04 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று, (14) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இவ்வாறு நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (14) பிற்பகல், ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்                                    – வெளிநாட்டலுவல்கள் 02. திரு.தினேஷ் குணவர்தன                                     – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண … Read more

ஓய்வை அறிவித்து, முடிவை மாற்றிய ராயுடு; சிஎஸ்கே அணிக்குள் பிரச்சனை என இன்சைடர் தகவல்

Shamik Chakrabarty Rayudu retirement flip-flop: CSK insider says there are ‘slight problems in the family’: சிஎஸ்கே அணியின் முன்னனி பேட்ஸ்மனான அம்பதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்து, பின்னர் முடிவை மாற்றியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இன்சைடர் ஒருவர் கூறுகையில், “குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள்” இருப்பதாகவும், விரைவில் அவை சரிசெய்யப்படும் என்றும் உறுதியளித்தார். சனிக்கிழமையன்று, அம்பதி ராயுடு ஒரு ட்வீட்டை வெளியிட்டார், அதில் தனது ஓய்வு … Read more

லாக்அப் மரணத்துக்கு தமிழக அரசின் தண்டனை பணியிடை மாற்றம் தானா?, காத்திருப்போர் பட்டியல்.! கொந்தளிக்கும் விஜயகாந்த்.!

விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  “தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணை கைதிகள் மர்மமான முறையில் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த மாதம் 18 ஆம் தேதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து … Read more

தேனி: வீரபாண்டி திருவிழா தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகின்ற மே 17 – ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பக்தர்கள் கடந்த செவ்வாய் முதல் முக்கிய நிகழ்வுகள் தொடங்கியிருந்தாலும்கூட ஏப்ரல் 20 – ம் தேதி திருவிழாவுக்குக் கம்பம் நடு நிகழ்வு முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் … Read more

பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

செங்கல்பட்டு அருகே 60 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த டிராக்டர் மீது மோதாமல் இருக்க திருப்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. சென்னை கோயம்பேட்டிலிருந்து போளூர் சென்ற அரசுப் பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சென்றபோது சாலையை கடக்க டிராக்டர் ஒன்று குறுக்கே நின்றுள்ளது. அப்போது, பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடிக்க முயன்ற நிலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதன் முன் சக்கரத்தின் அச்சு முறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை … Read more

தமிழகத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் இன்று ஆண்கள் 22, பெண்கள் 13 என மொத்தம் 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,591 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 16,158 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 51 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 408 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா … Read more

நாட்டில் போதுமான அளவு உணவுதானியம் கையிருப்பில் உள்ளது – மத்திய அரசு

நாட்டில் போதுமான அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவு மற்றும் பொதுவழங்கல் துறைச் செயலர் சுதான்சு பாண்டே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாட்டில் கோதுமை விலை திடீரென உயர்ந்துள்ளதாகவும், கட்டுப்படுத்தப்படாத வணிக முறைகளே விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்றும் தெரிவித்தார். அரசின் முதன்மையான இலக்கு விலைவாசி உயர்வையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது ஆகும் எனத் தெரிவித்தார் Source link

மர்மமாக இறந்த மலையாள நடிகை! பிரேத பரிசோதனை தெரியவந்த அதிர்ச்சி தகவல்

 கேரள மாநிலம் – காசர்கோட்டை சேர்ந்த மலையாள நடிகையும் மாடல் அழகியுமான சகானா  (வயது 20) நேற்று குளியறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   சகானா மாடலிங்கோடு மலையாள படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவர் சஜாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  கோழிக்கோடு பகுதியில் உள்ள சஜ்ஜத் வீட்டில் இருவரும் வசித்து வந்து பின்னர் வாடகை வீட்டிற்குக் குடி பெயர்ந்துள்ளனர். சகானா நேற்று (மே 12) தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் … Read more

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 5 மற்றும் கடலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை, மதுரை, புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தவிர, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பிரிட்டனில் இருந்து வந்த தலா ஒரு பயணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று மொத்தம் 15,850 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 22 ஆண்கள் … Read more

விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரம் – தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விசாரணை கைதிகளின் மர்ம மரணம் தடுக்கப்படும். தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் வேலியே பயிரை மேய்ந்ததற்கு சமமாகிவிடும் என தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்…ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஆய்வு மையத்தில் ககன்யான் ஆய்வு திட்ட பரிசோதனை வெற்றி