உலகளவில் 58.14 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.18 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 55.13 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,418,666 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,418,666 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 581,440,607 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 551,373,232 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,310 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அழுக்கு படுக்கையில் நீங்கள் படுப்பீர்களா? துணைவேந்தரை நோகடித்த அமைச்சர்

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பரித்கோட்டில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் ஜூரமஜ்ரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளுக்காக படுக்கைகள் மிகவும் அழுக்காக இருந்ததை கண்டு கோபமடைந்த அவர், ‘ஏன் இவ்வளவு அழுக்காக இருக்கின்றன?’ துணை வேந்தர் ராஜ் பகதூரிடம் (71) கேட்டார். அதற்கு அவர் அளித்த பதிலால் திருப்தி அடையாத மஜ்ரா, ‘இதுபோன்ற படுக்கையில் நீங்கள் படுப்பீர்களா?’ என்று … Read more

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்ததாக ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

வேலூர்/ஆம்பூர்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்ததாக, ஆம்பூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் மிர் அனாஸ் அலி (22). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு இவர் ஆதரவளித்து வருவதாகக்கூறி, … Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது – அதிபர் ரணிலுக்கு குடியரசு தலைவர் கடிதம்

புதுடெல்லி: இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது என இலங்கை அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இரு நாடுகள் இடையேயான சுமுக உறவு மேலும் வலுப்பட உங்கள் தலைமை புதிய உத்வேகம் அளிக்கிறது. உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து … Read more

ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் நிதியுதவி பெற்ற பிரித்தானிய இளவரசர்: வெளிவரும் பகீர் தகவல்

தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் சார்லஸ் 1 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை பெற்றதாக அதிரவகைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், பக்கர் பின்லேடனிடம் இருந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றார் என குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர் இந்த பக்கர் பின்லேடன். இளவரசர் சார்லஸ் நன்கொடை பெற்ற விவகாரத்தில் ஒசாமாவின் இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரரான ஷபீக் … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று காலை நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்ததை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் வேகமாக பரவுகிறது பெரியம்மை: 1,200 ஆடு, மாடுகள் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 1,200 கால்நடைகள் பெரியம்மை நோயால் இறந்துள்ளன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதித்துள்ளன. ஜோத்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 254 கால்நடைகள் பலியாகி உள்ளன. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கால்நடைகளில் தொற்று வேகமாக பரவினால், உயிரிழப்பு ஏற்படுகிறது. தொற்று வேகமாக பரவி வருவதால், மாநிலம் முழுவதும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நோய்க்கு சிகிச்சையோ, தடுப்பூசியோ கிடையாது. ஆனால், மற்ற மருந்துகளை … Read more

ஆசியாவின் பணக்கார பெண்; இந்திய தொழிலதிபர் முதலிடம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ஆசிய பணக்கார பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் சாவித்ரி ஜிண்டால் முதலிடம் பெற்றுள்ளார். ஆசிய பணக்கார பெண்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், இந்தியாவின் ஜிண்டால் குழும தலைவர் சாவித்ரி ஜிண்டால்,72, முதலிடம் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 89 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த சீனாவின் யாங் ஹூயன் மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளார். இரண்டாம் இடத்தை சீனாவை … Read more

அனைத்துக் கட்சி ஆலோசனை: இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இரு தரப்புக்கும் அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்

வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இந்த கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர்கள் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி (நாளை மறுநாள்) அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்கும் பணி தொடர்பான ஆலோசனை நடைபெற … Read more