6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்தியன் ரயில்வே..!

இந்தியன் ரயில்வேஸ் கடந்த 6 ஆண்டுகளில் அவசியமில்லை என 72,000 பணியிடங்களை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக ஊழியர்கள் பணியாற்றும் ஒரு நிறுவனமாக இந்திய ரயில்வேஸ் இருந்தது வந்தது. அதில் பல வேலைகளைச் செய்ய புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளதால், 72,000 பணியிடங்களை நீக்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ‘Unemployment Insurance” பற்றி தெரியுமா உங்களுக்கு? பரிந்துரை கடந்த 6 ஆண்டுகளில் இந்தியன் ரயில்வேஸ் நிறுவனத்திலிருந்து 81,000 பணியிடங்களை நீக்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அதில் குரூப்-சி மற்றும் குரூப்-டி … Read more

தடுப்பூசிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் கல்தா கொடுக்கும் ஓமிக்ரான் மாறுபாடுகள் BA 4 மற்றும் BA 5

கொரோனாவின் தாக்கம் உலகில் முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டால், அதை தவறு என்று சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸின் ஓமிக்ரான் விகாரங்கள் BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றை கொரோனா தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்த இரண்டு வகை விகாரங்களும் தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறமையை பெற்றுவிட்டன. கொரோனா பாதிப்புகள் ஏற்படுத்தும் அச்சமும் உலகை … Read more

சென்னை-திருப்பதி ரயில்வே சேவை திடீர் ரத்து.. தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.!

சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கக்கூடிய 2 ரயில்கள் வரும் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணமாக சென்னையில் இருந்து கோவை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் குறிப்பிட்ட 6 ரயில்கள் வரும் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட கூடிய இரண்டு … Read more

`பெண்ணுரிமை பேசிக்கொண்டே பெண்ணடிமையை ஊக்குவிப்பதுதான் திராவிட மாடலா?' -திமுக-வுக்கு ஓபிஎஸ் கண்டனம்

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மாமன்றக் கூட்டத்தின்போது, தங்களுக்கு சீட் ஒதுக்காதது குறித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மேயர் இந்திராணியிடம் முறையிடச் சென்றனர். அப்போது, மேயரின் கணவர் அவர்களிடம் பஞ்சாயத்து நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது அதனைப் படமெடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை தி.மு.க-வினர் தள்ளிவிட்டதில், செய்தியாளர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி இந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இந்தச் சம்பவம் தொடர்பாக தி.மு.க-வுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “மதுரை மாநகராட்சி … Read more

சட்டவிரோத லாட்டரி மூலம் ரூ.62 லட்சத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை

ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் அருகே லாட்டரி மூலம் 62 லட்சம் ரூபாயை இழந்த விசைத்தறி உரிமையாளர், வீடியோ வெளியிட்ட பின் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லப்பாளையம் முல்லைநகரைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளரான ராதாகிருஷ்ணன் சட்டவிரோத லாட்டரி விற்பனை மூலம் அதிக பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொள்ளபோவதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மேலும், இவரது மரணத்திற்கு கருங்கல்பாளையம் 39வது வார்டு கவுன்சிலரின் கணவர் செந்தில் … Read more

மதுபோதையிலிருந்த பயணி தாக்கி உயிரிழந்த நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: பணியிலிருக்கும்போது பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இன்று (மே 14) அதிகாலை 3.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் … Read more

நாட்டின் அமைதியை பாஜக சீர்குலைக்கிறது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

உதய்பூர்: ‘‘நாட்டின் அமைதியை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சீர்குலைக்கின்றன என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸின் 3 நாள் ‘‘சிந்தனை கூட்டம்’’ நேற்று தொடங்கியது. கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி உட்பட சுமார் 400 மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியால் நாம் பலன் அடைந்துள்ளோம். அந்த வகையில் கட்சிக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம். … Read more

கரோனாவா? – வடகொரியாவில் இதுவரை காய்ச்சலுக்கு 27 பேர் பலி

வடகொரியாவில் காய்ச்சல் காரணமாக 27 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த உயிரிழப்புகள் கரோனா காரணமாகத்தான் எற்பட்டுள்ளதா? என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை. உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரம் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது … Read more

இலங்கையின் அரசியல் நெருக்கடி! துரத்தியடிக்க வேண்டிய பொது எதிரி

இலங்கையில் இன்று அரசியல், பொருளாதார மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கு அப்பால், மக்கள் மத்தியில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை  நம்பிக்கையை கட்டியெழுப்பலாகும். முக்கிய பொது எதிரி நம்பிக்கையீனம் என்பது இலங்கை மக்கள் மத்தியில் இருந்து களையப்படவேண்டிய முக்கிய பொது எதிரியாகவே இருந்து வருகிறது. இலங்கை நாடு, வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நாளில் இருந்து நம்பிக்கையீனம் என்பது மக்கள் மத்தியில் வியாபித்துள்ள நோயாகவே கருதப்படுகிறது. வெளிநாட்டவர்கள், இலங்கையை ஆண்டபோது, அவர்கள் மீது இலங்கையர்களுக்கு நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கலாம் அதேபோன்று அவர்களுக்கும் இலங்கையர்கள் … Read more