மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு 25,500 கன அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு 23,000 கன அடியில் இருந்து 25,500 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி, 16 கண் பாலம் வழியாக 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

5ம் நாள் ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி விற்பனை

புதுடெல்லி:  இந்தியாவில் இந்தாண்டு செப்டம்பரில் இருந்து 5ஜி அலைக்கற்றை சேவையை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏலம் கடந்த செவ்வாய் முதல் நடைபெற்று வருகிறது. நேற்றும் 5வது நாளாக ஏலம் நடைபெற்றது. நேற்று முன்தினம் ரூ.1.49,855 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன்மூலம், 71 சதவீத அலைக்கற்றை விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்றும் 5ம் நாளாக ஏலம் தொடர்ந்து. இதில், ரூ.1,49,966 கோடிக்கு ஏலத்தொகை உயர்ந்தது. இன்றும் ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ … Read more

`குரங்கு அம்மை பற்றி வெளியான செய்தி உண்மையா இல்லையா?’- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

நேற்று தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டதாக வந்த செய்தி உண்மை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கருணாநிதி 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 7ஆம் தேதி, கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகே அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பலர் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இந்நிகழ்வுக்கு பின்னர் செய்திகளிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வரும் … Read more

ஆக.,1 முதல் மதுபானங்களுக்கு பற்றாக்குறை.. 468 மதுக்கடைகள் மூடும் சூழல்.. எங்கு தெரியுமா?

புதிய மதுபானக் கொள்கையை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் நாளை ஆகஸ்ட் 1 முதல் மதுபானத்திற்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுக்கொள்கையை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி சில்லறை மதுக்கடைகளை அரசுக்கு பதில் தனியார் நடத்தும் என்றும், அதற்கான உரிமத்தையும் வழங்கி அறிவித்திருந்தது. அதன்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மதுபானங்களை விநியோகிக்க திருத்தப்பட்ட கலால் விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த புதிய மதுக்கொள்கை இந்த நடப்பாண்டு … Read more

ராய்ச்சூரில் ரயில் நிலையத்தில்லிப்ட், எஸ்கலேட்டர் அமைகிறது| Dinamalar

ராய்ச்சூர் : பயணியரின் வசதிக்காக, ராய்ச்சூர் ரயில் நிலையத்தில், ‘லிப்ட், எஸ்கலேட்டர்’ அமைக்க ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும்.ராய்ச்சூர் ரயில் நிலையம், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் பழைய ரயில் நிலையங்களில், இதுவும் ஒன்றாகும். இங்கு மூன்று பிளாட்பாரம்கள் உள்ளன. தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, ராய்ச்சூர் வழியாக ரயில்கள் செல்கிறது. பெங்களூரு, ஹூப்பள்ளி, ஹைதராபாத், மும்பை வரை, இந்த பாதை வழியாக ரயில்கள் இயங்குகின்றன.கூட்ஸ் ரயில்களும் இயங்குகின்றன. … Read more

“காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது!"- நெகிழ்ந்த ஸ்டாலின்

கேரளாவில் மனோரமா நியூஸ் கான்க்ளோவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேசினார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல, கேரள முதல்வர் காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் முதலமைச்சராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் வேறொரு கட்சி … Read more

பள்ளிகளுக்கும் தரக் கட்டுப்பாடு, அங்கீகார முறை அவசியம் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்

சென்னை: உயர்கல்வி நிறுவனங்கள்போல, பள்ளிகளுக்கும் தரக் கட்டுப்பாடு, அங்கீகார முறை அவசியம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தேசிய கல்வி மற்றும் பயிற்சிக்கான அங்கீகார வாரியம் (என்ஏபிஇடி), இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பு ஆகியவை சார்பில், பள்ளிகளுக்கு தரக் கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த மாநாடு சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு … Read more

அழுக்கு படுக்கையில் படுக்க வைத்த பஞ்சாப் அமைச்சர் – மருத்துவ பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

சண்டிகர்: அழுக்கான படுக்கையில் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை படுக்க வைத்த பஞ்சாப் மாநில அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜாவுக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. அதே நேரத்தில் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சேத்தன்சிங் ஜோரம்ஜா. இவர் நேற்றுமுன்தினம் சண்டிகர் அருகிலுள்ளஃபரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த படுக்கைகள் சுகாதாரமற்றவையாகவும், சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் துணைவேந்தர் ராஜ்பகதூரிடம், அமைச்சர் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து துணைவேந்தர் … Read more