இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: இறுதிபோட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

இத்தாலி , இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று  நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்,ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர் . பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-6,6-3,6-3  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று   இத்தாலியன் ஓபன் இறுதிப்போட்டிக்கு சிட்சிபாஸ் முன்னேறினார் .

சிரியாவில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது. இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பனியாஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து … Read more

விவசாயிகள் நிதி உதவி எப்போது கிடைக்கும்? உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? செக் செய்வது எப்படி?

மத்திய அரசு விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 11 வது தவணையை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க உள்ளது. சென்ற ஆண்டு மே மாதம் 15-ம் தேதி விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. எனவே இந்த ஆண்டும் இதே தேதியில் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இப்போது வரை மத்திய அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி! … Read more

வி.ஐ.பி சமையல் டிப்ஸ்: சாஃப்ட் சப்பாத்தி; துணி மாதிரி மடிக்கலாம்!

ஆரோக்கியமான உணவு என்று வரும்போது சப்பாத்திக்கு முக்கிய இடம் உண்டு. கோதுமை மாவில் செய்யப்படும் இந்த சப்பாத்தி சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஆனால் சப்பாத்தி செய்யும்போது அது மிருதுவாக வரவில்லை என்று பலரும் புலம்புவது உண்டு. சப்பத்திக்கு அழகே ஃசாப்ட்நஸ்தான் ஆனால் சப்பாத்தி செய்யும்போது பலமுறை முறுக்கு போன்று முறுமுறுவென இருக்கும். இதனால் சப்பத்தி மீதுள்ள ஆசையே போய்விடும். ஆனால் இந்த … Read more

அடடா., அடுத்தது டிவிட்.! இரட்டை மகிழ்ச்சியில் டிடிவி தினகரன்.! 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் 1712-ல் பிறந்து 1752-ல் மறைந்த புனித தேவசகாயம் அவர்களுக்கு, வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தின் போப்பாண்டவரால் ‘புனிதர் பட்டம்’ வழங்கப்படவுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில், இந்தியாவில் பொது நிலையில் உள்ள ஒருவருக்கு புனிதர் பட்டம் முதல்முறையாகவும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இப்பெருமை முதன்முறையாகவும் வழங்கப்படுவது சிறப்புக்குரியதாகும். இறைபணியோடு, சாதி, மத, ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்திட பாடுபட்ட … Read more

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் வகிக்கும் பதவிகளில் குடும்பத்தினரின் தலையீட்டை தடுக்கவும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில் அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ தலையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ” மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!” என்று பெண்ணின் உயர்வைப் போற்றிப் பாடினார் கவிமணி தேசிக விநாயகம். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கினார் மகாகவி பாரதியார். … Read more

இலங்கை: ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு: ரணில் விக்ரமசிங்க, இலங்கை பிரதமராக பதவியேற்று இரண்டு நாள் கழித்து அவரின் அமைச்சரவையில் புதிதாக நான்கு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நெருக்கடியான சூழலில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர், ஏற்கனவே 5 முறை பிரதமராகவும், 2 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு … Read more

இந்தியாவின் அந்நிய செலாவணி 13,600 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி உச்ச நிலையாக 64 ஆயிரத்து 200 கோடி டாலர் கைவசம் இருந்தது. அன்றைய தேதியில் இருந்து தொடர்ந்து அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவடைந்து வருகிறது. தற்போது 59 ஆயிரத்து 595 கோடி டாலர் அதாவது இந்திய மதிப்பில் 45 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் … Read more

ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதற்கு பின் இவ்வளவு இருக்கிறதா!! ஜெயபாலன் சுவாரசிய தகவல்

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டது குறித்தும், இலங்கையில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்தும் இலங்கை எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ஜெயபாலன் சில முக்கிய தகவல்களையும், கருத்துக்களையும் கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்திருப்பத்தில் இருக்கும் பின்புலங்கள் என்ன என்பது குறித்து அவர் கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க குறித்து அவர் கூறுகையில், இலங்கை இராணுவம் 100 சதவீதம் அவரை ஆதரிக்கிறது. இந்த நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்கு தேவையாக இருந்தது என்னவென்றால், தங்களுக்கு … Read more

நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா- கேன்ஸ் திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக தகவல்

மும்பை: அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர் உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இணைந்து பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்சய்குமார் கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதன் முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க உள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார். நேற்று காலையில், நான் … Read more