியை … Read more

இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது: ராஜ்நாத் சிங்!

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ஐசிஏஐ) மத்திய இந்திய பிராந்திய குழுவின் லக்னோ கிளை ஏற்பாடு செய்த நிதிச் சந்தை குறித்த பயிலரங்கில் பாதுகாப்பு அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பொருளாதாரம் தொடர்பான புதிய முன்னேற்றங்களைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு தெரியப்படுத்தி இந்தத் துறையுடன் தொடர்புடைய எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க அவர்களைப் பயிற்றுவிப்பதும் ஊக்குவிப்பதும் பயிலரங்கின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார். வணிகச் சூழலை சரியான திசையில் வழிநடத்துவதில் பட்டயக் கணக்காளர்களின் … Read more

‘என் உயிரை பறிக்க சதி நடக்கிறது’ – இம்ரான் கான் பரபரப்பு தகவல்!

பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன. இதனிடையே, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதன்படி, நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன் சாப் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் … Read more

இன்று மின் துண்டிப்பு இல்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

விசாகப் பூரணை தினம் காரணமாக நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு நாட்டில் மேலும் சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இன்றும், நாளையும் மதுபானசாலைகள் மூடப்படுவதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் இந்த தினங்களில் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயல்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more