சஞ்சய் ராவத்திற்கு இறுகும் பிடி – காலையிலேயே குட் மார்னிங் சொன்ன அமலாக்க துறை!

சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 1,034 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத் துறை முன்பு சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. … Read more

TikTok: வருகிறது டிக்டாக் மியூசிக்; அழுத்தத்தை தாங்குமா ஸ்பாடிஃபை?

TikTok Music App: ஸ்பாடிஃபை மியூசிக் தளத்துடன் நேரடி போட்டியில் இறங்க டிக்டாக் தயாராகிவிட்டது. குறும் காணொளிகளை பகிரும் தளமாக வலம்வரும் டிக்டாக் பயன்பாட்டின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’, புதிதாக ‘டிக்டாக் மியூசிக்’ எனும் பெயரை பதிவு செய்துள்ளது. உலகளவில் அதிக பயனர்களை கொண்டிருக்கும் டிக்டாக் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, சந்தையில் உலாவி வரும் ஸ்பாடிஃபை, அமேசான் மியூசிக் போன்ற ஆடியோ ஸ்டிரீமிங் பயன்பாடுகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்டாக் மியூசிக் … Read more

காமென்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: காமென்வெல்த் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மீராபாய் சானு, பிந்த்யாராணி தேவி, சங்கத் மகாதேவ் சர்க்கார் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு ஒன்றிய அரசு விருது: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: நாடு  முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்தை அனுப்புவோருக்கு ஒன்றிய அரசு விருது வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இமாச்சலம் தொடங்கி உத்தராகண்ட், மபி., சத்தீஸ்கரில் அடுத்தடுத்து நடைபெறும் திருவிழாக்களை பட்டியலிட்டு மோடி பேசியுள்ளார். இந்தியாவில் பொம்மை தயாரிப்பு தொடர்பான படங்களை தான் பதிவேற்றும் செய்துள்ளதாக வானொலியில் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் பொம்மை தயாரிக்கும் தொழிலில் புதிய புதிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

திருட்டு பைக்கில் ஆடுகளை திருட முயற்சி… கையும் களவுமாக பொதுமக்களிடம் சிக்கிய நபர்கள்!

திருவாரூர் அருகே திருட்டு பைக்கில் ஆடு திருடிய இரண்டு நபர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருவாரூர் அருகே தப்பலாம்புலியூர் கடைவீதியில், கடந்த வாரம் அதே ஊராட்சிக்குட்பட இலங்கைசேரியை சேர்ந்த அன்புதாஸ் என்பவரது இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று தப்பலாம்புலியூர் கடைவீதி வழியாக காணாமல் போன இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றுள்ளனர். அப்போது வண்டியின் … Read more

ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க 'ஆபரேஷன் தாமரை ப்ளான்'- காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

ஜார்க்கண்டில் தங்கள் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ சதித் திட்டத்தை பாஜக மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் கோடிக்கணக்கான பணத்துடன் ஒரு கார் சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்று இரவு ஹவுரா நெடுஞ்சாலையில் ஒரு காரை மடக்கி … Read more

டாக்டர் அம்பேத்கர் வளர்ச்சி கழகம்பணிகளை விரைவுபடுத்த உத்தரவு| Dinamalar

பெங்களூரு : டாக்டர் அம்பேத்கர் வளர்ச்சி கழகத்தில், சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவுபடுத்தினார்.பெங்களூரு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா சிக்ககோபுரத்தில் உள்ள டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி கழகத்திற்கு நேற்று காலை சென்ற சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகள், ஊழியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார்.சமூக நலத்துறையின் பல வளர்ச்சி பணி செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்து, அதை மேலும் விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.’நில உரிமை … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பு..இனி ஈஸியா ஆயுள் சான்று பெறலாம்.. !

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், அவ்வப்போது ஏதேனும் அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. முன்னதாக ஓய்வூதியத்தினை பெற ஓய்வூதியதார்கள் வீட்டில் இருந்தே கூட ஆயுள் சான்றிதழை கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதனை மிக எளிதாக பெறும் வகையில் வழிவகையும் அஞ்சலத்தில் செய்யப்பட்டது. அவர்கள் வீடு தேடி சென்று சேவைகளை வழங்கும் அளவுக்கு சேவைகள் மாற்றப்பட்டன. பிஎப் … Read more