Giant Plant: உலகின் மிகப்பெரிய தாவரம்: 200 கிமீ தொலைவில் வளர்ந்த ராட்சச செடி

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் ஷார்க் விரிகுடாவில் ‘பூமியின் மிகப்பெரிய தாவரம்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அபூர்வமான தாவரம், 200 சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் பூமியின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் விஞ்ஞானிகள், சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் அது விரிந்துள்ளதாக ஆச்சரியப்படுகின்ரனர். இந்த ராட்சதத் தாவரம், Posidonia australis இனத்தைச் சேர்ந்தது. இது ஃபைபர்-பால் தாவரம் அல்லது ரிப்பன் (fibre-ball weed or ribbon weed) என்றும் அழைக்கப்படுகிறது. … Read more

நகை வியாபாரியை சுற்றி வளைத்த சீருடை ஆசாமிகள்; ரூ 5 கிலோ நகை மாயம்: தஞ்சை மர்மம்!

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.14 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்தவர் மணி (52). நகை மொத்த வியாபாரி. இவர் சென்னையிலிருந்து தஞ்சையில் உள்ள நகைக் கடைகளுக்கு நகைகளை கொண்டு வந்து விற்பது வழக்கம். அந்த … Read more

சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்.. சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.!

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியை சசிகலா மேற்கொண்டுவரும் நிலையில், அவரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது என்றும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது என்ன சமீபத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் தான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது என்று சசிகலா தெரிவித்திருந்தார். … Read more

பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து; ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை – அதிர வைக்கும் திருச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியிருக்கிறார். திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே மாணவி வந்தபோது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர் கத்தியை எடுத்து மாணவியை உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கி சரிந்த அந்த மாணவியை … Read more

பெண் தூக்கிட்டு தற்கொலை.. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மருமகனின் மீது பெண்ணின் தாயார் புகார்..!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலக் கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் தனியார் கல்லூரியின் துறை முதல்வரான வெங்கடேஷ் என்பவரது மனைவி லாவன்யா, கருத்து வேறுபாடு காரணமாக 2 பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் வெங்கடேஷின் பெற்றோர் அவரை சாமாதானப்படுத்தி அழைத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுரை, காரைக்கால் ஆகிய மாநிலங்களைல் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய … Read more

கொழும்பில் பதிவாகியுள்ள தங்கத்தின் விலை

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறியளவான மாற்றங்களே பதிவாகி வருகின்றன. செட்டியார் தெருவில் தங்க நிலவரம் இன்றைய தினம் கொழும்பு – செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் இலங்கையில் நேற்று முன் தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 189,700 ரூபாவாகவும், 2224 … Read more

உலகின் மிகக் காரமான மிளகாய்களைத் தின்று கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

அமெரிக்காவில், உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கிரெக் ஃபோஸ்டர், உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் மூன்றை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாம் உணவில் எடுத்து கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் (SHU) என்ற அலகில் மதிப்பிடுவார்கள். அதன் படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 … Read more

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 இலகு வகை ஹெலிகாப்டர்.. இந்திய கடற்படையின் அந்தமான் படையணியில் சேர்க்கப்பட்டது..!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 இலகு வகையைச் சேர்ந்த இரண்டாவது ஹெலிகாப்டர் இந்திய கடற்படையின் அந்தமான் படையணியில் சேர்க்கப்பட்டது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த ஏஎல்எச் எம்கே 3 இலகு வகை முதல் ஹெலிகாப்டர் ஜனவரி மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இன்று போர்ட் பிளேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டாவது ஹெலிகாப்டரை லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் கடற்படைப் பணியில் சேர்த்தார்.  Source link

பிரித்தானியாவில் வெற்றி கொண்டாட்டம்.. கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல்! கோமாவுக்கு சென்ற பரிதாபம்

பிரித்தானியாவின் கிளப் ஒன்றுக்கு வெளியே, வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமலோ, வயது 20. இவர் நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப்பில் விளையாடி வந்தார். இந்த நிலையில், பிரித்தானியாவின் பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு, சமீபத்தில் முடிந்த போட்டியில் வெற்றி பெற்றதற்காக வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அடையாளம் தெரியாத நபர் … Read more