ரூ.1.4 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை.. அசத்தும் ஐஐஐடி மாணவர்..!

கொரோனா தொற்று காரணத்தால் இந்தியாவின் முன்னணி கல்லூரிகளில் இருந்து மாணவர்களைத் தேர்வு செய்யமுடியாமல் தவித்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது தங்க வேட்டையாக இந்திய மாணவர்களை வியப்பு அளிக்கும் சம்பளத்தில் பணியில் அமர்த்தி வருகிறது. இந்நிலையில் ஐஐஐடி அலகாபாத் கல்லூரி மாணவர் ஒருவருக்குக் கூகுள் நிறுவனம் அதிரடியாக 1.4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளது. இந்தியாவில் இனி அதற்கு பிரச்சனையே இருக்காது.. ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவை எதிர்நோக்கும் அரசு! ஐஐஐடி அலகாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் … Read more

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய விஐடி… 163 பேருக்கு பாதிப்பு – அமைச்சர் மா.சு முக்கிய தகவல்

சென்னையில் கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுவருகிறது. ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகத்தை தொடர்ந்து சென்னை விஐடி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. இங்கு மட்டும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. விஐடி பல்கலைகழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான வடமாநில மாணவர்களும் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து, பரிசோதனை நடத்தப்பட்டது. தினந்தோறும், தொற்றால் … Read more

நினைத்து நினைத்து பார்த்தால்…, 'உயிரின் உயிரே'…, 7ஜி முதல் லெஜண்ட் வரை கேகே-வின் ஹிட் பாடல்கள்.!

இந்திய திரையுலகின் பிரபல பாடகர்களில் ஒருவரான கேகே-வின் திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட பல இந்திய மொழி படங்களின் பாடல்களைப் பாடியுள்ள கேகே., மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள கேகே-வின் தமிழ் பாடல்கள் சிலவற்றை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அதை கேகே தான் பாடினாரா என்று உங்களுக்கு … Read more

பிரதமர் காப்பீட்டுக்கான பிரீமியம் உயர்வு: காரணம் என்ன தெரியுமா?

உண்ணும் உணவு பொருட்களிலிருந்து, மனிதன் அன்றாட பயன்படுத்தும் பொருட்களின் விலை வரை அனைத்தும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் காப்பீடு திட்டத்திற்கும் பிரிமியம் தொகையை உயர்த்தி உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ மற்றும் ‘பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா’ ஆகிய இரண்டு காப்பீடு திட்டங்களை நரேந்திர மோடி முதன் முதலாக பிரதமராக பதவியேற்ற பின் கொண்டு வந்தார். இந்த இரண்டு காப்பீடு திட்டமும் … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்த 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களின் பரிசீலனை தமிழகச் சட்டப்பேரவைச் செயல் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது திமுகவின் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், அதிமுகவின் சி.வி.சண்முகம், தர்மர், காங்கிரசின் ப.சிதம்பரம் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் அன்று … Read more

“திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழக பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது?” – கே.எஸ்.அழகிரி

சென்னை: “பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவின் எட்டாண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கியிருக்கும் ரூபாய் 85 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு … Read more

கோவில் அருகே மது விற்பனைக்கு தடை – கவலையில் மதுப்பிரியர்கள்!

உத்தர பிரதேச மாநிலத்தில், அயோத்தி, மதுரா ஆகிய இடங்களில், கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில், மதுபான விற்பனைக்கு அதிரடியாக தடை விதித்து, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அயோத்தியில், ராமர் கோவிலின் கருவறைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினாா். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி மற்றும் மதுரா கோவில்களை சுற்றி உள்ள பகுதிகளில் … Read more

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை! அபாய கட்டத்தில் சிறுவர்கள்

அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு  சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.  இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக,  அவர் குறிப்பிட்டுள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு  கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நோய்க்கான அறிகுறிகள் காட்டியதாகவும், … Read more

பாகிஸ்தானில் நெய், சமையல் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு..!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் மற்றும் நெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 213 ரூபாய் உயர்ந்து 605 ரூபாய்க்கும், நெய் விலை கிலோவுக்கு 208 ரூபாய் உயர்ந்து 555 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  Source link

மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் 1,40,885 கோடி ரூபாய் வருவாய்-மத்திய நிதியமைச்சகம்

மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 885 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 44 விழுக்காடு அதிகமாகும். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களும் தொடர்ந்து ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வருவாய் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபின் வரி வருவாயில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்னும் இலக்கைத் தாண்டியிருப்பது … Read more