இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கைது?

இலங்கையில் பல வாரங்களாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டமாக வெடித்தது. பொதுமக்களின் கோபத்துக்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.  இதனால் அதிருப்தியடைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால் இலங்கை போர்க்களமாக மாறியது.  மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட ஆளும் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் வீடுகள் தீக்கரையாகின. மேலும், மஹிந்த … Read more

ஐ.பி.எல் பிளே ஆஃப்: 4வது இடத்திற்கு முட்டி மோதும் 5 அணிகள்!

ipl 2022 playoffs Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 15 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கிளைமேக்சான பிளே ஆஃப் சுற்றுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நடப்பு தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதியதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமாடி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. 16 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் 2வது இடத்திலும், தலா 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்ராயல் … Read more

ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

ஆவின் பால் நிறுவனம் அதிகாரபூர்வ இணையதளத்தில் கால்நடை ஆலோசகர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.வி.எஸ்.சி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : ஆவின் பால் நிறுவனம் பணியின் பெயர் : கால்நடை ஆலோசகர் கல்வித்தகுதி : பி.வி.எஸ்.சி பணியிடம் : இந்தியா முழுவதும்  தேர்வு … Read more

`ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் சொல்லிட்டாரு..' – கே.என்.நேரு

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலப் பணிக்கு நிலம் கிடைக்காததால், கடந்த 8 ஆண்டுகாலமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் பெறப்பட்டு எட்டு ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, கலெக்டர் சிவராசு, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் நாராயணசாமி ஆகியோர் இன்று … Read more

பெற்ற மகளை தந்தையே பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் – தந்தை கைது

மதுரை சோழவந்தான் அருகே கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளை பீர் பாட்டிலால் குத்தியதந்தை கைது செய்யப்பட்டார். முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான முரளியின் பிளஸ் 1 படிக்கும் மகள் ராஜேஸ்வரி, ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த முரளி, மகளை கண்டித்தும் அவர் கேட்காததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த முரளி, பெற்ற மகள் என்றும் பாராமல் மதுபோதையில் ராஜேஸ்வரியை பீர் பாட்டிலால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். சிறுமியை மீட்ட … Read more

சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: அமைச்சர் மெய்யநாதன் 

சென்னை: சென்னையில் வரும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது என்று காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக முதல்வர் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, தமிழகத்தில் சென்னை … Read more

அரசு மருத்துவமனைகளில் ரூ.5-க்கு உணவு வழங்கும் திட்டம் – தெலங்கானாவில் அமைச்சர் தொடக்கம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள இதர மாவட்ட மக்களும் ஹைதராபாத் நகருக்கு வந்து மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இதனால், சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும் அவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்களுக்கும் ரூ.5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு தொடங்கி உள்ளது. கடந்த வியாழக்கிழமை அமைச்சர் ஹரீஷ் ராவ் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இவருடன் பல அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் ரூ. 5-க்கு வழங்கப்படும் உணவை … Read more

iPhone 15: வழிக்கு வந்த ஆப்பிள் – 2023’ல் டைப்-சி உறுதி!

ஐபோன் 13 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இப்போது பலர் ஐபோன் 14 வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். ஐபோன் 14 இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஐபோனில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஐபோன் 15 குறித்து பெரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவது இதுவே முதல் முறை. அதன்படி, ஐபோன் 15 இல் லைட்னிங் போர்ட் … Read more

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை… பொதுப்போக்குவரத்து 1,500 தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க டெல்லி அரசு ஒப்புதல்

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பொது போக்குவரத்துக்காக ஆயிரத்து 500 தாழ்தள மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் இருந்து உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்தம் 11 வழித்தடங்களில் 75 பேருந்துகளை இயக்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் மற்றும் பேட்டரி மாற்றும் நிலையங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. … Read more

ஆடை இல்லாமல் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்ட ரஷ்ய வீரர்கள்: வெளிவரும் பகீர் பின்னணி

உக்ரைனில் கலகம் செய்த ரஷ்ய வீரர்கள் பலர் ஆடைகள் இல்லாமல், கைகால்கள் கட்டப்பட்டு, லொறிகளில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் பலர் கலகத்தில் ஈடுபடுவதாகவும், போருக்கு தயங்குவதாகவும் தகவல் வெளியான நிலையில், சிறப்பு தளபதி ஒருவரை விளாடிமிர் புடின் நிர்வாகம் உக்ரைனுக்கு அனுப்பி வைத்தது. குறித்த தளபதியின் உத்தரவை அடுத்தே, கலகத்தில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள் ஆடை இல்லாமல், கைகால்கள் கட்டப்பட்டு குண்டுகட்டாக லொறிகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, உக்ரைன் மீதான … Read more