#தமிழகம் || கந்துவட்டி கும்பல் அராஜகம்? கத்தி கதறும் மனைவி.! புகார் அளித்தும் கண்டுகொள்ளாத தமிழக போலீஸ்.!

ஈரோடு அருகே வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் கடுமையாக தாக்கியதாக, பாதிக்கப்பட்டவரின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி சாலை பகுதியில் சண்முகம் என்பவர் தனது மனைவி மாரியம்மாள் உடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியை சண்முகம், பெரிய வட்டம் பகுதியில் பிரவீன் என்பவரின் தாயாரிடம் வட்டிக்கு 6000 ரூபாய் வேறு ஒருவருக்கு வாங்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரவீன் உள்ளிட்ட சிலர் சண்முகத்தின் … Read more

வெடிக்கும் உட்கட்சித் தேர்தல் பஞ்சாயத்து – கூண்டோடு ராஜினாமா செய்த திருப்பூர் திமுக நிர்வாகிகள்!

திமுக உட்கட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முடித்த கையோடு உட்கட்சித் தேர்தலுக்கான பணியில் இறங்கியுள்ளது. தற்போது நகர தலைவர், பேரூர் கழக பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக அண்ணா அறிவாலயம் `பெண்ணுரிமை பேசிக்கொண்டே பெண்ணடிமையை ஊக்குவிப்பதுதான் திராவிட மாடலா?’ -திமுக-வுக்கு ஓபிஎஸ் கண்டனம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கொங்கு மண்டலத்தில்தான் அதிக பிரச்னை வெடித்தது. இப்போது உட்கட்சித் தேர்தலின்போதும் கொங்கு திமுக தகிக்க தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக … Read more

விசைத்தறிப்பட்டறையில் மின்சாரம் தாக்கி 5 தொழிலாளிகள் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் பலி

நாமக்கல் ராசிபுரத்தில் விசைத்தறிப்பட்டறையில் மின்சாரம் தாக்கி 5 தொழிலாளிகள் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். வி.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் விஜயராகவன் என்பவருக்கு சொந்தமான பட்டறையில் வழக்கம் போல தொழிலாளர்கள் 5 பேர் வேலை செய்து வந்தனர். அப்போது திடீரென அடுத்தடுத்திருந்த 10 விசைத்தறிகளிலும் மின்சாரம் பாய்ந்ததில், தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில் ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் ராசிபுரம் போலீசார் … Read more

விசாரணை கைதிகள் மர்ம மரணம் | உறுதியான நடவடிக்கை தேவை – விஜயகாந்த்

சென்னை: விசாரணை கைதிகள் மர்ம மரணம் விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணைக் கைதிகள் மர்மமான முறையில் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் 18-ம் தேதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் … Read more

நேற்று டெல்லி; இன்று பஞ்சாப்.. தொடரும் தீ விபத்து சம்பவங்கள்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு நானக் தேவ் மருத்துவமனையில் இன்று பிற்பகலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. புறநோயாளிகள் பிரிவின் அருகில் இருந்த மின்மாற்றிகளில் உள்ள ஆயில் டேங்குகளில் திடீரென தீப்பற்றியது. அவை வெடித்ததில் அருகில் உள்ள மருத்துவமனைக் கட்டடத்திலும் தீப்பற்றியது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மேலும், புகை மண்டலமாக … Read more

ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி: தடை விதித்த இங்கிலாந்து!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது ரஷ்யாவும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. அதேசமயம், புடினின் குடும்பத்தினர் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் ரகசிய … Read more

Maadhaar App: கைக்குள் அனைத்தும் இருக்க கவலை ஏன்? எளிதாக ஆதார் கார்டு அப்டேட் செய்யலாம்!

Update your Aadhaar: ஆதார் இல்லாமல் எந்த வேலையும் இப்போது செய்வது கடினம். எந்த வேலைக்கும் ஆதார் அட்டை அவசியமாக கோரப்படுகிறது. அது இல்லாமல், வேறு வழியில்லை இன்றே சொல்லலாம். அது அரசு வேலையாக இருந்தாலும் சரி, தனியார் பணியாக இருந்தாலும் சரி. ஆதார் அட்டை எல்லா இடங்களிலும் அவசியமான ஆவணமாகிவிட்டது. இருப்பினும், ஆதார் அட்டையில் உங்களின் தகவல்கள் தவறாக பதிவிடப்பட்டிருந்தால், உடனடியாக அந்த தகவல்கள் திருத்தப்பட வேண்டும். இதற்காக சில எளிய வழிமுறைகளை உங்களுக்காக தெரிவிக்க … Read more

ரணிலை புரிந்துகொண்ட தமிழர்களும் புரிந்துகொள்ளாத சிங்களவர்களும்

Courtesy: ஜெரா ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வீசிய ராஜபக்ச பெருஞ்சூறாவழியில் முதலில் தூக்கிவீசப்பட்டவர் ரணில் விக்ரமசிங்கதான். இனி அவருக்கு மீட்பே இல்லை, தன் சொந்தத் தொகுதியில்கூட வெல்ல முடியாத நிலைக்கு அரசியலில் சரிவைச் சந்தித்துவிட்டார் எனக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்தச் சரிவோடு அவரோடு ஒட்டியிருந்த பலரும் கட்சி மாறினார்கள். இவ்வாறு தனித்துவிடப்பட்டிருந்தவருக்குக் கட்சிக்குக் கிடைக்கவேண்டிய தேசியப்பட்டியல் என்ற ஓர் … Read more

ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் ; ஜி 7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவுக்கு வலியுறுத்தல்

ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஜி 7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன. ஜெர்மனியின் பாலிடிக் கடற்கரையில் நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டிற்கு பிறகு அந்த நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூடாது எனவும் சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கை உலக அளவில் உணவு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது எனவும், இது ஏழை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், … Read more