காளையிடமிருந்து இளைஞரைக் காப்பாற்ற துணிச்சலாக பாய்ந்த இந்திய வம்சாவளி MLA… பரபரப்பாக பேசப்படும் ஒரு வீடியோ

வீரத்தமிழ்ப்பெண் ஒருத்தி முறத்தால் புலியை விரட்டிய கதையை நம்மில் பலரும் கேட்டிருக்கலாம்… அதேபோன்ற ஒரு துணிச்சலைக் காட்டியிருக்கிறார் இந்திய வம்சாவளியினரான கனடா MLA ஒருவர்! ஆம், ஆல்பர்ட்டா MLAவான லீலா அஹீர், முரட்டுக்காளைகளுக்கு முன் ஓடும் ஒரு வீர விளையாட்டைக் காணச் சென்றிருக்கிறார். அப்போது இளைஞர் ஒருவரை ஒரு முரட்டுக்காளை முட்டித் தள்ளியிருக்கிறது. தொடர்ந்து அவரை அந்தக் காளைப் பந்தாட முயல, சற்றும் யோசிக்காமல் மைதானத்துக்குள் குதித்துள்ளார் லீலா. அவர் அந்தக் காளையின் கொம்பைப் பிடித்து அதைத் … Read more

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை

திருச்சி: தமிழ்நாட்டில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில்,  காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய பரமத்திவேலுர் பகுதியில் உள்ள ஊர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நாளை ஆடிப்பெருக்கு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின்போது ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புதுமணத் தம்பதிகள்,  சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்த … Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்தது. நீலகிரி, கோவையில் நாளை மறுநாளும் அதிகனமழை தொடர வாய்ப்பு என தெரிவித்துள்ளது.   

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி; இந்தியாவில் பாதிப்பு 7-ஆக உயர்வு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 30 வயதான இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை உறுதியான இளைஞருக்கு மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட வலிப்பு – கூழ் காய்ச்சும் அண்டாவில் விழுந்த இளைஞர் பலி

மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும் பணியில் இருந்தவருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக சூடான அண்டாவில் விழுந்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 29 ஆம் தேதி ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூல் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது கூல் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியைச் சேர்த்த முத்துக்குமார் (எ) … Read more

கனிமொழி எம்பி Vs அமைச்சர் நிர்மலா சீதாராமன்- நாடாளுமன்ற காரசார விவாதத்தின் பின்னணி இதுதான்

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வு ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டினார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பதிலளித்தார். காரசார விவாதமாக இது அமைந்திருந்தது. அதனொரு சிறு பகுதி இங்கே: எம்.பி. கனிமொழி, மத்திய அமைச்சரவையை நோக்கி எழுப்பிய கேள்விகள்: … Read more

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. … Read more

மீண்டும் அம்பானி அதானி போட்டி.. இந்த முறை போட்டி இன்னும் அதிகம்.. ஏன் தெரியுமா?

நாட்டின் இரு பெரும் பில்லியனர்களான முகேஷ் அம்பானியும், கெளதம் அதானியும், எதிர்கால வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகளில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்து வருகின்றனர். புது புது திட்டங்களை அறிவித்து வருகின்றனர். பல நிறுவனங்களை கையகப்படுத்தியும் வருகின்றனர். யார் முதலிடம் என்ற கடும் போட்டியே அம்பானிக்கும் அதானிக்கும் இடையில் நிலவி வருகின்றது. சமீபத்திய காலமாக அம்பானியின் சொத்து மதிப்பினை காட்டிலும், அதானியின் சொத்து மதிப்பானது வேகமாக அதிகரித்து வருகின்றது. இன்று சர்வதேச அளவில் 4வது … Read more

பிரபஞ்சத்தின் அழகு கிரகம் செவ்வாய்: சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் படத்தை வெளியிட்ட நாசா

புதுடெல்லி: பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டறிவது அசாத்தியமானது என்றாலும் அதை சாத்தியமாக்கும் முயற்சிகளில் விண்வெளி ஆய்வுகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக நாசா பல்வேறு முன்னெடுப்புகளை செய்கிறது. அதில் இருந்து பெறப்படும் சில அதிசயமான மற்றும் வித்தியாசமான முயற்சிகளை சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடுகிறது நாசா. நாசா வெளிப்படுத்தும் பிரபஞ்சத்தின் ரகசியங்கள் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது என்று சொன்னாலும், பல ஆகிய காட்சிகளும் காணக் கிடைக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீல நிற கோடுகள் இருக்கும் ஒரு அழகான காட்சியை … Read more

தக்காளி சாறு, வேப்ப இலை விழுது.. உடல் துர்நாற்றம் போக்க வீட்டு வைத்தியம்

உடல் துர்நாற்றம் என்பது பலர் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனையாகும், மேலும் கோடை காலத்தில் கூடுதல் வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. அதிக வியர்வை சுரப்பவர்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர், அதே நேரத்தில் சங்கடமாகவும் உணர்கிறார்கள். வியர்வை என்பது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கையான செயல்முறையாகும். ஆனாலும் கூட, வியர்வை மணமற்றது தான், உடலில் ஏற்படும் பாக்டீரியா வளர்ச்சி தான் இந்த துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. சந்தையில் பல பாடி-டால்க் மற்றும் டியோடரண்டுகள் உள்ளன … Read more